Home Blog Page 3533

முத்திரைக்குள் மறைந்திருக்கும் பன்மைத்துவ வாழ்வும் – வரலாறும்!

எழுத்து – கலாவர்ஷ்னி கனகரட்ணம்

”முத்திரைகள் என்பது முற்றிலும் அரசியல் கருத்தியலாகும். இதனை நாங்கள் முழுமையாக ஆராய்ந்தால் எமது முழு வரலாற்றையும் அறிந்துகொள்ள முடியும். அதன் பிரகாரம் மனிதர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்’ என்கின்றார் நிரோஷன பீரிஸ்.

பொழுதுபோக்காக ஆரம்பித்த முத்திரை சேகரிப்பில் கொண்ட நாட்டம், பின்னாளில் அவற்றிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அவை எவ்வாறு எமது கலை, கலாசாரம், வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ளன என்பதை கற்று அதனை இன்று ஏனையோருக்கு கற்பித்து வருகின்றார் நிரோஷன பீரிஸ்.

‘கியவன முத்தர’ (முத்திரைகளை படித்தல்) என்ற அமைப்பையும் நிறுவி அதனூடாக இப்பணிகளை முன்னெடுக்கின்றார். முத்திரையின் ஊடாக சமய, சமூக, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்க்கை முறை மட்டுமன்றி நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தலாம் என கூறும் நிரோஷன, அதற்கான பணிகளை தற்போது நூலக மட்டத்தில் முன்னெடுப்பதாக குறிப்பிட்டார். அத்தோடு, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றார்.

‘எமது நாட்டின் ஆரம்ப கால முத்திரைகளை பார்த்தால் இலங்கையின் பெயர் சிலோன் என்பதிலிருந்து ஸ்ரீலங்கா என மாற்றியமை, அரசியல் மாற்றம் என சகல விடயங்களையும் முத்திரைகள் பிரதிபலிக்கின்றன.

1992-1993 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முத்திரையில் ளுசi டுயமெய என்பது ளூசi டுயமெய என அச்சிடப்பட்டது. சுமார் 40 முத்திரைகள் இவ்வாறு அச்சிடப்பட்டன. இதனை நீங்கள் முத்திரையை தவிர வேறு எங்கும் காண முடியாது. வர்த்தமானியில்கூட இவ்விடயம் இல்லை. அந்தளவு வரலாற்று பிரசித்திபெற்ற பொக்கிஷமாக முத்திரைகள் காணப்படுகின்றன.

சில முத்திரைகளில் வருடங்கள், பெயர்கள் இல்லை. அவற்றை நான் புத்தகங்கள், இணையங்கள் போன்றவற்றில் தேடினேன். சிறிய முத்திரைகளை பெரிதாக்கி பார்த்தபோது அதில் உள்ள விடயங்களை நாம் நன்கறிந்துகொள்ளலாம். இந்த சிறிய முத்திரையை ஆராய்ந்து ஆராய்ந்து செல்லும்போது, பல விடயங்கள் காணப்பட்டன. குயின் விக்ரோரியா, ஆறுமுகநாவலர், சித்திலெப்பை, பொன். அருணாச்சலாம் ஆகியோரை தேசிய வீரர்களாக கருதப்பட்டுள்ளனர். இனம் மொழி பேததத்தை கடந்து அவர்கள் எமது நாட்டிற்காக உழைத்துள்ளனர். ஆனால், அவர்களை எத்தனை பேர் அறிவார்கள் என்பதே சந்தேகம்.

உதாரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு முத்திரை வெளியிடப்பட்டது. இப்போது இந்த முத்திரையை வைத்துக்கொண்டு பேராதனை பலகலைக்கழக வரலாற்றை தேட வேண்டும். இலங்கையின் முதல் பல்கலைக்கழகமான இலங்கை பல்கலைக்கழகத்தை (பின்னர் பேராதனை பல்கலைக்கழகமாக மாறியது) நிறுவுவதற்கு இலங்கை பல்கலைக்கழக சங்கம் முன்னோடியாக காணப்பட்டது.

இதற்கு சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் ஜேம்ஸ் பீரஸ் மற்றும் சேர் மார்க்கஸ் பெர்ணான்டோ ஆகியோர் வழிகாட்டியாக செயற்பட்டனர். அதன் பின்னர் அதனை எங்கு அமைப்பதென ஒரு சிக்கல் ஏற்பட்டது. கொழும்பு புல்லர்ஸ் வீதியில் அமைப்பதற்கு அப்போதைய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போதைய பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் ஆளுநரான ஹூக் க்ளிஃபோர்ட், நீதியரசர் எம். டி. அக்பர் தலைமையில் குழுவொன்றை நியமித்தார். இக்கதை இப்படியே நீண்டு செல்கின்றது. இந்த ஒரு சிறிய கதையில் பார்த்தால் தமிழ், சிங்களம், முஸ்லிம் இனத்தவர்கள், பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மதத்தவர்கள் அனைவரும் எமது நாட்டின் ஆணிவேரான கல்வி கட்டமைப்பை உருவாக்க பாடுபட்டுள்ளனர்.

சாதாரணமாக ஒரு முத்திரையை பார்த்தால் சிலவேளைகளில் எதுவும் விளங்காது. டி.எஸ்.சேனாநாயக்க பற்றி ஒரு முத்திரை உள்ளது. இப்போது இணையத்தில் அவர் பற்றி அறியலாம். நகர மண்டப பகுதியில் அவரது சிலையுண்டு. அதற்கு கீழ் அவர் பற்றிய சிறு குறிப்பு குறிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களிடம் கேட்கலாம். நூலகங்களில் புத்தகங்களை தேடிப் படிக்கலாம். இப்படித்தான் தேட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு முத்திரைக்கும் பின்னால் பல கதைகள் உள்ளன. முத்திரையில் சொல்லப்படாத பல கதைகளையும் நாம் அறிந்துகொள்ளலாம். அதனை ஆராய்ந்து படிக்கும்போது எம்மில் ஒரு மாற்றம் ஏற்படுவதை மறுக்க முடியாது’ என்றார்.

இந்த முத்திரைகள் மூலமாக எமது நாட்டின் கலாசாரம் உள்ளிட்ட விடயங்களை வெளிநாட்டவர்கள் அறிந்துகொள்ள முடியுமா என்று கேட்டோம்.

”நிச்சயமாக, வெசாக், தைப்பொங்கல், ரமழான், கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள், கொடிகள், வாழ்வியல் போன்ற விடயங்கள் முத்திரைகளில் அச்சிடப்பட்டன. வணக்கஸ்தலங்கள் அச்சிடப்பட்டன. கதிர்காம கந்தன், காவடியாட்டம் என்பன அச்சிடப்பட்டன. மதத் தலைவர்கள் அச்சிடப்பட்டனர். அருக்கம்பே, பாசிக்குடா போன்ற பிரசித்தி பெற்ற இடங்கள் அச்சிடப்பட்டன.

விளையாட்டுக்கள் அச்சிடப்பட்டன. இவற்றை பார்ப்பது மட்டுமன்றி இதனை ஆழமாக வாசிக்கும்போது எமது வரலாறு, நாம் ஒன்றித்து வாழ்ந்த விதம், வணக்கஸ்தலங்கள் என சகல விடயங்களையும் அறிந்துகொள்ளலாம். எமது நாட்டிலுள்ளவர்கள் வெளிநாட்டு முத்திரைகளை சேகரிப்பது போல வெளிநாட்டவர்களும் எமது நாட்டின் முத்திரைகளை சேகரிக்கின்றனர்.

இன்னொரு உதாரணத்தைக் கூறினால், 1969ஆம் ஆண்டில் பாடசாலை பிள்ளைகள் நெற்கதிருடன் காணப்படும் முத்திரை வெளியிடப்பட்டது. இதனை நாம் வாசிக்கும்போது பல விடயங்கள் தெரியவரும். டட்லி சேனாநாயக்கவின் ஆட்சியில் பாடசாலை பாடத்திட்டத்தில் விவசாயத்திற்கென ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. அந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் வயலுக்கு சென்று வேலைசெய்ய வேண்டும். மாணவர்கள் அந்த பாடத்திட்டத்தில் விவசாயம் செய்தனர். அப்போது யார் ஜனாதிபதி, யார் பிரதமர், யார் கல்வியமைச்சர் என அனைத்து விடயங்களையும் நாம் தேடும்போது ஒரு முழுமையான வரலாற்றுக் கதையை படிக்கலாம்” என்றார்.

இலங்கையில் முத்திரை அச்சடிக்கும் கட்டமைப்பு தொடர்பாக கேட்டபோது முத்திரை ஆலோசனை குழுவே இதுகுறித்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார். சுமார் 8 பேர் அடங்கிய குறித்த குழுவானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதமளவில் முத்திரை அச்சடிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்தை கோருவதாகவும் இதற்கு அனைவரும் தமது திட்டங்களை கையளிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். அதனை ஆராய்ந்து அடுத்த வருடத்திற்கான முத்திரைகள் அச்சடிக்கப்படுகின்றதென நிரோஷன பீரிஸ் தெளிவுபடுத்தினார்.

யுத்தம், ஆட்சிமாற்றம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க காலங்களில் வெளிவரும் முத்திரைகள் எவற்றை பிரதிபலித்தன என்றும் வினவிவோம். எனினும், மிக முக்கியமான தருணங்களைத் தவிர சாதாரணமாக அவ்வாறு முத்திரை வெளியிடுவதில்லை என்றார். காரணம், இந்த வருடத்தில் வெளிவரும் முத்திரைகள் பற்றி கடந்த வருடமே தீர்மானிக்கப்படுவதால் அவ்வாறு இடம்பெறுவதில்லை. யுத்த நிறைவை முன்னிட்டு ஒரு முத்திரை அச்சடிக்கப்பட்ட போதும், அது 2010ஆம் ஆண்டே வெளிவந்தது என்றார்.

எனினும், உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2020ஆம் ஆண்டு 5 முத்திரைகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முத்திரைகளை வாசிப்பதன் ஊடாக எவ்வாறு பன்மைத்துவ தன்மை விளங்கிக்கொள்ளப்படுகிறது? அது எவ்வாறு நல்லிணக்கத்திற்கு உதவுகின்றது என்பதைப் பற்றி கேட்டோம்.

‘ஒவ்வொரு முத்திரைக்கும் பின்னால் ஒரு கதையுண்டு. சாதாரணமாக முத்திரையை பார்க்கும்போது எதுவும் தோன்றாது. அதன் பின்னால் உள்ள கதையை படிப்பதன் ஊடாக மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். உண்மையில் அக்கதைகளை படிக்கும்போது இன மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை பற்றி மக்கள் அறிந்துகொள்வர். அது மக்கள் மனதில் பன்மைத்துவ பண்பை உணரும் மனநிலையை உருவாக்கும். பன்மைத்துவத்தை உணர்த்த முதலில் அதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே முத்திரையுடன் தொடர்புபட்ட கதைகளை படிக்க வேண்டும்.

இன, மத, மொழி பேதமின்றி எமது மக்கள் ஒன்றித்து வாழ்ந்தமைக்கு முத்திரைகள் ஒரு சான்று. சுண்டுக்குழி வித்தியாலயம், ஹாட்லி கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, பொன்னம்பலம் ராமநாதன், அறிஞர் சித்திலெப்பை, தேசிய மீலாதுன் நபி, திருக்குர்ஆன், கலாநிதி என்.எம்.பெரோரா, தமிழ் சிங்கள புத்தாண்டு, உலக சமய தினம் என இவை யாவற்றுக்கும் முத்திரைகள் உண்டு. இதில் உலக சமய தின முத்திரையில் சகல மத இலட்சினைகளும் உள்ளன. எமது நாட்டின் பழங்குடியின மக்கள் பற்றியும் முத்திரைகள் வந்துள்ளன.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்த விவேகானந்தன் செல்வ குமார் ஆனந்தன் என்ற சட்டத்தரணி, உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெருமைக்குரியவர். நீச்சல் வீரரான இவர் 1984ஆம் ஆண்டு ஆங்கில கால்வாயை நீந்திக் கடக்க முயன்றபோது உயிரிழந்தார். இவரது ஞாபகமாக 1999ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒரு முத்திரையை வெளியிட்டது. இவரைப் பற்றி அறிவதற்கு அந்த முத்திரையை படிக்க வேண்டும். இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் மாமியான மானெல் அவர்களை திருமணம் செய்திருந்தார். இந்த விடயம் எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே முத்திரையை படிப்பதன் ஊடாக மக்களின் மனநிலையை மாற்றி அதனூடாக சிறந்த சமூகமொன்றை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேலைசெய்கின்றோம். முதலில் எமது நாட்டின் மக்கள் பற்றியும் மதம் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். எமது மக்களைப் பற்றி, எமது நாட்டை பற்றி, சமயங்களை பற்றிய அறிந்துகொள்ளாமல் புதிதாக நாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. அதுபற்றி அறிந்து மனதளவில் மாற்றம் ஏற்படும்போது சகல விடயங்களும் சாத்தியமானது’ என்றார்.

இதனை ஊக்குவிக்கும் வழி பற்றியும் நிரோஷன் குறிப்பிட்டார். ‘முதலில் முத்திரைகளை சேகரிக்க பழக்க வேண்டும். அதன் பின்னர், அதனை வாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பின்னர் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி கற்பிக்க வேண்டும். பணம் கொடுத்து வாங்காவிட்டால் பரவாயில்லை. கடிதங்களில் வரும் முத்திரைகள், பழைய முத்திரைகள் என்பவற்றை சேகரித்து வகைப்படுத்த வேண்டும். பின்னர், அதுபற்றி நிச்சயமாக தேட ஆரம்பிப்பார்கள். கண்ணால் பார்த்து கற்பதை விட காதால் கேட்டு படிக்க பழகிவிட்டோம்.

தேசிய கீதம் என்றதும் ஆனந்த சமரகோன் நினைவுக்கு வருகின்றார். ஆனால், அவரது முத்திரையை காண்பித்து இவர் யார் என்றால் பெரும்பாலானோருக்கு தெரியாது. காரணம், பெயரை கற்றோமே தவிர முகத்தை பார்க்கவும் இல்லை, தேடவும் இல்லை. வரலாற்றை தனித்தனியாக படிப்பிக்கின்றனர். அதனை விடுத்து ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி கற்பிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் முத்திரை உண்டு. அதேபோன்று நூலகங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்பது நிரோஷனவின் கருத்தாகும்.

எமது நாட்டை பொறுத்தளவில் முத்திரை சேகரிப்பில் தற்போது பெரும்பாலானவர்கள் ஆர்வமின்றி காணப்படுகின்றனர். சிலர் சேகரித்தபோதும், அதன் பின்னால் உள்ள கதைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்றே கூறினர்.

அப்படி முத்திரை சேகரிப்பவர்கள் சிலரிடம் கேட்டபோது, முத்திரைகளை சேரித்து அதனூடாக சில விடயங்களை கற்பிக்க சிறுவர்களுக்கு கற்பிக்கலாம். எமது நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களித்த தேசிய தலைவர்கள் சகல சகல இனம், மதம், மொழி பேதமின்றி உள்ளனர். அவர்கள் பற்றி கற்பிக்கலாம். சிறுவர்கள் முதல் இதனை ஆரம்பிக்க வேண்டும்’ என்றார் சட்டத்தரணி சந்துஷ் பெர்ணான்டோ.

‘எமது நாட்டின் சகல விடயங்களும் எம்மை ஒன்றிணைக்கவே உருவாக்கப்பட்டன. பிரிந்துசெல்வதற்கல்ல. ஆனால், பின்னர் அந்த நிலை மாறிவிட்டது’ என்றார் 82 வயதான முத்திரை சேகரிப்பாளரான லக்ஷ்மணன். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர்.

‘பழைய விடயங்களை மீட்டிப்பார்க்க முத்திரைகள் ஒரு சிறந்த விடயம்;. பாடசாலைகள், வரலாற்று பிரச்சித்தி பெற்ற இடங்கள், சிலரது முகங்கள் என்பவற்றை சில சந்தர்ப்பங்களில் காண முடியாமல் உள்ளது. நான் பல சந்தர்ப்பங்களில் முத்திரைகளை பார்த்து அவற்றை அறிந்துகொண்டேன்’ என சுமார் 5000 முத்திரைகளை சேகரித்து வைத்துள்ள ஆசிரியரான இரத்தினபுரியைச் சேர்ந்த சுதர்ஷன் கூறினார்.

கிடைப்பதற்கரிய முத்திரைகளை சேகரிப்பதில் அலாதியான ஆர்வம் உள்ளதென தெரிவித்த ரந்திமா பெர்ணான்டோ என்ற முத்திரை சேகரிப்பாளர், அதனூடாக புதிய விடயங்களை தேடுவதாகவும் புதிய நபர்களை சந்திப்பதாகவும் குறிப்பிட்டார். இவர், எமது நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் காணப்புடும் முத்திரை சேகரிப்பு தொடர்பான சங்கங்களிலும் உறுப்பினராக உள்ளார். ஒவ்வொரு சமூகத்தையும் பற்றி புரிந்துகொள்ள, முத்திரை வாசிப்பு சிறந்த அம்சம் என இவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முத்திரை சேகரிப்பாளர்களிடம் பொதுவாக உரையாடியபோது பெரும்பாலானவர்கள் இதனை பொழுதுபோக்காக மாத்திரமே செய்கின்றனர் என்ற விடயம் தெளிவாகியது.

முத்திரை சேகரிப்பாளர்கள் 20 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

ஒரு பொழுதுபோக்கு செயன்முறையினூடாக அதுவும் சுவாரஸ்யம் மிக்க ‘முத்திரை சேகரித்தல்’ என்ற பொழுதுபோக்கினுர்டாக பன்மைத்துவ வாழ்வின் உண்மைகளை, பன்மைத்துவ வாழ்வின் அம்சங்களை கற்கமுடியுமெனில் யாருக்கும் நாம் பன்மைத்துவத்தின் பாடத்தை நடத்த தேவையில்லை. பாடசாலை மாணவர்கள் முதல் வயோதிபர்க்ள வரை இந்த பொழுதுபோக்கை கொண்டிருக்கும் நிலையில் ‘முத்திரை வாசித்தல்’ பழக்கத்தை தூண்டிவிட்டாலே போதுமானது.

இலங்கையின் பன்மைத்துவ வாழ்வின் சிறப்புகளையும் நன்மைகைளையும் அடுத்த சந்ததி நன்கே அறிந்துகொள்ளும். ஆனாலும் இதில் கட்சிசார் அரசியல் ஆதாயம் தேடாமல் பன்மைத்துவ சமூகங்களைக்கொண்ட நாடாக இலங்கையை வெளியுலகிற்கு காடடிக்கொண்டே இருக்கவேண்டும். இதற்கு முத்திரை அச்சடிக்கும் நிர்வாகக் குழுவிற்கு பெரும் பங்குண்டு.

அதிரப்போகும் அரசியல் களம் – 21 ஆம் திகதி முக்கிய யோசனை முன்வைப்பு

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் எதிர்வரும் 21 ஆம் திகதி மேற்படி யோசனை சபையில் முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது. அத்துடன் இவ்விவகாரம் தொடர்பில் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், எதிரணி உறுப்பினர்கள் 10 பேரின் குடியுரிமையை பறிப்பதற்கான யோசனைக்கூட அதில் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழு நீதிமன்ற அதிகாரத்தைக்கூட சவாலுக்குட்படுத்தியுள்ளதால் பரிந்துரைகள் அமுலாவதை தடுப்பதற்க சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் எதிரணி மேற்கொண்டுள்ளது.

கடும் மழை – இடிந்து விழுந்தது சுவர்! நோர்வூட்டில் ஐவர் பாதிப்பு

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட இன்வெரி  தோட்டத்தில் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்புமீது சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது. இதன்போதே குறித்த அனர்த்தமும் இடம்பெற்றுள்ளது.

அனர்த்தத்தின்போது தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை.

குடியிருப்பில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக இன்வெறி தோட்ட நிர்வாகத்திற்கு குடியிருப்பாளர்கள் அறிவித்த போதிலும், அது தொடர்பில் தோட்ட நிர்வாகம் கவனத்தில் எடுக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு இன்று (13) நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி சென்று பார்வையிட்டதுடன், இவர்களுக்கு மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வீடுகளை கட்டிக்கொடுக்க ஏற்பாடுகளை செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய அங்காடி வியாபாரிக்கு மறியல்

பசறை நகரில கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டார்.

பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என குறித்த நபருக்கு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அந்நபர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அயலவர்கள் உதவியுடன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபரைஸபசறை பொலிஸார் கைது செய்து.

இந்நிலையில் பதுளை நீதிவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி – பசறை ராமு தனராஜா.

கொரோனா – இலங்கையில் பலி எண்ணிக்கை 600 ஐ தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 70 வயதைக் கடந்தவர்கள்.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.

நடிகர் செந்திலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று

நடிகர் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் ஜோடி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்தார்.

மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

நாம் குழந்தைகள் முன்பு தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

குழந்தைகள் முன்பு கவனாமாக நடந்து கொள்ளுவது அவசியமாகும்.

ஏனெனில் நாம் பேசுவதை பார்த்தும், நாம் நடந்து கொள்வதை பார்த்தும் தான் நமது குழந்தைகளும் அதனை பின்பற்றும்.

அந்தவகையில் குழந்தைகள் முன்பு செய்ய கூடாதா சில செயல்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • வீட்டில் இருக்கும் பெரியவர்களை அன்போடும், மரியாதையுடன் அழைப்பது சிறந்தது.
  • உங்கள் உறவினர்கள் பற்றியோ, அலுவலக சக ஊழியர்கள் பற்றியோ அல்லது அக்கம்பக்கம் இருப்பவர்களின் அறிவுக்குறைவு பற்றியோ, குழந்தைகள் முன் கேலியாகப் பேசிக்கொள்ள கூடாது. ஏனெனில் இதைக் கேட்கும் குழந்தைகளும் சம்பந்தப் பட்டவர்களைப் பார்க்கும்போது உதாசீனம் செய்வார்கள்.
  • திரையில் வரும் நடிகர், நடிகையாக இருந்தாலும் சரி, நம்முடன் நாள்தோறும் தொடர்பிலிருக்கும் சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றி நமக்குள் பேசிக்கொள்ளும்போதும், `அவர் இவர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்துவது சிறந்ததாகும்.
  • ஒருவரின் அறிவுக் குறைபாட்டை, தவறான நடவடிக்கையைப் பற்றி, `அவர்கள் இப்படி நடந்துகொண்டால் சரியாக இருக்கும். இப்படிப் பேசினால் சரியாக இருக்கும்’ என்று அக்கறையுடன் விவாதியுங்கள். அதைக் கேட்கும் குழந்தைகளுக்குப் பிறரின் குறைபாட்டைத் திருத்தும், உதவி செய்து அரவணைக்கும் குணம் உண்டாகும்.
  • காய்கறிக்காரன் , கீரைக்காரி, மீனகாரன் என்றும் அவர்களின் தொழில்சார்ந்து பேசுவதை தவர்க்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்குள்ளும் இந்த எண்ணத்தைக் விதைக்கும். ஆகவே, யாராக இருந்தாலும் நமக்குள் பேசிக்கொள்ளும் போதும் மரியாதையுடன் பேசுவது நல்லது.

ஜனாதிபதி கோட்டாபய ஹிட்லர்போல் ஆட்சிசெய்ய வேண்டும் – இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , ஹிட்டர்போல் செயற்படவேண்டும் என்பதையே அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர் – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மாகாண தேர்தல் வேண்டாம்! முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்து!!

மாகாணசபைத் தேர்தல் மட்டுமல்ல மாகாணசபை முறைமையே வேண்டாம். புத்தாண்டு முடிந்ததும் இதனை உறுதியாக வலியுறுத்துவோம் – என்று அபயராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

” நாட்டில் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. மறுபுறத்தில் எண்ணைய் பிரச்சினையும் உருவெடுத்துள்ளது. நல்லாட்சியின்போது ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்க்கவே புதிய அரசை ஆட்சிபீடமேறவைத்தோம். ஆனால் இன்று நடப்பது என்ன? குறைகளை சுட்டிக்காட்டும் எம்மை விமர்சிக்கின்றனர். ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன.

விமல் வீரவன்ஸ, உதயகம்மன்பில, அபயராம விகாரை உள்ளிட்ட தரப்பினர் இல்லாவிட்டால் மொட்டு கட்சி என ஒன்று உருவாகியிருக்காது. நாம் ஒன்றரை வருடங்கள் பொறுமை காத்தோம். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசு எந்த இடத்தில் உள்ளது என்பது தெளிவாகும்.

மாகாணசபைத் தேர்தல் – முறைமை வேண்டாம். புத்தாண்டுக்கு பின்னர் நாம் பலமடைவோம். அப்போதும் இதற்காக உரத்து குரல் எழுப்புவோம். தோல்வியை நோக்கி பயணிக்கவேண்டுமென்றால் மாகாண தேர்தலை நடத்துமாறு குறிப்பிடுகின்றோம். குறித்த தேர்தல் அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.” – என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...