Home Blog Page 3600

யாழில் கவனயீர்ப்பு பேரணி – மனித உரிமை பேரவைக்கு மகஜரும் அனுப்பி வைப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணியானது, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வரை சென்றடைந்துள்ளது.

இறுதியில் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு கையளிப்பதற்கான அறிக்கை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தந்தையை அடித்துக்கொன்ற மகன் – யாழில் பயங்கரம்

இன்று அதிகாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம். இராச வீதி சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி சீனிவாசன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரளவு மனதளவில் பாதிக்கப்பட்ட மகனுக்கும் தந்தைக்கும் இடையில் காலை சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மகன் இரும்பு கம்பியால் தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் ஊர் மக்களால் பிடித்து அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனநோயினால் பிடிக்கப்பட்டு இருந்ததாகவும் தினந்தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் இளைய மகன் தெரிவித்தார்.

தந்தையை தாக்கும் போது தன்னால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டதாகவும் மூத்த அண்ணன் ஆக்ரோசமாக தனது தந்தையை தாக்கி கொலை செய்ததாகவும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 33 வயதுடைய இளைஞன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

மேலதிக விசாரணைகளையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஊடாக அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்திய ‘கர்ணன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ எனும் பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

பறை இசையுடன் கிராமியப் பாடலாக உருவாகி இருந்த இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது.

‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், தற்போது அடுத்த பாடலை வெளியிட உள்ளதாக கர்ணன் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மார்ச் 2 ஆம் திகதி கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

https://www.vikatan.com/government-and-politics/death/21st-memorial-day-of-manjolai-tea-estate-workers-protest

பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார். பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல்கட்ட தடுப்பூசியை இன்று எடுத்துக்கொண்டார்.

தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

சென்.கிளயார் வனப்பகுதியில் தீ – 30 ஏக்கர் எரிந்து நாசம்

தலவாக்கலை – சென்.கிளயார் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர்வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

தலவாக்கலை – சென்.கிளயார் வனப்பகுதி நேற்று (28.02.2021) இரவு 7 மணி முதல் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.

எனினும், தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தீ வேகமாக பரவி சுமார் 30 ஏக்கர் வரை தீக்கிரையானது.மனித செயற்பாடு மூலமே இத்தீப்பரவல் ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கும் பொலிஸார், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

க.கிசாந்தன்

கிரிக்கெட்டில் டில்ஷானின் மகள் படைத்துள்ள புதிய சாதனை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சகலத்துறை ஆட்டக்காரருமான திலகரத்ன டில்சானின் மகளான லிமன்ஷா திலகரத்ன, புதிய கிரிக்கெட் சாதனையொன்றை படைத்துள்ளார்.

Premier Level கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இளம் வீராங்கனை என்ற சாதனையையே அவர் படைத்துள்ளார். 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் லிமன்ஷா, மெல்பேர்ன் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அண்மையில் பங்கேற்ற முதல் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட்டொன்றை வீழ்த்தியுள்ளார்.

தமது குடும்பம் சகிதம் டில்சான் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தா.பாண்டியனின் மறைவுக்கு மனோ அனுதாபம்

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தா. பாண்டியன் மறைவு தொடர்பில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இலங்கையின் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.

இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.இதை நிராகரித்து, இலங்கை தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்.

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

அவரது மறைவு, இந்திய, இலங்கை முற்போக்கு சக்திகளுக்கு, தமிழ் தேசிய சக்திகளுக்கு பாரிய இழப்பாகும்.

O/L பரீட்சை ஆரம்பம் – மலையக மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் இன்று (01.03.2021) ஆர்வத்துடன் – உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

ஆன்மீக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பெற்றோரும், பொறுப்பாளர்களும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களை நோக்கி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 25 ஆயிரத்து 98 மாணவர்கள் தோற்றுகின்றனர். 179 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை சுகாதார வழிகாட்டுதல்களின் இன்று (01.03.2021) ஆரம்பமானது. இதனையொட்டி நேற்று பரீட்சை நிலையங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

க.கிசாந்தன்

இலங்கையில் 466,350 கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை 466,350 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டது.

29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 பேருக்கும் , 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும்,  13 ஆம் திகதி 7,457 பேருக்கும், 14 ஆம் திகதி 2,695 பெருக்கும், 15 ஆம் திகதி 3,589 பேருக்கும், 16 ஆம் திகதி 3,225 பேருக்கும், 17 ஆம் திகதி 14,242 பேருக்கும், 18 ஆம் திகதி 23,067 பேருக்கும், 19 ஆம் திகதி 30,307 பேருக்கும், 20 ஆம் திகதி 39,078 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி  35,912 பேருக்கும், 22 ஆம் திகதி 15,583 பேருக்கும், 23 ஆம் திகதி 12,555 பேருக்கும், 24 ஆம் திகதி 11,696 பேருக்கும், 25 ஆம் திகதி 14,866 பேருக்கும், 26 ஆம் திகதி 13,164 பேருக்கும், 27 ஆம் திகதி 35,343 பேருக்கும், 28 ஆம் திகதி 24,374  தடுப்பூசி போடப்பட்டள்ளது.

மே தினக் கொண்டாட்டத்துக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் இம்முறை மே தின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவவால் கடந்தவருடம் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது. சிறு அளவிலான நிகழ்வுகளே இடம்பெற்றன.

இந்நிலையில்தான் இம்முறை மே தினத்தை உரிய வகையில் அனுஷ்டிப்பதென அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க பிரிவுகள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் சுகாதார தரப்புகளுக்கு அறிவித்து அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், பேரணிக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

கொரோனா அச்சுறுத்தல் பகுதிகளில் எப்படியும் நிகழ்வுகளை நடத்த முடியாது, எனவே, பாதுகாப்பான பகுதிகளிலேயே கட்சிகளால் ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

பண்டாரவளையில் கால்வாய்களில் கழிவறை கழிவுகளை வெளியேற்றிய 7 கடைகளுக்கு எதிராக வழக்கு!

0
பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. கடந்த...

ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

0
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...