Home Blog Page 3529

‘கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் தீவாக மாறாது’ – அரசு உறுதி

‘கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம்’ ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களால் இலங்கைக்குள் மற்றுமொரு தனி நாடு உருவாகாது – என்று இராஜாங்க அமைச்சர்
ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேறினால் இலங்கை சீனாவின் கொலணியாக மாறிவிடும் எனவும், தனி நாடு உருவாகும் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பு துறைமுக நகர் வேலைத்திட்டம் குறித்து நாம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்களால் இலங்கைக்குள் தனி நாடு நிர்மாணமாகாது. இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், கொழும்பு துறைமுக நகரில் முதலிடும் தரப்புக்கு பொருந்தாது எனக் கூறப்படுவதும் பொய். அவ்வாறு இந்த அரசு செயற்படாது.

அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த பகுதி சீனாவின் தீவாகா மாற்றம் பெறாது. அதேபோல சீனாவுக்கு மட்டும் முதலீடு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இவ்விடயத்தில் நாட்டின் அரசமைப்பு, சட்ட கட்டமைப்பு, சுயாதீனம், ஒருமைப்பாட்டுக்கு எதிராக நாம் செயற்படவில்லை. செயற்படபோவதும் இல்லை.” – என்றார்.

சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை

நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.

நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’. அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக் கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார்.

திரைப்படத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினைக் காண்போம்.

பிறப்பு

“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த சின்னக்கலைவாணர் அவர்கள், பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார்.

அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

திரைப்படத் துறையில் அவரின் பயணம்

1987-ம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாத்துறையில் கால்பதித்த சின்னக் கலைவாணர், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.

‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘டும் டும் டும்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘விசில்’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.

இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை முன்னோடியாக கொண்டு வாழ்ந்தவர் விவேக்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.

அவரின் புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்கள்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு,
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
கோபால்!!! கோபால்!!!
எனக்கு எஸ்.பி-யைத் தெரியும்!…. ஆனா அவருக்கு என்ன தெரியாது.
நான் எஸ்.ஐ-யா இருக்கேன்

விருதுகளும், மரியாதைகளும்

இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.

அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.
2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.
‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார்.
சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். நகைச்சுவையில் கருத்துக்களை மட்டும் வழங்குவதில் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஒரு சில சமூக நலக் குறிக்கோள்களை கடைப்பிடித்து, அதனை செயல்படுத்தியும் வருகிறார்.

குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம். ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு, நகைச்சுவையில் பல சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது.

நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் மலர்க் கண்காட்சி

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மலர்க் கண்காட்சி (17.04.2021) சனிக்கிழமை நுவரெலியா விக்டோரியா பூங்காவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன மத்திய மாகாண பிரதான செயலாளர் காமினி ராஜரட்ன நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

‘துறைமுக நகர சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல’

” கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலமானது அரசமைப்பின் பிரகாரமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சட்டத்தையும் இதுவிடயத்தில் மீறவில்லை. உயர்நீதிமன்றம் திருத்தங்களை முன்வைத்தால் அதனையும் செய்வதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.” – என்று அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பியான விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலமானது சட்டபூர்வமாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித ஒளிவுமறைவும் கிடையாது. வரிச்சட்டம், காணிச்சட்டம், நிதிச்சட்டம் ஆகியவற்றின் பிரகாரமே கொண்டுவரப்பட்டுள்ளது. அரசமைப்பு மீறப்படவில்லை. வேலைத்திட்டம் சட்டப்பூர்வமானது என சட்டமா அதிபரும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறித்த சட்டமூலத்திலுள்ள ஏதேனும் சரத்து அரசமைப்புக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கினால் திருத்தம் மேற்கொள்வதற்கும் அரசு தயாராகவே இருக்கின்றது.

விஜயதாச ராஜபக்ச ஆளுங்கட்சி கூட்டங்களுக்கு வருவதில்லை. அவருக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது பற்றி ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம். 20 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதேபோன்றுதான் செயற்பட்டார். இறுதியில் ஆதரவாக வாக்களித்தார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்ற கவலை உள்ளது. அதற்காகவே இல்லாத ஒன்றை உருவாக்கி, அரச எதிர்ப்பு அலையை உருவாக்குவதற்கு முற்படுகின்றார். ” – என்றார்.

கண்ணை சுற்றிலும் கருப்பா அசிங்கமா இருக்கா? இதனை போக்க என்ன செய்யலாம்?

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது.இதற்கு பல காரணங்கள் உண்டு.

அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும்.

இதனை ஒரு சில வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • வெள்ளரிக்காயில் துண்டுதுண்டாக வெட்டி அவற்றினை நமது கண்களில் தினம் பத்து நிமிடங்களாவது வைத்து வந்தால் கண்ணுக்கு அதிகப்படியான குளிர்ச்சி ஏற்பட்டு அங்கு இருக்கும். வெப்பம் குறையும், இந்த வெப்பம் குறைவின் காரணமாக கருமையான விழிகள் அகன்று விட வாய்ப்புகள் இருக்கின்றது.
  • உருளைக்கிழங்குகளை வெட்டிவிட்டு அவற்றினை பிரிட்ஜில் வைத்து பாதுகாக்க வேண்டும் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு அவற்றை எடுத்து நமது கண்களில் வைத்தால் நம்முடைய கண் பிரச்சனையானது மிக வேகமாக சரியாக வாய்ப்பு இருக்கிறது.
  • பயன்படுத்தப்பட்ட டீ அல்லது காபி காபி பேக் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் கழித்து வெளியே எடுத்து அவற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து பிறகு கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு உங்களது கண்களில் ஒற்றி வைக்கவும். இவை நல்ல முன்னேற்றத்தை உங்களுக்கு அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
  • தக்காளி சைடாக வெட்டியும் அவற்றினை நாம் நம்முடைய கண்களில் வைத்து பராமரிக்கலாம்.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை மெதுவாக உங்களது கண்களில் நீங்கள் அப்ளை செய்யலாம். இவை கண்களுக்கு நீண்டநேர குளிர்ச்சியான ஏற்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உங்களுடைய கண்களானது நல்ல ஆரோக்கியமாக இருப்பதற்கு முடியும்

நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ம.ம.முவின் இளைஞர் மாநாட்டில் ஹரின் பங்கேற்கமாட்டார்! பின்னணியில் முற்போக்கு கூட்டணியா?

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (17.04.2021)  நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 61 வது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னிணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் விசேட விருந்தினர்களாக ஜக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சாணக்கியன் கலந்துகொண்டாலும், இந்நிகழ்வில் ஹரின் பெர்ணான்டோ பங்கேற்கமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கு உரிய வகையில் அழைப்பு விடுக்காததாலும், அங்கீகாரம் வழங்காததாலும், முன்னணி தன்னிச்சையாக செயற்படுவதாலும் கூட்டணி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

சிலவேளை அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை – அழுத்தத்தின்பேரில் ஹரின் பங்கேற்காமல் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர், சமூக செயற்பாட்டாளர் விவேக் காலமானார்!

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர், சமூக செயற்பாட்டாளர் விவேக் காலமானார்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?

மாரடைப்பு காரணமாக நடிகர், சமூக செயற்பாட்டாளர் விவேக் நேற்று காலை  சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன் தினம் தான் அவர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே தனியார் மருத்துவமனையைத் தவிர்த்துவிட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்று ஏற்படலாம். ஆனால், அந்தத் தொற்று உயிரைக் கொல்லாமல் இருக்கத் தடுப்பூசி உதவும்” என்று தெரிவித்ததோடு, தடுப்பூசி போட்டதற்குப் பிறகு தனக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்,

இந்த நிலையில், விவேக்கிற்கு மரடைப்பு ஏற்பட்டதால், தடுப்பூசி போட்டுக் கொண்டதும் தான் மாரடைப்பு வந்தது என்று சந்தேகம் எழுப்பியது.

எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தடுப்பூசிதான் காரணமா?

எனினும், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என விளக்கம் அளித்தது.

கொரோனாவால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஏழு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி, கேகாலை, மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அதிக மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர், பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.

இதனால், கண்டி மாவட்டத்தின் உடுநுவர, தெல்தோட்ட, கங்கவட்டகோரல, யட்டிநுவர, தும்பனே, தொலுவ, மெததும்பர மற்றும் பஹத்ததும்பர ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல மற்றும் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க மற்றும் ரத்தோட்டை பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...