Home Blog Page 3603

கொரோனாவால் 26 நாட்களில் 136 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸால் நாட்டில் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 446 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 459 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 05 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகின.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் விவாதம் கோருகின்றது எதிரணி

ஐ.நா. மனித  உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, வெளிவிவகார அமைச்சரின் உரை உட்பட ஜெனிவா விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும்,  இதற்கு அரச தரப்பில் ஒரு நாள் மட்டுமே வழங்கப்படக்கூடும் எனவும்,  இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் எனவும் தெரியவருகின்றது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இவ்விவாதத்துக்கான நேரம் ஒதுக்கப்படும்.

அதேவேளை, 21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலும் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை.

இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன.

இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் – என்ன நடந்தது தெரியுமா?

தமிழகத்தில், கண்ணமங்கலத்தில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் திருமணம் நின்றது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பகுதியை சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் திருமணம் நேற்று காலை கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்புடன், விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று மணமக்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்தனர். மணமகளுக்கு அலங்காரம் செய்ய சென்றபோது நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.

இதைக்கேட்டு இருவீட்டாரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணப்பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.

இதனால் மணமகனின் பெற்றோர், உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி அறியாத உறவினர்கள் சிலர் திருமணத்திற்காக மண்டபத்துக்கு வந்தனர். அப்போது திருமணம் நின்றது குறித்து தெரிந்த உடன் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மணப்பெண்ணின் இந்த திடீர் முடிவுக்கு படிப்புதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் கண்ணமங்கலத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இலங்கை விவகாரம் – ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் கருத்துகளை முன்வைத்துள்ளன.

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானத்தை முன்வைப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன. இதற்கு பிரிட்டன் தலைமைத்துவம் வழங்கவுள்ளது. இதற்கு இலங்கை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய நாடுகளில் 21நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. 15 நாடுகள் புதிய பிரேரணையை ஆதரித்துள்ளன. இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில், பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலைத்தீவுகள், கியூபா, நிகரகுவா, எரிட்ரியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ், அஜர்பைஜான், வியட்நாம், பெலாரஸ், ​​வட கொரியா, காபோன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இவற்றில் அடங்கும்.

மியான்மார் இராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ தடை

மியான்மார் இராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும்,ஈராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக பேஸ்புக் நிறுவனம்  அதிரடியாக அறிவித்துள்ளது.

மியான்மாரில் கடந்த 1 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தவும், கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க கோரியும் வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் ராணுவம் அடிபணியவில்லை.

ராஜ தந்திர முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில், மியான்மரில் ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், ராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பிந்தையை நிலைமையை அவசர நிலையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளது. கொடிய வன்முறை போன்ற நிகழ்வுகளால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறுகிறது.

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியாவடி டெலிவிஷன் சேனல், எம்.ஆர்.டி.வி. அரசு டி.வி. சேனல் இரண்டின் கணக்கையும் பேஸ்புக் முடக்கி விட்டது நினைவுகூரத்தக்கது.

தனது மற்றொரு தளமான இன்ஸ்டாகிராமிலும் ராணுவ கணக்குகளை பேஸ்புக் முடக்கி உள்ளது.

ஹரின் A/L பாஸ்! பரீட்சை பெறுபேறுகளை வெளியிட லான்சா தயாரா?

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, சாதாரணதரப் பரீட்சையில்கூட (O/L) சித்தியடையவில்லை என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
 
இதற்கு பதிலளித்த ஹரின் பெர்ணான்டோ, எனது பரீட்சை பெறுபேறுகளை நான் சபையில் சமர்ப்பிப்பேன். நிமல் லான்சாதான் சித்தியடையவில்லை என குறிப்பிட்டார். அத்துடன் முடியுமானால் தனது பரீட்சை பெறுபேறுகளை நிமல் லான்சா வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தான் உயர்தரத்திலும் சித்தியடைந்துள்ள பரீட்சை பெறுபேறுகளை ஆதாரத்துடன் ஹரின் பெர்ணான்டோ சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து நிமல் லான்சா எப்போது வெளியிடுவார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கைமீது சபையில் 3 நாட்கள் விவாதம்

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் அவசியம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியது.

மேற்படி அறிக்கை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே எதிரணி பிரதம கொடறாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன், தாக்குதலை தடுக்காமல் இழைக்கப்பட்ட தவறுகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் தாக்குதலின் பின்புலம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவாதம் தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கலாம் என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேவேளை, விவாதத்துக்கு வாய்ப்பு வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை ஆளுந்தரப்பு நிச்சயம் வழங்கும் என்று சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொட்டகலை சுகாதார பிரிவில் 12 பேருக்கு கொரோனா!

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சவுந்தர் ராகவன் தெரிவித்தார்.

கடந்த 22 ஆம் திகதி 94 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த 12 பேரில், கொட்டகலை பகுதியிலுள்ள 3 பாடசாலைகலை சேர்ந்த 5 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன், கொட்டக்கலை – ட்ரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 9 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.வும் தெரியவந்துள்ளது.

தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா 3ஆவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் நிதானமாக நின்று விளையாடினால் சரிபட்டுவராது என நினைத்து அதிரடியாக விளையாடி ரன்கள் விளாசினர். இதனால் 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

அக்சார் பட்டேல் முதல் இன்னிங்சில் 6, 2-வது இன்னிங்சில் 5 என 11 விக்கெட்டுகள் சாய்த்தார். அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் என 7 விக்கெட் சாய்த்தார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

0
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...

கம்பளை நகரில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!

0
கம்பளை நகரில் இன்று காலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலில், கம்பளை காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த...