Home Blog Page 3601

கொரோனாவால் மேலும் எழுவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 471 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆறு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் மொழியே உலகில் தொன்மையான மொழி – பிரதமர் மோடி புகழாரம்

அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்றும் பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று. நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.
மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது” என்று கூறினார்.
மேலும் வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 78 ஆயிரத்து 947 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 683 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 464 பேர் உயிரிழந்துள்ளனர்.

“வெளிநாட்டு பயணமும் இல்லை, சலுகையும் இல்லை- கவலையில் திலகர்” – திகா தகவல்

” சுக போகங்களும் வெளிநாட்டு பயணங்களும் இல்லாமல் போனதையடுத்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் திலகரை நினைத்து கவலைப்படுகிறேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தொழிலாளர் தேசிய முன்னணி கலைக்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறாரே? இது குறித்து உங்க பதில் என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” தொழிலாளர் தேசிய முன்னணியை ஒருவரால் மட்டுமே கலைக்க முடியும் என்றால் எதற்கு நிர்வாக சபை ? திலகர் வாயில் சனி பிடிச்சிருக்கு அவருக்கு எதிரியே அவர்தான்.

பாவம் அவரை நினைத்து அழுவதா? சிரிப்பதா ? சமூக வலைத்தளங்களில் அவர் எழுதும் பதிவுகள் ஊடாக அவருக்கே ஆவர் ஆப்பு வைத்து கொள்கிறார்.

அவர் விமர்சனங்களை விட்டு மௌனமாக இருந்து இருந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எம்மோடு இணைந்து போட்டியிட்டுருக்க முடியும்.

என்ன செய்ய அவரது வாயே அவருக்கு எதிரியாகிவிட்டது. அதைவிட அவர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தோட்ட மக்களை நேரடியாக சென்று பார்த்ததை விட வெளிநாடுகளுக்கு சென்று பேஸ்புக்கில் படங்கள் போட்டதே அதிகம்.

அதுமாத்திரமா பாரளுமன்ற சலுகைகள் ராஜதந்திர கடவுசீட்டு எல்லாமே அவரிடம் அன்று இருந்தது இன்று எதுவும் இல்லை. சுகம் அனுபவித்த அவருக்கு இப்போது ஒன்றுமே இல்லாததன் காரணமாக எதை எதையோ சொல்கிறார்.

நான் அவரை குறித்து கவலைப்படுகிறேன். என்னசெய்ய அவர் புதிய கட்சி தொடங்கட்டும் அது அலரது தனிப்பட்ட விருப்பம் .” – என்றார்.

நன்றி – அண்ணாச்சி இணையம்

அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபா வேண்டும் – கொஸ்லந்தையில் போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தது.

ஊழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதாகவும், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர், பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

நியாயமான சம்பளத்தையும் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

க.கிசாந்தன்

’13’ ஐ எதிர்த்து இந்தியாவை மீண்டும் சீண்டுகிறார் அமைச்சர் சரத் வீரசேகர

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவது இந்தியாவின் வழமையான புலம்பல்தான். 13ஆவது திருத்தச் சட்டத்தை புதிய அரசமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

” அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகத் தமிழர்களின் வேணவாக்களுக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கையைக் கோருகின்றோம்.

இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் கௌரவம், சம உரிமை என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு.” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இது இந்தியாவின் வழமையான புலம்பல். 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. புதிய அரசமைப்பில் அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பது அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு.

புதிய அரசமைப்பின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும். இலங்கையின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலோ அல்லது நீதிப் பொறிமுறை தொடர்பிலோ வெளிநாடுகள் முடிவு எதனையும் எடுக்க முடியாது.

இறைமையுள்ள எமது நாடே அது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். வெளியிலிருந்து இலங்கைக்கு எவரும் அழுத்தங்களை வழங்க முடியாது- என்றார்.

தனிவழி செல்ல தயாராகிறதா சுதந்திரக்கட்சி?

ஶ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திக்கட்சி, மொட்டு அணியினரின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றது.

தமது கட்சி உறுப்பினர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை எனவும், தேர்தலுக்காக மட்டுமே தமது கட்சி பயன்படுத்தப்படுகின்றது எனவும் சுதந்திரக்கட்சிக்கார்கள் ஊடகங்களிடம் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலின்போது சஜித் அணியுடன் இணைந்து போட்டியிடவேண்டும், தற்போது ரணில் தரப்பு அவர்களுடன் இல்லை என்பதால் கூட்டணி சாத்தியமாகும் என கட்சி உறுப்பினர்கள் சிலர், சு.கவின் மத்திய குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.

அத்துடன்,மொட்டு கட்சியுடன் பேச்சு நடத்திய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என மேலும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சு.கவுக்குள்ளும் கருத்து மோதல் வலுத்துள்ளது.

விரைவில் தீர்க்கமானதொரு முடிவு எடுக்கப்படவுள்ளது.

விமல் – பஸில் மோதல் உக்கிரம்! வெளியேறப்போவது யார்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குள் இருந்துக்கொண்டு எதிரணியின் பணியை எவரும் முன்னெடுக்க முடியாது எனவும், அவ்வாறானவர்களை வெளியேற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என கடும் தொனியில் விமர்சித்தார் எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் புதுமுக எம்.பிக்களுக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதன்போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரை இலக்கு வைத்து பஸில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்   தெரியவருகின்றது.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதை தடுப்பதில் மேற்படி தலைவர்களே முன்னின்று செயற்பட்டனர். இவர்களுக்கு சார்பான தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பஸில்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடகக்கலைஞர் ஆறுமுகம் வாசுதேவன்

அக்கரபத்தனை நகருக்கு மிக அண்மித்த பகுதியில் அமைந்துள்ள தோட்டம் அல்டோரி. இந்த தோட்டத்தை ‘பிரான்ஸ்காரன்’ தோட்டம் என தமிழில் அழைப்பதுண்டு. பிரான்ஸ் நாட்டு காரர்கள் நீண்ட காலம் இந்த தோட்டத்தை நிர்வகித்து வந்ததால் இந்த பெயர் கொண்டு அழைத்துள்ளனர். தற்போது அல்டோரி என்றே அழைக்கின்றனர்.
இந்த தோட்டத்தில் (1970 களில்) வாழ்ந்தவர்கள் ஓரளவு கல்வி அறிவு கொண்டவர்களாகவும் கலை ஆர்வமிக்கவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ் நாட்டில் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாகவும் இருந்தனர் .
அந்த காலப்பகுதியில் இந்த தோட்டத்தில் வசித்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து “அண்ணா”என்ற மன்றத்தை உருவாக்கி அதனூடாக இந்த கலைப்பணியினையும் சமூகம் சார்ந்த பணிகளையும் சிறப்பாக செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக இவர்கள் தோட்டத்தின் திருவிழா காலங்களிலும் ஏனைய பண்டிகை காலங்களிலும் நாடகங்களை எழுதி மேடையேற்றி உள்ளனர்.இவர்களில் பலர் சிரிமா சாஸ்திரி ஒப்பந்ததின் பிரகாரம் தாயகம் திரும்பியதுடன் சிலர் இயற்கை எய்தியும் உள்ளனர்.
(இவர்கள் நிகழ்த்திய நாடகங்களில் ‘சித்திரவள்ளி’ என்ற ஒட்டர்களின் கதை (சரித்திர நாடகம்)மிக முக்கியமானது.இது இன்னும் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள நாடகமாகும்.)
அந்த வழி வந்தவர்களில் முக்கியமானவர் நாடகக்கலைஞர் ஆறுமுகம் வாசுதேவன்.
அல்டோரி தோட்டத்தை பூர்விகமாக கொண்டவர்.இவர் மேடை நாடகங்களிலும் பாரம்பரிய கூத்து கலைகளிலும் நடித்தது மட்டுமல்லாமல் பின்னாளில் நாடகங்களை தயாரித்து மேடையேற்றியும் உள்ளார். அத்தோடு இராமர் பஜனை பாடல்களை

இனிமையாகபாடும் பாடகரும் கூட.
1990 களில் கூத்து கலைகளில் ஒன்றான பொன்னர்சங்கர் கதையை பார்த்து அதன்பால் ஈர்க்கப்பட்டு அந்த கலையை தான் வசிக்கும் அல்டோரியிலும் அறிமுகப்படுத்த திரு.வாசுதேவன் அவர்களும் அவரது நண்பர் இராஜரட்ணம் சங்கர் என்பவரும் விரும்பினர்.அதன் பயனாக டயகமயில் பொன்னர் சங்கர் கலையில் புகழ்பெற்ற மாஸ்டர் காண்டியப்பன் என்பவரை அல்டோரிக்கு அழைத்து வந்து மூன்று மாதங்கள் பயிற்சி செய்து நாடகத்தின் பிறப்பு வளர்ப்பு, கிளிகன்னி,படுகளம் போன்ற முக்கியமான மூன்று பகுதிகளையும் நிகழ்த்தியுள்ளனர்.
இந்த நாடகத்தில் இவர் இந்த கலையில் வரும் முக்கிய பாத்திரமான பொன்னாராகவும் , பிரிதொரு சந்தர்ப்பத்தில் பெரிய காண்டியாகவும் நடித்துள்ளார்.
இதில் குறிப்பிடக்கூடிய விடயம் என்ன வென்றால் கூத்து கலைகளில் வரும் பெண்பாத்திரங்களில் பெண்கள் பெரும்பாலும் சேலை உடுத்தியே இருப்பார்கள்.இவர்கள் பெண்பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் நவீன உடைகளை தைத்து புதுமையை புகுத்தியதாக (பதிவிட்ட படத்தில் காணலாம்)
திரு.வாசுதேவன் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
திரு.வாசுதேவன் எழுதி இயக்கிய நாடகங்களில் நாவல்களை தழுவி எழுதிய திருந்திய உள்ளம்,உங்களில் ஒருவன்,ஏழாவது மனிதன் போன்றவைகள் சிறப்பானது.இதில் சிவ நாடகங்களில் இவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இந்த நாடகக் குழுவில் இவரோடு தற்போது அறிவிபாளராக அறியப்படும் நண்பர்
இராமன் கேதீஸ்வரன் என்பவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.ரெ.அருட்செல்வம்)

இரத்தினபுரியில் நேற்று 62 பேருக்கு கொரோனா தொற்று

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 2,370பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

பண்டாரவளையில் கால்வாய்களில் கழிவறை கழிவுகளை வெளியேற்றிய 7 கடைகளுக்கு எதிராக வழக்கு!

0
பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. கடந்த...

ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

0
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...