Home Blog Page 3602

‘கொரோனா’விலிருந்து 78,373 பேர் மீண்டனர் – 3,593 பேருக்கு மட்டுமே சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 748 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 593 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

‘நானே முதல்வர் வேட்பாளர்’ – கமல்ஹாசன் அறிவிப்பு

2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக நானே களமிறங்குவேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு அது இல்லை என்பது அறிவிப்பின் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.

இன்னும் 36 நாட்களே இருக்கிறது. நாங்கள் நல்ல வேலை ஆயத்தமாக இருந்ததினால் அடுத்தகட்ட வேலையில் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம்.

இங்கு எங்கள் கட்சியில் சேரும் 2 பேரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டி இருக்கிறது.

மூத்த அரசியலாளர் பழ.கருப்பையா, மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். அவர் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெற்றி வேட்பாளராக போட்டியிடவும் சம்மதித்து இருக்கிறார்.

மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் இந்த முறை மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செந்தில் ஆறுமுகம் கிராம பஞ்சாயத்து நிகழ்சசிகளில் எங்களுக்கு பக்கபலமாக இருந்து எங்களுடன் ஏற்கனவே வேலை செய்து கொண்டு இருப்பவர்.

அவர் வருவார் என்பது அவருடைய முதல் நாள் சந்திப்பிலேயே எங்களுக்கு தெரிந்துவிட்டது. நல்லவர்கள் கூடாரத்துக்கு பழ.கருப்பையாவையும், செந்தில் ஆறுமுகத்தையும் வரவேற்கிறேன்.

2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன.

தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க என்னுடைய தலைமையிலான ‘வேட்பாளர் தேர்வுக்குழு’ வரும் மார்ச் 1-ந் தேதி முதல் வேட்பாளர் நேர்காணலில் ஈடுபடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர் தேர்வுக் குழுவினை அறிவிக்கிறேன்.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:- பழ கருப்பையா, பொன்ராஜ் (அப்துல் கலாமின் ஆலோசகர்), ஆர்.ரங்கராஜன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு), செந்தில் ஆறுமுகம் (சட்டப் பஞ்சாயத்து இயக்கம், சுரேஷ் ஐயர் (பிரசார வியூக அலுவலகம்).

மக்கள் நீதி மய்யம் கட்சியில் மார்ச் 1 ஆம் திகதி முதல் வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெறும். முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ஆம் திகதி  வெளியிடப்படும்.

மார்ச் 3 ஆம் திகதி  முதல் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். இப்போது வரை நான்தான் முதல்வர் வேட்பாளர். கருணாநிதி குறித்து நான் பேசியதாக கூறுவதை அவர் இருந்திருந்தால் புரிந்து கொண்டு இருப்பார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புதிய அரசமைப்பு வருவதில் தாமதம் ஏற்படும் அறிகுறி!

புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் 2021 மார்ச் மாதத்துக்குள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு பின்னரே அது வெளிவரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசாங்கத்தால் ஜனாதிபதி சட்டத்தரணி   ரொமேஷ் டி சில்வா தலைமையில்  9 பேரடங்கிய நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

மேற்படி நிபுணர் குழு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால்மூலம் கருத்துகளை பெற்றுக்கொண்டது. இதன்படி பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர்.

தற்போது அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் அக்கட்சிகளின் பிரதிநிதிகளுடன், நிபுணர்கள் குழு கலந்துரையாடல்களை நடத்திவருவதுடன், மேலதிக விளக்கங்களை பெறுவதுடன், விளக்கங்களையும் வழங்கிவருகின்றது.

அதன்பின்னர் முக்கியமான சில சிவில் அமைப்புகளையும் நிபுணர்கள் குழு சந்திக்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அத்தகைய சந்திப்புகள் எல்லாம் நிறைவடைந்த பின்னரே நிபுணர்கள் குழுவில், புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் முன்வைக்கப்படும் என அறியமுடிகின்றது.

நிபுணர்கள் குழுவுக்கு  ஆறு மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அந்த கால எல்லை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் எனவும், ஜுன் மாதமளவிலேயே ஆரம்ப வரைவு நகல் கையளிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை, டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்! அமெரிக்கா பரபரப்பு தகவல்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார்.

இந்த நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோகி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார்.

அப்போது அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை சவுதி அரேபியா அரசு தான் திட்டமிட்டு செய்ததாக துருக்கி குற்றம்சாட்டியது. வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.

மேலும் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் உத்தரவிட்டார் என்றும் துருக்கி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஜமால் கஷோகி கொலை சவுதி இளவரசர் உத்தரவோடு தான் நடந்திருக்கிறது என்று கூறி இருக்கிறது.

ஜமால் கஷோகியை சூழ்ச்சி செய்து இஸ்தான்புலுக்கு வரவழைக்கப்பட்டார். துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குள் சென்ற அவர் திரும்பி வரவில்லை. அங்கு அவரை படுகொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். பின்னர் உடல் பாகங்களை ஆசிட்டை ஊற்றி அழித்துள்ளனர்.

இந்த கொடூர செயலுக்கு கண்டிப்பாக முகமது பின்சல்மான் சம்மதித்து உத்தரவிட்டுள்ளார். ஜமால் கஷோகியை பிடிக்க வேண்டும் அல்லது கொலை செய்யும் திட்டத்துக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொலை நடந்த முறையே சவுதி இளவரசர் பின்னணியை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜமால் கஷோகி கொலை தொடர்பாக அமெரிக்கா எதிர்மறையான போலியான ஏற்கமுடியாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் முடிவும் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனி நபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

டில்சான் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி – ஜயசூரியவும் களத்தில்!

வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் (Road Safety World Series) என்ற முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பங்குபற்றும் உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் 15 பேர்கொண்ட இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. அணிக்கு திலகரத்ன டில்சான் தலைமை வகிக்கின்றார். அணி விபரம் வருமாறு,

Sanath Jayasuriya
Tillakratne Dilshan (C)
Upul Tharanga (wk)
Chamara Silva
Chamara Kapugedera
Russel Arnold
Thilan Thushara
Farveez Maharoof
Dhammika Prasad
Nuwan Kulasekara
Rangana Herath
Chinthaka Jayasinghe
Dulanjana Wijesinghe
Ajantha Mendis
Malinda Warnapura

திகாவால் விரட்டப்பட்டவர்கள் ஐ.தே.கவில் அரசியல் தஞ்சம்?

தொழிலாளர் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறியுள்ள அதேபோல் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் சிலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உள்ளாட்சி சபைகளில் தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், புதியதொரு கட்சி மலரும்வரை தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்காகவுமே இவர்கள் ஐ.தே.க. பக்கம் செல்கின்றனர் என பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணியில் இருந்து முன்னாள் எம்.பியொருவர் நீக்கப்பட்டதையடுத்து அவருக்கு சார்பானவர்கள் வெளியேறிவருவதுடன், சிலர் வெளியேற்றப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், ஹப்புகஸ்தலாவ பிரிவில் மூவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 959 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

சந்தா கட்டணத்தை அதிகரிக்காதிருக்க மலையக மக்கள் முன்னணி முடிவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்தாலும், சங்கத்துக்கான சந்தாக்கட்டணத்தை அதிகரிக்காதிருக்க மலையக மக்கள் முன்னணி உத்தேசித்துள்ளது என அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்கள் பக்கம்நின்று குறித்த முடிவை எடுக்க வேண்டும் என பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே முன்னணி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் கட்டத்துக்கு வந்துள்ளது எனவும் அறியமுடிகின்றது.

தற்போது தோட்டத்தொழிலாளி ஒருவரிடமிருந்து மாதாந்தம் 233 ரூபாவை தொழிற்சங்கங்கள் சந்தாவாக பெற்றுவருகின்றன.

அடிப்படை நாட் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை தொழிலாளர்கள் மாதாந்த சந்தாவாக செலுத்த வேண்டும். இதன்படி அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது சந்தா கட்டணமும் கடந்தகாலங்களில் அதிகரிக்கப்பட்டது.

கடந்த முறை அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டபோது தொழிற்சங்கங்கள் 233 ரூபாவை சந்தாவாக பெற்றன, இம்முறை அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபா வழங்கப்படும்பட்சத்தில் 300 ரூபாவை சந்தாவாக பெறக்கூடும். ஆனாலும், மலையக மக்கள் முன்னணி இம்முறை சந்தா கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளது.

நமது நிருபர் – லாவண்யா

சஹ்ரானின் ‘பொஸ்’ யார்? விசேட விசாரணை வேண்டும் – நிரோஷன் பெரேரா

21/4 தாக்குதலின் பின்னணி மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உட்பட அனைத்து விடயங்களும் முழுமையாக கண்டறியப்படவேண்டும். இதனைவிடுத்து சஹ்ரானின் மரணத்துடன் விசாரணை அறிக்கையையும் மூடிமறைக்க முற்படக்கூடாது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“21/4 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதிவரை முழுமையாக விசாரிக்கப்படவேண்டும். தாக்குதலை தடுக்க தவறியதை மட்டும் அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை ஏற்கமுடியாது.
இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் கரம் இருந்ததா, தாக்குதலுடன் வெளிநாடுகளுக்கு உள்ள தொடர்பு என்ன என்பவையும் விசேட விசாரணை ஊடாக கண்டறியப்படவேண்டும்.

அதேபோல  அடிப்படைவாதக் குழுவொன்றின் தலைவன் முதல் தாக்குதலிலேயே உயிரிழந்திருக்கமாட்டார். எனவே, சஹ்ரானின் பின்புலம் பற்றியும் விசாரிக்க வேண்டும். சஹ்ரானின் ‘பொஸ்’ யார், பொஸ்ஸா அல்லது பொஸ்களா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இதனை மையப்படுத்தியதாக விசாரணை அமையவில்லை.

வெளிநாட்டு தொடர்பு குறித்து மேலதிக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது. எனவே, உரிய தரப்புகள் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விசாரணைகளை மூடிமறைக்கும் நடவடிக்கையே இங்கு நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.

அதேவேளை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை மௌனிக்க வைக்கும் நோக்கில் அவர்மீது விமர்சனங்களைத் தொடுப்பதற்கு ஆரம்பித்துள்ளனர். உள்நாட்டில் உரிய வகையில் நீதி கிடைக்காவிட்டால், சர்வதேசத்தை நாடுவது உறுதி. நாடாளுமன்றத்தில் நடைபெறும் 3 நாட்கள் விவாதத்தின்போது ஏனைய தகவல்களை வெளியிடுவோம்.” – என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பட்டுள்ள விசேட தூது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதசெயல்களைக் கண்டித்தும், நீதிக்காகவும் அறவழியில் போராட்டங்களை நடத்தவும், சவால்களை சட்டரீதியாக எதிர்கொள்வதற்குமான வியூகத்தை ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துவருகின்றது. இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றது.

அனைத்து சக்திகளையும் ஓரணியில் திரட்டி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள சிற்சில முடிவுகளை மீளப்பெற வைப்பதே இதன் நோக்கமாகும்.

இந்நிலையில் இதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தயின் உறுப்பினர்கள் சிலர் ரணிலை நேரில் சந்தித்து இது பற்றி கலந்துரையாடியுள்ளனர் என அறியமுடிகின்றது.

ரணிலுக்கு அனைத்துலக மட்டத்தில் தொடர்புகள் உள்ளன, சட்டரீதியிலான அனுபவமும் உள்ளது. இதற்கு புறம்பாக ராஜபக்சக்களுடனும் நல்லுறவு இருக்கின்றது. எனவேதான் ரணிலுக்கு தூது அனுப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே, அரசின் நோக்கத்தை தோற்கடிக்க ரணிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளாராம்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

0
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...

கம்பளை நகரில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!

0
கம்பளை நகரில் இன்று காலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலில், கம்பளை காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த...