Home Blog Page 3534

‘வருகிறார் சாணக்கியன் வருகிறார்’ – 17 ஆம் திகதி நுவரெலியாவில் உரை

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது.

முன்னணியின் தலைவர் கலாநிதி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சிறப்புரையாற்றவுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் தனது முகநூல் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“நான் விடை பெறும் காலம் தூரமில்லை” – மனோவின் உருக்கமான பதிவு

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் முகநூல் பதிவு,

“அன்பார்லிமென்டரி லங்வேஜ்” (Unparliamentary Language) என்று பொதுவாக சொல்வார்கள்.

சபையில் பயன்படுத்த “கூடிய, கூடாத” வார்த்தைகள் என்று இருக்கின்றன.
ஒருமுறை இன்று அமைச்சராக இருக்கும் ஒரு இடதுசாரி எம்பி, பிரதமர் ரணிலை மிக மோசமான சிங்கள கெட்ட வார்த்தையில் சபையில் திட்டினார்.

பதிலுக்கு ரணில் தூஷணம் பயன்படுத்தவில்லை. தூஷணம் பேசிய எம்பி யை பார்த்து, “காய்ந்த பூசணிக்காய்” என கிண்டலாக சொன்னார்.

ரணிலிடம் நம்ப முடியாத நகைச்சுவை உணர்வு இருக்கின்றது. என்னிடம் அது எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கின்றது.

“தூஷணம்” என்பது மட்டுமல்ல, “எல்லை மீறிய” வார்த்தை பிரயோகங்களும், ‘அன்பார்லிமென்டரி”தான்.

சமீபத்தில், கொழும்பில் கொரோனாவினால் மூடப்பட்டிருந்த பிரதேச குடும்பங்களுக்கு, ஒரு வாரத்திற்கு 5000/= ரூபா வழங்க வேண்டும் என நான் வாதிட்டபோது,

இன்றைய அமைச்சர் ஒருவர் என்னை “மடையா” (மோடயா) என்று திரும்ப, திரும்ப திட்டினார்.

நான் பதட்டப்படாமல், நான் கூறியதை மாத்திரம் திரும்ப, திரும்ப கூறினேன்.
கடைசியில் மக்களுக்கு அந்த ரூ. 5000/= பெருவாரியாக கொழும்பில் கிடைத்தது.
அச்சந்தர்ப்பத்தில் சபையில் இருந்த எனது நண்பர்கள் என்னையும், அந்த அமைச்சரை நோக்கி கடுமையான வார்த்தை பிரயோகம் செய்யும்படி சொன்னார்கள்.

நான் அப்படி முறைதவறி வார்த்தைகளை பயன்படுத்த மறுத்து விட்டேன்.
சபையில் மட்டுமல்ல, பொதுவாக நான் கண்ணியக்குறைவான வார்த்தைகளை எங்கேயும், சொல்லாலும், எழுத்தாலும் பயன்படுத்துவதில்லை.

பல நூற்றுக்கணக்கான தமிழ், சிங்கள, ஆங்கில நேரலை ஊடக நிகழ்வுகளில் நான் பங்குபற்றியுள்ளேன். அங்கே வாதிடும் போது அடிக்கடி உணர்ச்சிவசப்படுவேன். அதுதான் நிகழ்ச்சியை உயிரூட்டமாக ஆக்கும். ஆனால் வரம்பு மீறிய வார்த்தைகளை எந்த மொழியிலும் நான் பேசியதில்லை.

உண்மையை சொல்லப் போனால் எனக்கு தூஷணம் மற்றும் முறைதவறான தமிழ் வார்த்தைகள் தெரியாது. ஆகவே தனிப்பட்ட உரையாடலிலும்கூட என்னிடமிருந்து தூஷணம் வராது.

நான் என்னை இழந்தது ஒருமுறைதான். அது ஒரு தனியார் ஊடக நிகழ்வில் நடந்தது.
அதுவும், என்னை பற்றி என்ன கூறப்பட்டிருந்தாலும் நான் சிரித்துக்கொண்டே ரணிலை போன்று நகைச்சுவையாக ஏதாவது பதில் கூறியிருப்பேன்.

அன்று, அந்த ஒரு அரசியல்வாதி நிதானம் இழந்து, சமூகத்தை தரந்தாழ்த்தி பேசிய போது, பலமுறை அந்த சொல்லாடலை வாபஸ் வாங்க சொல்லியும் கேட்காததால், அவரை “குளிரவைத்து” அமைதியாக்கினேன். ஆனால் அதுவும்கூட என் மனதை அவ்வப்போது உறுத்தும்.

தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும், அவரை நோக்கி நட்புடன் எப்போதும் நான் இதற்காகவே புன்முறுவல் புரிகிறேன். நான் விடை பெறும் காலம் தூரமில்லை. எனக்கு பின்னாலே வரும் இளையோர் எம்மை பார்த்து படிக்க ஏதாவது இருக்க வேண்டுமே..!

திருகோணமலையில் விபத்து – நால்வர் காயம்!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் மஹதிவுல்வெவ பகுதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.   இன்று மாலை 4.45 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் நொச்சிகுளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கதிரவேல் மனோஷன் (31வயது) , விஜயகுமார் பிரதாப் (20வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.   ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஹட்டனில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலி! பெண்ணொருவருக்கு காயம்!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புகையிரத நிலையத்துக்கு முன்னாலுள்ள மஞ்சள் கோட்டிக்கு அண்மையில் இன்று (12) பிற்பகல்  2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலியானார். காயமடைந்த பெண்ணொருவர் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த குபேரன் கருணாகரன் என்ற 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரே  விபத்தில் பலியாகியுள்ளார்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஜீவனுக்கு எதிரான வடிவேல் சுரேஷ் அணி போர்க்கொடி!

தாய் குலத்தை இழிவு படுத்தும், வகையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆற்றிய உரையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று பதுளை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கூட்டாக சுயமாக தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பதுளைப் பிராந்தியப் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். கார்த்தீஸ்வரன், எம்.பி. லோகநாதன், டி. யோகராஜா ஆகியோர் உரையாற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசும்போது, ‘குட்டி ஆடு கொழுத்தாலும்,வலு வலுப்பு மாறாது என்ற பேச்சுவழக்கு முதுமொழிக்கமைய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆற்றிய உரையானது ஜீரணிக்க முடியாததொன்றாகும். அவர் ஆற்றிய உரை முழு தாய்க்குலத்தையே அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பெண்களை கௌரவப்படுத்தும் மகளிர் தினத்தை கொண்டாடிய அடுத்து வரும் மாத்தில் அப் பெண்களையே அவமானப்படுத்தும் வகையிலும், இழிவுப்படுத்தும் வகையிலும் எமது சமூகத்திற்கு விரும்பியும், விரும்பாமலும் ஏற்படுத்தப்பட்ட தலைவர் என்று தம்மைக் காட்டிக் கொண்டவர் செயற்பட்டிருக்கின்றார். இவ் உரைக்கு நாட்டின் முழு தாய்க்குலமும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியதொன்றாகும். இந்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உரையானது, ஏனைய சமூகங்களும், எமது சமூகப் பெண்களை குறைந்து மதிப்பிட வைத்துள்ளது. ஆகவே, ஜீவன் தொண்டமானின் இச் செயற்பாடுகளுக்கு அவர் மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் அடுத்து வரும் பாராளுமன்ற அமர்விலும் அவர் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்’ என்றார்.

லுணுகலை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கனகசுந்தரி தமதுரையில், ‘ஜீவனுக்கு கிடைக்கப்பெற்ற அனுதாப வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள், மலையகப் பெண்களால் கிடைக்கப்பெற்ற வாக்குகளாகும். இந்நிலையில், அவர் எமது பெண்களுக்கு தகுந்த சன்மானத்தை வழங்கியுள்ளார். இப்புத்தாண்டில் அவர் எமக்கு வழங்கிய இச் சன்மானமே பெரிதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் முயற்சியினால் கிடைக்கப்பெற்ற ஆயிரம் ரூபா தினச் சம்பள உயர்வில், ஜீவனுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே, ஜீவன் ஆத்திரத்தினால் இப்படி பேசியிருக்கின்றார். அவரது இப் பேச்சை என்றுமே மறக்க மாட்டோம். அடுத்து வரும் தேர்தலில், எமது பெண்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.

அவர் தனக்கேற்பட்ட வேலைப்பளுவினால் அப்படி பேசிவிட்டேன் என்று ஜீவன் கூறியிருக்கின்றார். அவரது வேலைப்பளுக்கு, மலையகப் பெண்களை ‘பயிட்’டாக வேண்டும்’ என்றார்.

லுணுகலை பிரதேச சபை எதிர்க்கட்சித்த தலைவர் எம்.பி. லோகநாதன் தமதுரையில், ‘பொறுப்புமிக்கவர்களாக தம்மைக் காட்டிக்கொள்பவர்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளல் வேண்டும். சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.

தமது மூதாதையர்கள் கட்டிக்காத்த, வரலாறு கூறும் மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கமொன்றை பிரதிநிதித்துவம் சய்யும் பொறுப்புமிக்கவர்கள் மகளீரை இழிவுப்படுத்தும் வகையில் உரையாற்றியிருக்கக் கூடாது. தமது வாயிலிருந்து வெளிக்கொணரப்படும் எந்தவொரு சொல்லும் நிதானித்துப் பேச வேண்டும்.

வார்த்தைகள் வெளிவந்த பின்னர் எதுவுமு; செய்ய முடியாது. நாம் எதையும் பேசலாம். மக்கள் அதனைக் கேட்க வேண்டுமென்று இருந்து வரும் நிலைப்பாடு மாற வேண்டும். மக்கள் புத்தி சாதூரியமாக இருக்கின்றனர். சொல்வதற்கெல்லாம் மக்கள் ‘ஆம்’ என்று கூறும் நிலை இன்று இல்லை’ என்றார்.

பசறை பிரதேச சபை உறுப்பினர் டி. யோகராஜா பேசுகையிர், ‘இராஜாங்க அமைச்சர் ஜீவன் ஆற்றிய உரை கண்டிக்கத்தக்கதாகும். இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இம் மன்னிப்பை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே’ என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

புத்தாண்டு பொருள்வாங்க நகருக்கு வரும் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

மலையகத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டினை கொண்டாடுவதற்று ஆயத்தமாகி வருகின்றனர்.

இன்று (12) பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்திருந்தனர்.இவர்களில் பலர் முறையாக முகக்கவசம் அணியாது சமூக இடைவெளிகளை பேணாது இருந்த நபர்களை பொலிஸார் எச்சரித்தனர்.

ஹட்டன் நகரில் பொது மக்களின் பாதுகாப்பு கருதி ஹட்டன் நகரில் அதிகமான பொலிஸார் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிரந்தன.

இவர்கள் பஸ்ஸில் மற்றும் நடைபாதைகளில் செல்லும் பொது மக்கள் முகக் கவசம் முறையாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வலியுறத்தியுடன் சிலர் எச்சரிக்கவும்பட்டனர்.

சித்திரை புத்தாண்டு முன்னிட்டு இன்று நீண்ட இடைவெளிக்கு பின் நடைபாதை வர்த்தகம் மற்றும் புடைவை கடை வர்த்தகம்,மறகரிகடை வர்த்தகம் ஆகியன உட்பட் வர்த்தக நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தன.

சித்திரை புத்தாண்டு காரணமாக தலைநகரங்களிலிருந்தும்,ஏனைய பிரதான நகரங்களிலும் விசேட பஸ் ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.பொது மக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

அதே நேரம் அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அதிகமான கடைகளில் கட்டுப்பாட்டு விலைகளை மீறி வர்த்தகர்கள் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதனை காணக்கூடியதாக இருந்தன.

இது குறித்த சில வர்த்தகரிடம் கேட்ட போது எந்த ஒரு மொத்த விற்பனையாளரும் தங்களுக்கு பொருட்களை குறைத்து கொடுக்கவில்லை என்றும் தாங்கள் தற்போது விற்பனை செய்யும் அதிகமான பொருட்கள் லாபமின்றியே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்;டும் என்பதற்காக மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

அத்தியவசிய பொருட்களின் விலை காரணமாக பொது ஏனைய காலங்களை விட குறைந்தளவு பொருட்களையே கொண்டு செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.

யாழில் மூதாட்டி கொலை – நடுநிசியில் பயங்கரம்!

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

இதன் போது 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள் தனித்து வாழும் வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

முதிய தம்பதியை கட்டி வைத்து, பொருட்கள் இருக்குமிடம் குறித்து சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இக் கொடுர சம்பவத்தில் அல்லாரை றோட் மீசாலையை சேர்ந்த 80 வயதுடைய செல்லையா சிவராசா என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபரை கொலை செய்து விட்டு நகைகளையும் கொள்ளை அடித்துக் கொண்டு திருடர்கள் தப்பிவிட்டார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

பசறையில் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய அங்காடி வியாபாரி கைது!

பசறை நகரில் கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  இதனையடுத்து அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என குறித்த நபருக்கு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அந்நபர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால்   பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அயலவர்கள் உதவியுடன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபரைஸபசறை பொலிஸார் கைது செய்து. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் பசறை ராமு தனராஜா.

பசறை பஸ் விபத்து – சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பசறையில் விபத்துக்குள்ளான பஸ்சின் சாரதி, (இன்று) 12-04-2021ல் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதிபதி சமிந்த கருணாதாச அச்சாரதியை எதிர்வரும் 21ந் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 20ந் திகதி பசறை 13ம் மைல் கல்லருகே இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இவ் விபத்தில் விபத்துக்குள்ளான பஸ்சின் சாரதியும் காயமுற்ற நிலையில், பாதுகாப்புன், விளக்கமறியலில் வைக்கப்பட்டதினால் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துக்குள்ளான பஸ்சின் எதிர்த்திசையில் வந்த லொரிச் சாரதியை நீதிபதி சரீரப் பிணைகளில் விடுவித்திருந்தார்.

பசறை நீதிவான் நீதிமன்றத்தில் 12-04-2021ல் விபத்துக்குள்ளான பஸ் சாரதியை ஆஜர்படுத்திய போதே, நீதிபதி அவரை எதிர்வரும் 21ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

எம். செல்வராஜா, பதுளை

“நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்”

99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ”இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன்.

சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்” என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...