Home Blog Page 3597

கண்துடைப்பு நாடகம் வேண்டாம் – அருட்தந்தை மா. சக்திவேல் கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பானது ஜெனிவாவுக்காக அரங்கேற்றப்படும் கண்துடிடைப்பு நாடகமாகும் – என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார்.

காணாமற்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் சந்திக்கவுள்ளார் எனவும், காணாமற்போனோர் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வரும் வகையிலும், குடும்பத்தினருக்கு தீர்வை வழங்குவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது எனவும் வெளிவிவகா அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார் என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியிடமிருந்து சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு விடுக்கப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் செல்வார்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அருட்தந்தை இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜெனிவாத்தொடரில் அழுத்தங்கள் குவிவதாலும், வெளிநாடுகளை சமாளிப்பதற்காகவுமே இப்படியான அறிவிப்பை விடுத்து கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி அழைத்தார் என்பதற்காக எம்மால் பேச்சுக்கு செல்ல முடியாது.

படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதனை முதலில் அரசு ஏற்கவேண்டும், அவர்கள் எங்கு உள்ளனர் என குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் படங்கள் வெளியாகியிருந்தன. அவர்கள் எங்கே என்ற வினாவுக்கும் விடை வேண்டும். இவற்றுக்கு சாதகமான சமிக்ஞை வெளியிடப்படால் மாத்திரமே சந்திப்புக்கு செல்வது பயனுடையதாக இருக்கும்.” – என்றார்.

இரத்தினபுரியில் நேற்று மாத்திரம் 72 பேருக்கு கொரோனா தொற்று

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பலாங்கொட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேர், குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 15 பேர் உட்பட 19 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வினால் பாதிக்கப்படும் ஏனைய தொழிற்துறைகள்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போற்றி தோட்டத்திலிருந்து கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வினால் நீர்மின் உற்பத்தி, கால்நடைவளர்ப்பு என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வினால் காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் பாரிய குழிகள் ஏற்பட்டு சூழல் பாதிப்படைந்து வருவதாக நோர்வூட் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட போற்றி தோட்டத்திலிருந்து கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றுப்பகுதியிலேயே அதிகளவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் .

இரவு பகல் வேளைகளில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழுவினர் சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதுடன் கரையோரப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கு புல் அறுக்க செல்வோர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதேவேளை, கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வின் போது தோண்டப்படும் மண் மற்றும் இல்ல மண் கழுவப்பட்டு காசல் ரீ நீர்தேக்கத்திற்குள் வந்தடைவதால் நீர்தேக்கத்தில் சேற்று மண் நிறைந்து நோட்டன் விமலசுரேந்திர நீர் மின் நிலையத்தின் நீர்மின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இதனால் நோட்டன் விமலசுரேந்திர நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக சேமிக்கப்படும் நீரின் அளவினை குறைகின்றது.

மேலும் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டத்தினூடாக தமது நாளாந்த வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும்காசல் ரீ நன்நீர் மீன் வளர்ப்பாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவ்வாறான சூழல் மாசடைவிலிருந்து சூழலை பாதுகாப்பதற்கும், கால்நடை வளர்ப்பாளர்களின் பாதுகாப்பு கருதியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

‘தோட்டப்பகுதிகளில் வன்முறை அதிகரிப்பு – துப்பாக்கி வேண்டும்’ – துரைமார் சம்மேளனம்

பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் ஹட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (3) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட துரைமார் சங்கத்தினாலேயே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர் அராஜகம் ஒழிக, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக, தோட்டங்களில் அரசியல் மயமாக்கலை நிறுத்து, முகாமைத்துவத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக்கின்றோம் என்றெல்லாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர். கைகளில் கறுப்பு பட்டிகளையும் அணித்திருந்தனர்.

” பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் ஒல்டன் தோட்டத்தில் துரையின் வீடுதேடிசென்று கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது, உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு எமக்கு பாதுகாப்பு நிமித்தம் துப்பாக்கி வழங்கப்படவேண்டும்.

நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்ட அதிகாரிகளும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். எனவே, எமக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டிக்கின்றோம். நீதி கிடைக்க வேண்டும். இப்பிரச்சினையை சர்வதேசம்வரை கொண்டு செல்வோம்.” – என்று மேற்படி சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

டாம் வீதி சம்பவத்தின் சந்தேகநபரும் சடலமாக மீட்பு!

கொழும்பு,டாம் வீதியில் பயணப் பைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி (வயது -51) ஒருவரே, படல்கும்புர பகுதியில் வைத்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.அத்துடன், சடலத்திற்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

ஐ.தே.கவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயார் – சஜித் அணி அறிவிப்பு

மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான எமது கட்சி தயாராகவே உள்ளது. மக்கள் தீர்ப்புமூலம் எமது பலத்தை நிரூபிப்போம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு சட்டத்தில் சிறு மாற்றத்தையே செய்யவேண்டும். அதனை விரைவில்செய்து தேர்தலை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலை சந்திக்க நாம் தயார். அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அரசுமீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். எமது அணி பலமாக உள்ளது. எனவே, தேர்தலை வைத்தால் இது தெளிவாக தெரியும்.

ஊழல் , மோசடி அற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு தேர்தல் எதிர்கொள்வதற்கும் நாம் தயார்.” – என்றார்.

இன்று 44,546 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் இன்றுவரை 553,821 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டது.

29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 பேருக்கும் , 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும்,  13 ஆம் திகதி 7,457 பேருக்கும், 14 ஆம் திகதி 2,695 பெருக்கும், 15 ஆம் திகதி 3,589 பேருக்கும், 16 ஆம் திகதி 3,225 பேருக்கும், 17 ஆம் திகதி 14,242 பேருக்கும், 18 ஆம் திகதி 23,067 பேருக்கும், 19 ஆம் திகதி 30,307 பேருக்கும், 20 ஆம் திகதி 39,078 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி  35,912 பேருக்கும், 22 ஆம் திகதி 15,583 பேருக்கும், 23 ஆம் திகதி 12,555 பேருக்கும், 24 ஆம் திகதி 11,696 பேருக்கும், 25 ஆம் திகதி 14,866 பேருக்கும், 26 ஆம் திகதி 13,164 பேருக்கும், 27 ஆம் திகதி 35,343 பேருக்கும், 28 ஆம் திகதி 24,374  தடுப்பூசி போடப்பட்டள்ளது.

முதலாம் திகதி 42,925 பேருக்கும், இன்று 44,546 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

‘கொரோனா மரணம்’ – இரணைத்தீவில் அடக்கம் செய்ய அமைச்சர் டக்ளஸ் போர்க்கொடி!

கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்படடுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களி்ன் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் இன்று தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச  ஆகியாருடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, இரணைதீவு பிரதேசத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் செலுத்தி வருவதையும் கடற்படையினர் அங்கு நிலைகொண்டு இருப்பதையும் கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 25,000 அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டள்ள நிலையில், குறித்த தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.

குறித்த கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் செவிமடுத்ததுடன் மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளமையினால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலான இறுதித் தீர்மானத்தினை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கொரோனாவால் மேலும் எழுவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 483 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

வருடம் 300 நாட்கள் வேலை வழங்க முடியாது – தோட்டக் கம்பனிகள் திட்டவட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்  சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கவதற்கு சம்பள நிர்ணயசபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தமது சங்கம் வெளியேறுகின்றது என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை கூறியதாவது.

” எமக்கு பாதகமான பல விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்தபோதும் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்பட்டோம். ஆனால் இனி அதனை பின்பற்றியாகவேண்டிய கடப்பாடு இல்லை. கூட்டு ஒப்பந்தம் ஊடாக வருடாந்தம் 300 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் சம்பளம் வழங்கக்கூடிய தொகைக்கேற்பவே வேலை வழங்கப்படும். ” – என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு

0
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்...

பண்டாரவளையில் கால்வாய்களில் கழிவறை கழிவுகளை வெளியேற்றிய 7 கடைகளுக்கு எதிராக வழக்கு!

0
பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. கடந்த...

ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

0
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...