Home Blog Page 3599

மாகாணத் தேர்தலை எதிர்கொள்ள முற்போக்கு கூட்டணி, இ.தொ.கா. உள்ளிட்ட கட்சிகள் தயார்!

மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தரப்பு தயாராகவே இருப்பதாக பிரதான அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இ.தொ.கா. முஸ்லிம் கட்சிகள் என்பனவே மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளன.

மாகாணசபைகளுக்கான தேர்தலை பழைய முறைமையில் எதிர்வரும் ஜுனில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜுனில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான சட்டதிருத்தத்தை இம்மாதத்துக்குள் செய்தாக வேண்டும். எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான யோசனை முன்வைக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜுனில் தேர்தலை நடத்தினால் அதனை எதிர்கொள்வதற்கு தயாரா என பிரதான அரசியல் கட்சிகளிடம் வினவப்பட்டது.

“தேர்தல் என்பது ஜனநாயக உரிமை. அது உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டும். மக்கள் நீதிமன்றம் முன் எந்நேரத்திலும் ஆஜராகுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். பொதுத்தேர்தல் காலத்தின்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பிரச்சாரம் மேற்கொள்ள முடியும்.

அதேபோல நீதியான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கான களத்தை அரசு அமைத்துக்கொடுக்க வேண்டும்.  அரச இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகக்கூடாது. “ – என மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின்கீழா அல்லது தனித்தா என்பது குறித்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

அத்துடன், தமது கட்சி தனித்து களமிறங்கவே திட்டமிட்டுள்ளது எனவும், தேவையேற்படின் கூட்டணி அமைக்கப்படக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது என ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இலங்கையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் இன்றுவரை 509,275 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டது.

29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 பேருக்கும் , 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும்,  13 ஆம் திகதி 7,457 பேருக்கும், 14 ஆம் திகதி 2,695 பெருக்கும், 15 ஆம் திகதி 3,589 பேருக்கும், 16 ஆம் திகதி 3,225 பேருக்கும், 17 ஆம் திகதி 14,242 பேருக்கும், 18 ஆம் திகதி 23,067 பேருக்கும், 19 ஆம் திகதி 30,307 பேருக்கும், 20 ஆம் திகதி 39,078 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி  35,912 பேருக்கும், 22 ஆம் திகதி 15,583 பேருக்கும், 23 ஆம் திகதி 12,555 பேருக்கும், 24 ஆம் திகதி 11,696 பேருக்கும், 25 ஆம் திகதி 14,866 பேருக்கும், 26 ஆம் திகதி 13,164 பேருக்கும், 27 ஆம் திகதி 35,343 பேருக்கும், 28 ஆம் திகதி 24,374  தடுப்பூசி போடப்பட்டள்ளது.

இன்று முதலாம் திகதி 42,925 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இனி O/L பரீட்சை ஓகஸ்டில் – A/L பரீட்சை டிசம்பரில் ! அமைச்சரவையில் பிரேரணை!!

கல்வி பொதுதராதர சாதாரண  தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்தும் புதிய யோசனைக்கு அனுமதியை பெற எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக செலவிடும் 9 மாத காலத்தை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘புதிய அரசமைப்பில் அத்தியாவசிய சேவையாகிறது சுகாதாரம்’

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  இன்று (2021.03.01) ஆலோசனை வழங்கினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய  முன்வைத்த கோரிக்கைக்கு கௌரவ பிரதமர் இவ்வாறு  இணக்கம் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவை மற்றும் வைத்தியர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வு காணல் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்த யோசனைகள் இப்பேச்சுவார்த்தையின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

அரச வைத்திய பீடத்தில் இருந்து 28 தொடக்கம் 30 வரையிலான வயதினையுடையவர்கள் வைத்திய சேவையில் ஈடுபடுகிறார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய   சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பான யோசனையை கவனத்திற் கொண்ட   பிரதமர் , அரச வைத்திய பீடத்துக்கு தெரிவாகும் வைத்தியர்களின் வயதெல்லையை 22 தொடக்கம் 23 ஆக குறைக்க கல்வி அமைச்சுடன் இணைந்து ஒன்றினைந்த செயற்திட்டத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

கல்வி பொதுதராதர சாதாரண  தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்தும் புதிய யோசனைக்கு அனுமதியை பெற எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும். இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக செலவிடும் 9 மாத காலத்தை குறைத்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா   இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை வைத்திய சபை தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள நிலைமை குறித்து வினவிய கௌரவ பிரதமர் அவர்கள், வைத்திய சபை சுயாதீனமான முறையில் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

விசேட வைத்தியர்களுக்கு மேலதிகமாக அனைத்து வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறும் வயதை 62 தொடக்கம் 63 வரை நீடிப்பது குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கமைய எதிர்காலத்தில் அதற்கான திருத்தங்களை முன்னெடுக்க பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களினதும், வைத்தியர்களினதும் சிற்றுண்டிசாலைகளை சுகாதாரப்படுத்தல், பாடசாலை மாணவர்கள் மத்தியில் துரிதமாக பரவும் தொற்றா நோய் வைரஸ்களை அழிப்பது  தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கிய யோசனை குறித்து கௌரவ பிரதமர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பவித்ரா வன்னியாராச்சி, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, தேசிய சம்பள நிர்ணய சபையின்  செயலாளர் சந்ரானி சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைததியர் அசேல குணவர்தன,

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் என்.பி.கே ரணவீர, தேசிய வரவு-செலவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூடி நிலுக்ஸான், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய, செயலாளர் வைத்தியர் எம்.எச். ஜே.எஸ்.பிரனாந்து, உப தலைவர் வைத்தியர் சந்திக ஹெபிடிகடுவ, அறுவைசிகிச்சை வைத்தியர் எச் பி. அளுத்கே, உள்ளிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 476 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

83,453 பேருக்கு கொரோனா – 79,422 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 79 ஆயிரத்து 422 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 542 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 471 பேர் உயிரிழந்துள்ளனர்.

விசேட உபகுழுக்களை அமைக்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் புதிய அரசியல் குழு உறுப்பினர்களாக, எஸ். சசிகுமார் (கம்பஹா மாவட்டம்), எம். பரணீதரன் (கேகாலை மாவட்டம்), எஸ். சரஸ்வதி (மகளிர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணியின் பதினான்கு அரசியல் குழு உறுப்பினர்களில், ஐந்து எம்பிக்கள் மற்றும் பொதுசெயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோரை தவிர, ஏற்கனவே சோமா சிறிதரன், அன்டனி லோரன்ஸ், எஸ். விஜேசந்திரன், கே.ரி. குருசாமி, எம். சந்திரகுமார் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

அரசியல் குழுவிலும், மத்திய குழுவிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இன்னமும் மாற்றங்கள், உள்ளீர்ப்புகள் செய்யும் பிரேரணைகளை அடுத்த அரசியல் குழுவில் முன்வைக்க உள்ளதாக தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதைத்தவிர அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விவகாரங்கள் தொடர்பில் விசேட உபகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆயிரம் ரூபா குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது – இ.தொ.கா. தகவல்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாவும், பட்ஜட் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அரசாங்க தரப்பில் 3 பேரும் தொழிற்சங்கம் சார்பாக 8 பேரும் தோட்ட கம்பனிகள் சார்பாக 8 பேரும் பேச்சு வார்த்தையில் கலந்துக்கொண்டனர்.

கொரோனாவால் பதுளையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் தியத்தலாவை வைத்தியசாலையில் 01-03-2021  (இன்று) மரணமானவருடன், கொவிட்19 தொற்றினால் மரணமானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் தியத்தலாவை வைத்தியசாலையில மாரடைப்பு நோய் காரணமாக 68 வயதுடைய நபர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிகிச்சை பயனளிக்காமையினால் அவர் இன்று மரணமானார்.

அந்நிலையில் ஏற்கனவே அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனை அறிக்கையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அவரது சடலம் 01-03-2021இல் கொரோனா சுகாதார வழிமுறைகளுக்கமைய தகனம் செய்யப்பட்டது.

2020 நவம்பர், டிசம்பர், 2021இல் நிறைவான ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களில் பதுளை மாவட்டத்தின் 15பிரதேச செயலகப்பிரிவுகளிலும் கோவிட்19 தொற்றினால் எட்டுமரணங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த இரு மாதங்களில் 1,205 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். 3383 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எம். செல்வராஜா, மலர்வேந்தன்

சாமிமலையில் 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்டத்தின்,  குமரி பிரிவில் 16 வயதுடைய மாணவி ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார, சம்பவ இடத்திற்கு சென்று ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. மேலதிக பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

பண்டாரவளையில் கால்வாய்களில் கழிவறை கழிவுகளை வெளியேற்றிய 7 கடைகளுக்கு எதிராக வழக்கு!

0
பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. கடந்த...

ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

0
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...