Home Blog Page 3598

‘கொரோனா’விலிருந்து 80,020 பேர் மீண்டனர் – 3,056 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 598 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 56 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கும் எம்.பிக்கள்! மலையகத்தில் புதுமுகங்கள்!!

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகிவருகின்றனர். இது தொடர்பில் கட்சி உயர்மட்டங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ள அவர்கள், முதல்வர் வேட்பாளர் பதவி கிடைக்கும்வரை காத்திருக்கின்றனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி  ஆகிய கட்சிகளின் எம்.பிக்களே இவ்வாறானதொரு அரசியல் நகர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் பூர்த்தியான பின்னர் பதவி துறக்கும் அறிவிப்பை இவர்கள் வெளியிடக்கூடும்.

ஊவா மாகாணத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் எம்.பியொருவர் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். நாடாளுமன்றத்தில் அவரின் இடத்தை நிரப்புவதற்காக உதித்த லொக்கு பண்டார எம்.பியாக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்கு பண்டார விருப்பு வாக்கு பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ மாகாணத்தில் மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளில் இருந்தும் எம்.பிக்களே முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை, மாகாண தேர்தலில் முன்னாள் எம்.பிக்கள் சிலரை களமிறக்குவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு பல குழுக்கள் தயாராகிவருகின்றன.

மலையகத்தில் மத்திய மாகாணத்தில் புதுமுகங்கள் சிலர் களமிறங்கக்கூடும்.

‘இரணைத்தீவில் அடக்கம்’ – ஹக்கீம் கடும் எதிர்ப்பு!

கிளிநொச்சி – இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்றவர்களின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் இன்று  அறிவித்தது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள ரவூப் ஹக்கீம், “கிளிநொச்சி – இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும்.

இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறது” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், “ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணைதீவை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதை அணுக வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ஷண் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

சிரேஷ்ட பத்திரிகையாளர்   எஸ்.  சண்முகராஜாவின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ  55 வருடங்கள் தொடர்ச்சியாக  ஊடகத்துறையில்  கால்பதித்த  சண்முகராஜா  சிலவாரங்கள்  சுகவீனமுற்றிருந்த நிலையில்  தனது 85 ஆவது வயதில்  யாழ்ப்பாணத்தில் காலமானார்.
1935 ஆம் ஆண்டு   யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் 1955  இலிருந்து கொழும்பை வசிப்பிடமாகவும்  கொண்ட ஷண் என்று எல்லோராலும்  அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர்   சண்முகராஜா கலை, இலக்கியம், சினிமாத்துறை, தமிழக அரசியல்,  என பல்வேறு பரிணாமங்களில்  தனது ஊடகப்பணியினை   ஆற்றிவந்திருந்தார்.
1940 களில்  தனது ஆரம்பக்கல்வியை  யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் ( அன்றைய காலகட்டத்தில்   சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்)  அதற்கடுத்து யாழ். மத்திய கல்லூரியிலும்   பயின்ற  ஷண் 1964 ஆம் ஆண்டு முன்னாள்  தினகரன்  ஆசிரியர் வி.கே. பி. நாகனை  ஆசிரியராகக் கொண்டு  எம்.டி. குணசேனாவின் இன்டிபென்டன் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிடெட்டிலிருந்து வெளிவந்த  ‘‘ராதா’’ சஞ்சிகை  மூலம் பத்திரிகைத் துறைப் பயணத்தை ஆரம்பித்தார்.
1966 ஆம் ஆண்டு  அதே பத்திரிகை ஸ்பானத்திலிருந்து இலங்கையின் தமிழ்ப் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தை  பிரதம  ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த  தினபதி,  சிந்தாமணி, சூடாமணியிலும் பணியாற்றியவர்.  கடைசியாக  வீரகேசரியிலும்  பணியாற்றி ஓய்வு பெற்ற  போதிலும்   இறுதிக்காலம் வரை  இவரது  ஆக்கங்கள்  சுதந்திர ஊடகவியலாளராகப்  பணியாற்றுவதன் மூலம்  ஷண்  , சஞ்(ஷண்)ஜயன், அன்டர்ஷண் என்ற புனைப்பெயர்களில் வெளிவந்துகொண்டிருந்தது.ஷண்ணின் மறைவு தமிழ் ஊடகப்பரப்பில் நிச்சயம் ஒரு இடைவெளியை விட்டுச் சென்றுள்ளதை குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  14 ஆம் திகதி  வாழ்நாள்  நீண்டகாலம்  பத்திரிகைத்துறையில்  சேவைக்காக    இலங்கை பத்திரிகை   ஸ்தாபனமும் , இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும்    இணைந்து  நடத்திய   ஊடகவியலாளர்களை   கெளரவிக்கும் 10 ஆவது  வருட விருது வழங்கும் விழாவிலும்   தங்கப் பதக்கம்     வழங்கி  கெளரவிக்கப்பட்ட ஷண்  கலாபூஷணம் அரச விருது  வழங்கும் விழாவிலும் விருது வழங்கி  கெளரவிக்கப்பட்டார்.
தற்போதைய கொரோனா சூழ்நிலையால் அவரின் இறுதிக்கிரியைகளில் ஊடகவியலாளர்கள் நேரடியாக சென்று கலந்துகொள்ள முடியாத போதும் அவரின் நினைவஞ்சலி நிகழ்வை கொழும்பில் நடத்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஒழுங்குகளை செய்யவுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ,தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கேட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ‘Rata Purama LANKAQR காலியிலுள்ள வணிகர்களுக்கு அறிமுகம் செய்கிறது

இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது முன்னோடி முயற்சியான ‘Rata Purama LANKAQR’ஐ காலி மாவட்டத்திலுள்ள வணிகர்களுக்கு விஸ்தரித்துள்ளது, நாட்டிலுள்ள 21 முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பங்காளர்களின் பங்களிப்புடன் HNB PLC இந்த விளம்பர பிரசார நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்த தேசிய பிரசார செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் HNB PLCஇன் தலைமையில் காலி மஜிஸ்திரேட் சதுக்கத்தில் நடைபெற்றது. கையடக்க தொலைபேசி ஊடான கொடுப்பனவு செயலி (App) மற்றும் நாடு முழுவதிலும் டிஜிட்டல் கொடுப்பனவுக்கான தரமான LANKAQR குறியீட்டை அறிமுகம் செய்ய இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த நாடு முழுவதுமான ‘Rata Purama LANKAQR’ மும்முயற்சியின் மூன்றாம் கட்டமாக இது அமைவதுடன், இதனூடா பணமில்லாத கொடுப்பனவு முறை மற்றும் டிஜிட்டல் ஆர்வமுள்ள சமூகத்தை நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய விதிமுறையாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒட்டுமொத்த உட்பார்வையை முன்னேற்றுவிக்கும் இந்த பிரசாரத்திற்கு பல உயர் அதிதிகள், உயர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், நகரத்திலும் அதனை சுற்றியுள்ள முக்கிய வர்த்தக நிலையங்களையும் உள்ளடக்கிய நகர அளவிலான பிரசாரங்கள் இதில் அடங்கும். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமது பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு தேவையான LANKAQR குறியீடுகள் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளரால் அங்குள்ள வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.

LANKAQR என்பது இலங்கை மத்திய வங்கியினால் உருவாக்கப்பட்ட பொதுவான துரித பிரதிபலிப்பு (QR) குறியீடாக இருப்பதால், வணிகர்களுக்கு இனி வெவ்வெறு தளங்களுக்கு பல QR குறியீடுகள் தேவையில்லை. LANKQR உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு டிஜிட்டல் கட்டண பயன்பாட்டையும் பயன்படுத்தி குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் LANKAQR ஊடாக பணம் செலுத்த முடியும். பணம் செலுத்தப்பட்டு முடிந்தவுடன் வணிகருக்கு ஒரு குறுந்தகவல் ஊடாக பணம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வார்.

கடந்த ஆண்டு இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் 160,000 வணிகர்கள் LANKAQRஐ ஏற்றுக் கொண்டனர், இது 85,000 POS எல்லைகளை இணைக்க 30 ஆண்டுக்கும் மேலாக எடுத்த அட்டைத் துறையுடன் ஒப்பிடும் போது இந்த அமைப்பை இது விரைவாக ஒருங்கிணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு வணிகர் அல்லது சேவை வழங்குநருக்கும் அவர்களின் டிஜிட்டல் கட்டண செயலி (App) மற்றும் தளங்கள் மூலம் விரைவான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டண டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு LANKAQR உதவுகின்றது. வாடிக்கையாளர்களுக்கான மளிகைப்பொருட்கள், சுகாதார பாதுகாப்பு முதல் பயன்பாடுகள் வரை, மற்றும் தெரு ஓர விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குவது போன்ற அனைத்து தேவைகளுக்கும் பணம் செலுத்தும் பொறிமுறையை இது வழங்குகிறது. எந்தவொரு LANKAQR இணக்கமான கையடக்க தொலைபேசி செயலியை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக கொடுப்பனவுக்கான தொகை செலுத்தப்படும்.

HNBஇன் தலைமையில் இடம்பெற்ற பிரசார நிகழ்விற்கு பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, கௌரவ அதிதியாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தேசமாண்ய பேராசிரியர் டபிள்யூ.டி. லக்‌ஷ்மன், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா, இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட LANKA QR குழுவின் தலைவர் மற்றும் சனச அபிவிருத்தி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலக் பியதிகம மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் – கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களம், தர்மஶ்ரீ குமாரதுங்க ஆகியோருடன் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம் நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதான் அலஸ், HNBஇன் நிறைவேற்று பணிப்பாளரும் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான டில்ஷான் ரொட்றிகோ மற்றும் HNBஇன் சில்லறை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு வங்கி நடவடிக்கைகளுக்கான பிரதி பொதுமுகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பெரும்பாலான முக்கிய நிதி நிறுவனங்களால் LANKAQRஐ ஏற்றுக் கொள்வது இலங்கையர்களுக்கான பாதையில் ஒரு முற்போக்கான படியாகவும், இது தவிர்க்க முடியாத டிஜிட்டலில் இருக்கும் எதிர்காலத்தை முழுமையாக தழுவியுள்ளதோடு, படிப்படியாக முற்றிலும் பணமில்லாத பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண தேர்தலுக்கு தேசிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய அமைப்புகள் உறுதியாக இருக்கின்றன. எனவே, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்கமாட்டோம் – என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகிவருவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மாகாணசபை முறையால் நாட்டுக்கு பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. அம்முறைமை இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவேதான் 13 ஐ நீக்குமாறும், புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றோம்.

தேசிய அமைப்புகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் ,அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசு நடத்தக்கூடாது.

மாகாண சபைகள் இன்றி நாடு சிறப்பாக செயற்படுகின்றது .எனவே, அவற்றுக்கு புத்துயிர் கொடுப்பதற்கு அரசு முயற்சிக்ககூடாது. அதற்கு நாம் இடமும் அளிக்க மாட்டோம். “ – என்றார்.

படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்கும் கிரிஸ்புரோ

இலங்கையில் உணவு பாதுகாப்பு குறித்து சிறந்த கவனம் செலுத்தி வரும் நாட்டின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ தற்போது 7 மாவட்டங்களில் பரவியுள்ள படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்று அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டம் குறித்து கிரிஸ்புரோ தமது நன்றி மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. விவசாய அமைச்சு தெரிவிக்கும் வகையில் படைப்புழு தாக்கத்திற்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு சோளச் செய்கையை பாதுகாப்பதற்காக துரித வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் பீடை நாசினி கட்டுப்பாடுகள் தொடர்பாக அனுபவம் கொண்ட 6 நிபுணர்கள் ருவண்டாவிலிருந்து அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்து படைப்புழு தாக்கத்திற்குள்ளான அநுராதபுரம் மாவட்டத்தில் சோளச் செய்கையை ஆய்வு செய்தனர். கோழி தீவன தயாரிப்புக்கு சோளம் முக்கியமான மூலப்பொருளாக இருப்பதனால் மொனராகலை மற்றும் மகியங்கனை ஆகிய பிரதேசங்களிலுள்ள விவசாய குடும்பங்களின் சோள அறுவடையின் போது அவற்றை நியாயமான விலையில் பாரிய அளவை கொள்வனவு செய்ய கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது 7 மாவட்டங்களில் பரவியுள்ள படைப்புழு தாக்கம் சோளச் செய்கைக்கு மட்டுமன்றி நெல் மற்றும் சிறுபோக செய்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் தமது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த தாக்கத்திற்கு ஒரு தீர்வாக உயிரியல் பீடை கட்டுப்படுத்தலின் கீழ் புதிய பக்றீரியா ஒன்றை மஹஇலுப்பல்லம விவசாய ஆய்வு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதை தற்போது அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபி கோட்டாபய ராஜபக்ஷ, ருவண்டா ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இராஜதந்திர சந்திப்பின் போது விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த ருவண்டா விவசாயம் தொடர்பான நிபுணர்கள் நாட்டிற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விவசாய அமைச்சினால் நாடு முழுவதிலும் விவசாய அதிகாரிகள் மறற்றும் துறைசார் அதிகாரிகள் படைப்புழு தாக்கத்திற்கு இலக்கான சோளம் உள்ளிட்ட ஏனைய சிறு போக நிலங்களை நெருக்கமாகச் சென்று ஆய்வு செய்ததுடன் விவசாய காப்பீட்டு இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதற்காக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படைப்புழு ததாக்கம் குறித்து அரசாங்கம் எழுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த கிரிஸ்புரோ நிறுவனத்தின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரெஸ் செலஸ், “படைப்புழு தாக்கம் அதிகரிப்பினால் சேதமடைந்த சோளச் செய்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்திற்கு எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன் மிகவும் துரிதமாக இதுகுறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியமை குறித்தும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் சோளச் செய்கையை பிரபல்யப்படுத்தி இலங்கையில் சோளத்தினால் தன்னிறைவாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு கோழி வளர்ப்பு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களாக எமது ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.

கோழித் தீவனத்திற்காக சோளம் பிரதான மூலப்பொருளாக இருப்பதுடன் கிரிஸ்புரோ நிறுவனம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபாவை விவசாயிகளிடம் இருந்து சோளத்தை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்துகிறது. இன் மூலம் உள்நாட்டு சோள விவசாயிகளின் வருமானம் பாதுகாக்கப்படுவதுடன் சோள நிறுவனங்களுக்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்வதற்கும் நிறுவனத்திற்கு முடியுமாகும். இதன் கீழ் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி மொனராகலை மற்றும் மகியங்கனை, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களிலுள்ள 2000க்கும் அதிகமான விவசாயிகளின் சோள அறுவடையை கொள்வனவு செய்துகொள்ள முடியும். இவ்வாறு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் சோளத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களஞ்சியப்படுத்துவதற்கு கிரிஸ்புரோவிடமுள்ள களஞ்சிய வசதிகள் காணப்படுவதுடன் சியம்பலாண்டுவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் விசாலமான சோள களஞ்சிய கட்டடத் தொகுதியானது கிரிஸ்புரோ உடனான கூட்டு முதலீடாக நடத்திச் செல்லப்படுகிறது. இங்கு ஒரு தடவைக்கு 16,000 மெற்றிக் தொன் சோளத்தை களஞ்சியப்படுத்த முடியும். மேலும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளின் சோளத்தை விலைக் கொடுத்து வாங்குவதற்கு நிறுவன
ம் நடவடிக்கை எடுப்பதனால் சோளம் குறித்த நாட்டிலுள்ள நிறுவனம் ஒன்றினால் வழங்கப்படும் சிறந்த விலையை விவசாயிகளுக்கு வழங்க கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கிராமிய வறுமையை குறைப்பதே நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும். விவசாயிகள் வழங்கும் சோளத்திற்கான வருமானம் அறுவடையை வழங்கிய அதே தினத்தில் அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்வதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது!

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று காலை சென்று கைது செய்தனர்.

விசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில் அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பீதுறுதாலகல மலைப்பகுதியில் தீ பரவல் – ஒன்றரை ஏக்கர் எரிந்து நாசம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

01.03.2021 அன்று மாலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் வரையான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக நுவரெலியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியும் கிடைத்தமை குறிப்பிடதக்கது.

க.கிசாந்தன்

நுவரெலியாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 19 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், லிந்துலை பிரிவில் ஐவருக்கும், பொகவந்தலாவ மற்றும் ஹட்டன் சுகாதார நால்வருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 1,019 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

பண்டாரவளையில் கால்வாய்களில் கழிவறை கழிவுகளை வெளியேற்றிய 7 கடைகளுக்கு எதிராக வழக்கு!

0
பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. கடந்த...

ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

0
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...