Home Blog Page 3604

நாட்டில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 75 ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 289 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 457 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்!

– WSWS media

ஓல்டன் தோட்டம் போன்று, பல இடங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் சமீபத்தில் நடந்த மோதல்களைப் பற்றிக்கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகள், அரச அடக்குமுறையை அதிகரிக்கக் கோரியுள்ளன.

பிரதமர் இராஜபக்ஷவுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் லலித் ஒபேசேகர, தொழிலாளர்களுக்கு எதிரான அரச தலையீட்டுக்கு அழைப்பு விடுத்தார். பெருந்தோட்ட முகாமையாளர்கள், ”ஆர்.பி.சி. இன் (பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின்) தேயிலை உற்பத்தியை நாசமாக்குவதற்காக, குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற… ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை எதிர்கொண்டுள்ளனர்…” என்று ஒபசேகர பொய்யாக கூறினார்.

”சட்டம் மற்றும் ஒழுங்கு இவ்வாறு பேரழிவுகரமாக சீரழிவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது, தோட்டங்களில் வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு எதிராக ஏன் அர்த்தமுள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையிட்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்,” என அவர் தெரிவித்தார்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், இ.தொ.கா. பெப்ரவரி 5 அழைப்பு விடுத்திருந்த ஒருநாள் தேசிய வேலைநிறுத்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே காலவரையற்ற தொழில்துறை நடவடிக்கையைத் தொடங்கினர். பெப்ரவரி 2, வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஓல்டன் தொழிலாளர்கள் தோட்டத் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை தூள்களை கொழும்புக்கு கொண்டு செல்லும் லொரியைத் தடுக்க முயன்றனர்.

இதற்கு பிரதிபலித்த ஓல்டன் தோட்ட முகாமையாளர், இ.தொ.கா. மாவட்டத் தலைவரான ஒரு பெண் தொழிலாளியை அடித்து கீழே தள்ளிவிட்டார். அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொழிலாளர்கள் தாக்குதல் குறித்து எதிர்ப்பு தெரிவித்த மறுநாள், முகாமையாளர் கைது செய்யப்பட்ட போதிலும், அவர் உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு நேர்மாறாக, பெப்ரவரி 2 அன்று தொழிலாளர்ளின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு தோட்ட முகாமையாளர் பொலிஸை அழைத்தபோது, அவர்கள் உடனடியாக தலையிட்டு, தொழிலாளர்களை அச்சுறுத்தியதுடன், லொரியை பயணிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டனர். லொரி தோட்டத் தொழிற்சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளனியூஜி சந்தியை அடைந்தது. ஓல்டன் தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில், இ.தொ.கா. தலைவர் சென்பகவல்லி லொரியைத் தடுத்து, சாரதியை தொழிற்சாலைக்குத் திரும்பும்படி கூறினார்.

ஓல்டன் தொழிலாளர்களுக்கு எதிராக கம்பனியுடனும் பொலிசுடனும் இ.தொ.கா. ஒத்துழைத்தமை, தொழிற்சங்கத்தை மீறி தொழிலாளர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியின் பாகமாகும்.

பெப்ரவரி 7, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 50 ஓல்டன் தொழிலாளர்கள், கொட்டகலை நகரில் உள்ள இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமானின் அலுவலகத்திற்கு சென்று, தங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு கோரினர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் தொண்டமான் அதை மறுத்துவிட்டார்.

இ.தொ.கா.வின் துரோகத்தால் பலமடைந்த ஓல்டன் தோட்ட நிர்வாகம், பெப்ரவரி 16 அன்று, தோட்டத்தின் ஒரு பிரிவில் வேலைநிறுத்தத்தை குழப்பும் நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. எவ்வாறாயினும், கோபமடைந்த வேலைநிறுத்தக்காரர்கள் தலையிட்டு, பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகளை முச்சக்கர வண்டியில் மற்றொரு தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதைத் தடுத்தனர்.

அடுத்த நாள் தோட்ட முகாமையாளரின் பங்களாவுக்கு வெளியே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கு பிரதிபலித்த நிர்வாகம், தமது இழி நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய தொழிலாளர்களை, ”வன்முறையில்” ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவர்களை கைது செய்யக் கோரியது.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய ஓல்டன் பெண் தொழிலாளர்கள் குழு, இ.தொ.கா. ஆற்றிய துரோகப் பங்கை ஆத்திரத்துடன் கண்டித்தனர். பெப்ரவரி 17 அன்று, பொலிசார் தோட்டத்திற்கு வந்தபோது, அவர்கள் யாரைக் கைது செய்வது என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தனர் என்று ஒரு தொழிலாளி விளக்கினார். இ.தொ.கா. தலைவர்களான கனகராஜ், ராஜாராம் மற்றும் சென்பஹவல்லியும், பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லுமாறு வலியுறுத்தியதாக, அந்த தொழிலாள கூறினார்.

மற்றொரு ஓல்டன் தொழிலாளி கூறியதாவது, “பொலிசார் தோட்டத்திற்கு வந்தபோது, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எட்டு தொழிலாளர்களை கைது செய்வதைத் தடுத்தோம். ஆனால் இ.தொ.கா. தலைவர்களோ, “பொலிசார் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை மட்டுமே பெறுவார்கள், அதனால் நீங்கள் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று எங்களிடம் கூறினார்.

“கைது செய்யப்பட்ட எல்லோரையும் விடுவிக்கக் கோரி நாங்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாராக உள்ளோம், ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் எங்களை அங்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பொலிஸ் நிலையத்திலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்த டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அன்று மாலை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்தனர்,” என அவர் விளக்கினார்.

“அனைத்து தொழிற்சங்கங்களும் எங்களை காட்டிக்கொடுத்துவிட்டன. பொலிஸ், நீதிமன்றம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கமும் தோட்ட கம்பனிகளுடன் இணைந்து எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவர்களை விடுதலை செய்யாமல் நாங்கள் வேலைநிறுத்தத்தை முடிக்க மாட்டோம். எங்கள் போராட்டத்தை ஆதரிக்குமாறு ஏனைய அனைத்து தொழிலாளர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்,” என அவர் தெரிவித்தார்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் உறுதியான போராட்டமானது, பொலிஸ் தோட்டக் கம்பனிகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை மட்டுமன்றி, இ.தொ.கா.வும் ஏனைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை பழிவாங்குவதற்கு எவ்வாறு கம்பனிகளுடனும் பொலிசுடனும் ஒத்துழைக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்துகிறது.

ஒழுக்கமான சம்பளம் மற்றும் ஏனைய அடிப்படை சமூக உரிமைகளுக்கான தங்களது போராட்டத்தை முன்னேற்றுவதற்கு, தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொள்வதோடு, இதேபோன்ற அரசாங்கங்களதும் முதலாளிமாரதும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர் போராட்டத்திலும், பெப்ரவரி 5 நடந்த ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்திலும் தீவிரமாக தலையிட்ட சோசலிச சமத்துவக் கட்சி, பின்வரும் அதன் அறிக்கையை பரவலாக விநியோகித்து: “பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சம்பள திட்டங்களை நிராகரி! ஒழுக்கமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்காக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடு! நடவடிக்கைக் குழுவை உருவாக்கு!”

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், சோ.ச.க.வின் இந்த பகுப்பாய்விற்கு சக்திவாய்ந்த முறையில் பிரதிபலித்தனர். பெப்ரவரி 21 அன்று இந்த கட்டுரையின் எழுத்தாளர் உரையாற்றிய கூட்டத்தில், தோட்டத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை ஸ்தாபிக்க தொழிலாளர்கள் உடன்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள எட்டு தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதற்காக பிரச்சாரம் செய்வதற்கும், ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்கும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#LKA #SRILANKA #TEA #UPCOUNTRY

செஃப்ட்லொஜிக் லைஃப் 2020இல் 25% வளர்ச்சி

செஃப்ட்லொஜிக் லைஃப் 2020இல் 25% வளர்ச்சியடைந்து 15.6 பில்லியனாக இருந்ததுடன் PAT 1.5 பில்லியன்

• PBT 2.1 பில்லியனாக அமைந்திருந்தது

• ஆயுள் காப்புறுதி சந்தையில் மூன்றாவது இடத்தில் உள்ளது

• 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 265,617 காப்பீட்டு கொள்கைகள்

• 2020ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு மூன்று காப்பீட்டு கொள்கைகளிலும் ஒன்று சொஃப்ட்லொஜிக் லைஃப் காப்பீட்டு கொள்கையானது 1.5 மில்லியன் இலங்கையர்களின் உயிர்களை காப்பீடு செய்கிறது.

2020ஆம் ஆண்டில் முற்றிலும் சீர்குலைந்த கொவிட் ஆண்டுடன் தொடர்புடைய அனைத்து சிரமங்களுக்கு மத்தியிலும், நிறுவனம் மொத்தம் எழுதப்பட்ட காப்புறுதித் தவணை (GWP) 15.6 பில்லியன் ரூபாவாக பதிவு செய்வதற்கான வருவாயை அதிகரித்துள்ளதுடன், இது 25% அதிகரிப்பாக அமைந்திருந்தது, இது நிறுவனத்தின் மிக விரைவான பதிவாகும்.

2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதல்களால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், முந்தைய ஆண்டில் இதேபோன்று 25% வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 265,617 காப்பீட்டு கொள்கைகளுடன் நாட்டில் காப்புறுதி ஊடுருவலை அதிகரிப்பதில் அதன் பங்களிப்பை காட்டியதால் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது, இது சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மொத்த தொழில்துறையில் 33% ஆகும். 2020ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு மூன்று காப்பீட்டு கொள்கைகளில் ஒன்று, 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையின் உயிர்களை காப்புறுதி செய்யும் ஒரு சொஃப்ட்லொஜிக் லைஃப் கொள்கையாகும்.

ஆயுள் காப்புறுதிச் சந்தையில் நிறுவனம் மூன்றாவது பெரிய இடத்தைப் பிடித்ததுடன், இந்த ஆண்டில் மேலும் ஒரு இடத்தை பிடித்ததுடன் சந்தைப் பங்கானது 15.2%ஆக உயர்வடைவதன் மூலம் வலுவான வளர்ச்சி வேகத்தை நிலைநாட்ட பழைய செயலணியை முந்தியுள்ளது. 2020 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான வரிக்கு முந்தைய லாபம் 2.1 பில்லியன் ரூபாவாகவும், வரிக்கு பிந்தைய இலாபம் 1.5 பில்லியன் ரூபாவாகவும் அமைந்திருந்தது. நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் 33.2 பில்லியனாக அமைந்திருந்ததோடு இது 61% வளர்ச்சியைக் குறிக்கின்றன. நிறுவனம் அதன் தனித்துவமான உரிமைக்கோரல் தீர்வு தத்துவத்திற்கு இணங்க, ஆண்டுக்கு 3.5 பில்லியன் ரூபா உரிமைக்கோரல்களை செலுத்தியதுடன், இது ஒரே நாளில் 87% உரிமைக்கோரல்கள் தீர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த சொஃப்ட்லொஜிக் லைஃப் காப்புறுதி பி.எல்.சி.யின் தலைவர் அசோக் பத்திரகே, ‘இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறோம், மேலும் ஆயுள் காப்புறுதித்துறையில் குறைந்த ஊடுருவலை எதிர்கால வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பாகக் காண்கின்றோம். சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு மூன்று ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளில் ஒன்றான சொஃப்ட்லொஜிக் லைஃப் நிறுவனத்தில் இருந்து நாட்டில் காப்பீட்டு ஊடுருவலை அதிகரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் நிரூபித்துள்ளோம், இது கிட்டத்தட்ட முழு வாடிக்கையாளர் பிரிவுகளையும் நாங்கள் உள்ளடக்குகிறது என்பதைக் காட்டுகிறது.’ என தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியாக முன்நின்று செயற்படும் மறுகாப்புறுதி MunicRe மற்றும் FinnFund மற்றும் NorFund உடனான துணை கடன் பரிவர்த்தனை ஆகியவற்றின் மூலம் FinRe பரிவர்த்தனை மூலம் வருடத்தில் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை (5.7 பில்லியன் ரூபா) வெற்றிகரமாக திரட்டுவதன் மூலம்; சொஃப்ட்லொஜிக் லைஃப் 2020ஆம் ஆண்டில் அதன் வலுவான வளர்ச்சிப் பாதையை நிலைநிறுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது, இது மேலும் மூலதனத்தை வழங்கும் நிறுவனத்தின் வணிக நோக்கங்களை உருவாக்குதல். கடன் முதலீடு இலங்கையில் NorFund மற்றும் FinnFundஇன் முதல் முதலீடுகளில் ஒன்றாகும். நாட்டின் ஆயுள் காப்புறுதித்துறையின் பிரகாசமான வாய்ப்புக்களை நிரூபிக்கும் ஒரு உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் மூலதன திரட்டல் முடிவுக்கு வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சொஃப்ட்லொஜிக் லைஃப் காப்புறுதி பி.எல்.சி.யின் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட், ‘ஒரு சவால் நிறைந்த ஆண்டில் பெற்ற சிறந்த முடிவுகள் எமக்கு ஊக்கமளிக்கிறது, இது சொஃப்ட்லொஜிக் லைஃபில் எம்மிடமுள்ள மிகவும் திறமையான மற்றும் மிகவும் ஊக்கமளித்த அணிக்கு சாட்சியமளிக்கிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு முன்மாதியாக வழங்கியுள்ளன, இது ஒட்டுமொத்த முடிவை செயல்படுத்துவதற்கு உதவுகிறது, இது எங்களை முன்னோக்கி செல்லும் ஒரு சிறந்த நிலையில் வைக்கிறது.’ என தெரிவித்தார்.

சொஃப்ட்லொஜிக் லைஃப் காப்புறுதி பி.எல்.சி. என்பது சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல் பி.எல்.சி.யின் துணை நிறுவனமாகும், இது சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது இலங்கையின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெருநிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரர்களில் உலகளாவிய முதலீட்டாளர்கள் Leapfrog அடங்கும்.

#softlogiclife

தோட்ட அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு தோட்ட துரைமார் சங்கம் கடும் கண்டனம்

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய (RPC) இரு வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் அதிகாரி ஒருவரும் மற்றும் உதவி அதிகாரி ஒருவர் மீதும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை பெருந்தோட்ட துரைமார் சங்கம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இந்த கடும் தாக்குதலால் கடுமையாக காயங்களுக்குள்ளான இரு ஊழியர்களும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் தலையிட்டு பெருந்தோட்டத்தில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாத வண்ணம் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதெடர்பாக இலங்கை பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர, “இந்த வருடத்தில் மாத்திரம் RPC தோட்டங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

RPCக்கு சொந்தமான தோட்டங்களில் தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட குழுக்களால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வேலை செய்யாதவர்களால் உந்தப்பட்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல் செயற்பாடு மற்றும் அச்சுறுத்தல் குறித்து நாம் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றோம்.” என தெரிவித்தார்.

“சட்டம் மற்றும் ஒழுங்கு இந்தளவுக்கு பாரிய அளவில் சீர்குலைந்துள்ளதை பார்த்துக்கொண்டிருத்தல் மற்றும் பெருந்தோட்ட சமூகத்தை வன்முறைகளுக்கு ஈடுபடுத்தும் இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை குறித்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவன குழுமத்திற்கு சொந்தமான ஓல்டன் தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் RPCs சார்பில் ஆஜரான இலங்கை தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையில் அண்மையில் தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாக அறிய முடிகிறது.

ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களின் அன்றாட சம்பளத்தை 1000 ரூபாவாக ஆக்குவதற்கு RPCகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தொழிற்சங்கங்களினால் வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்டு அந்த தோட்டபத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர். அதனால் வேலை நிறுத்தத்திற்கு முன்னர் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலைக் கொளுந்துகள் 7,000 கிலோ வீணானதுடன் அதனை வீச வேண்டி ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் ஏல விற்பனைக்காகவும் மற்றும் விநியோகிப்பதற்காகவும் தயார்படுத்தப்பட்டிருந்த ஒருதொகை தேயிலையை தொழிற்சாலையிலிருந்து வெளியே கொண்டுவர விடாது பலவத்தமாக இடையூறு விளைவித்தனர். இந்த ஒட்டுமொத்த தேயிலை தொகையின் பெறுமதியானது 6 மில்லியன் ரூபாவை சர்வதேச கொள்வனவாளர் ஒருவர் செலுத்தி முடித்திருந்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு நிறுவனம் சட்டரீதியாக கட்டுப்பட்டு இருந்ததனால் இதுகுறித்து பொலிஸாருக்கு முறைப்பாடொன்றையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகாமையாளர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து சேதப்படுத்தி நட்டம் ஏற்படுத்துதல், வீட்டு பொருட்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தொழிற்சாலைகளில் தண்ணீர் மற்றும் மின்சார தொடர்புகளை துண்டித்தல் மற்றும் தோட்ட அதிகாரிகளுக்கும் அவர்களது உதவி அதிகாரிகளுக்கும் மற்றும் அவர்களது வீட்டு உறவினர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதற்காக தொழிற்சங்க குழுக்களுக்கு ஒத்துழைப்புக்களையும் அதிகாரங்களையும் வழங்குவது சர்வ சாதாரணமான நிலையாக மாறியுள்ளது, இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என சங்கம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

“விசேடமாக எமது நாட்டிற்கு அந்நிய செலாவணி தேவையான ஒரு காலகட்டத்தில் இந்த தேயிலைத் தொகை விநியோகத்தை தடுத்தமை பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அதனூடாக ஏற்றுமதி வருமானத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.”

“ஏலத்திற்கு அனுப்புவதற்காக வைத்திருந்த தேயிலையை விநியோகிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தி வெளிநாட்டு சந்தையை மட்டுமன்றி இலங்கைக்கு கிடைக்கவிருந்த அந்நிய செலாவணியையும் இல்லாமல் செய்தது துரதிர்ஷ்டவசமான நிலைமையால் தேயிலை தொழிலை வீழ்ச்சியடையச் செய்வது மட்டுமன்றி பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.” என ஒபேசேகர தெரிவித்தார்.

“தேயிலை தொழில் கொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதி முழுவதிலும் தொடர்ச்சியாக செயற்பட்ட துறையாக இருப்பதுடன் தோட்டங்களில் வேலை செய்யும் அனைவருக்கும் உணவு, மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய விநியோகம் போன்றே வருவாயை ஈட்டக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதிப்படுத்துவதற்காக எம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய வெளிநாட்டு செலாவணியை நாம் ஈட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 17ஆம் திகதி ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த பாரிய தாக்குதல் RPC தோட்டங்களுக்கு எதிரான தாக்குதல் தொடரில் புதிய சம்பவமாக குறிப்பிட முடியும். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ரமேஷ்வரன் கந்தப்பளை பார்க் தோட்டத்தில் பயிலுநரான தோட்ட அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதுடன் அவரை மீட்டு வெளியே கொண்டுவருவதற்கு பாதுகாப்பு பிரிவினர் சுமார் ஐந்து மணிநேரத்திற்கும் அதிகமான காலம் எடுத்தது. அவர் இதுவரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2021 பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இதேபோன்று மற்றுமொரு இளைஞர் குழுவின் தாக்குதல் ஒன்று பண்டாரவளை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

“இவ்வாறான வெறுமனே தாக்குதல்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒரு பிரச்சினையின் பிரதிபலிப்பிற்காக அல்ல, அந்தந்த தோட்டங்களில் தேயிலை அறுவடையால் கிடைக்கும் வருமானத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான வன்முறைகள் திட்டமிடப்படுகின்றன என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் சரி எந்த தரப்பு பொறுப்பேற்றாலோ அதன் இறுதி முடிவானது நாட்டிற்கு பாரிய பாதிப்பாகவே அமையுமென்பது உண்மையான விடயமாகும்.” என ஒபேசேகர மேலும் குறிப்பிட்டார்.

பொது இடங்களில் புர்கா உள்ளிட்ட முகத்தை மூடுவதற்கு தடை – முஸ்லிம் திருமணச் சட்டத்திலும் திருத்தம் வருகிறது என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் புர்கா உள்ளிட்ட முகத்தை மூடுவதற்கு எதிராக தடை விதிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கோரப்படும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் 2500 வருடம் பழமை வாய்ந்த இலங்கை பௌத்த விகாரை தேவாலய சட்டமூலத்தை ரத்து செய்யவோ அல்லது அந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யவோ தான் நீதி அமைச்சராக இருக்கும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

நீதி அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதி அமைச்சருமான அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் மூலத்தில் திருத்தங்களை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பித்து உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த புதிய திருத்தத்தின் மூலம் திருமணம் முடிக்கும் குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர திருமணத்தின் போது பெண் கையெழுத்திட வேண்டும் என்ற திருத்தமும் செய்யப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பொது இடங்களில் துர்கா உள்ளிட்ட முகத்தை மூடுவதற்கு எதிராக தடை விதிப்பதற்கு சட்டை ஏற்பாடுகளை செய்வதற்கான யோசனையும் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் – பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ‘அவுட்’

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகப் பதவிகளுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
வன்னி மாவட்டத்தின் ‘St. Anthony’s Sports Club’ கிரிக்கெட் கழகத்தின் சார்பிலேயே தேரர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் கலக்கும் Rj Chandru

இலங்கையின் பிரபல முன்னனி வானொலி அறிவிப்பாளராக திகழ்ந்த Rj சந்துரு, தற்போது சமூக வலைத்தளத்தில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியொன்றில் நிகழ்ச்சி முகாமையாளராக கடமையாற்றி வந்த சந்துரு, தனிப்பட்ட காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

அதன்பின்னர் சமூக ஊடகங்களில் தனது கவனத்தை திரும்பி, ஊடகப் பணிகளையும் படைப்புக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். பெரும்பாலான படைப்புக்கள் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு அவரது படைப்புக்கள் வௌிவர ஆரம்பித்துள்ளன.

சந்துருவின் படைப்புக்கள் உள்நாட்டில் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் ஏராளமான நாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிரேம், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கணக்குகளை ஆரம்பித்து, தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

நவீன ஊடகம் என அழைக்கப்படும் சமூக ஊடகங்களின் ஊடாக தனது வருமான வழியையும் அமைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சந்துரு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வானொலிக்குள் மீண்டும் பிரவேசிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது அதற்கான வாய்ப்பில்லை என மறுத்துவிட்டார்.

இனி ஊடகப் பணி சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தமது பணியை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் வானொலியொன்றுக்குள் பிரவேசிக்க எவ்வித எண்ணமும் இதுவரை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொனறாகலை மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா!

மொனராகலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 38 பேர் இன்று இனம் காணப்பட்டிருப்பதாக, மொனராகலை மாவட்ட சுகாதாரப்பணிப்பாளர் துசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.

‘மொனராகலை மாவட்டத்தின் செவனகலையில் 27 பேரும், கதிர்காமத்தில் எட்டுப் பேரும், வெள்ளவாயாவில் இருவரும், தனமல்விலையில் ஒருவருமாக 38 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இனம்காணப்பட்டள்ளனர்.

இவ்எண்ணிக்கையுடன் மாவட்டத்தின் மொத்த கோவிட் 19 தொற்றாளர்கள் 428 பேராக உயர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருமே, கோவிட் 19 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், இத்தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்த 574 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்’ என்றும்கூறினார்.

அத்துடன், மொனராகலை மற்றும் பிபிலை ஆகிய இரு இடங்களில் இரு கோவிட்19 தொற்றாளர்கள் மரணமாகியிருப்பதும், குறிப்பிடத்தக்கது.

‘கள்ளாட்சிக்கு எதிரான Count Down படலம் ஆரம்பம்’ – மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவபடுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இந்த கள்ளாட்சி, பதவிக்கு வந்தது.ஆகவே சஹரான் குண்டு வெடிப்பு, இந்த கள்ளாட்சிக்கு, பாரிய உதவியாக அமைந்துள்ளது.

இன்று, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் பட்டியலை, ஆணைக்குழு அறிக்கை தந்துள்ளது.அதில் முதலிடம் மைத்திரிபால சிறிசேன என்ற முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல, இந்நாள் ஆளுங்கூட்டணி தவிசாளர் மற்றும் மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட எம்பியும், சபையில் ஆளும் தரப்பின் முதல் வரிசையில் அமர்ந்துள்ள முதல் எம்பி.

குண்டு வெடிப்புக்கு சில மாதங்கள் முன்னர் அவர் நல்லாட்சியை தடாலடியாக கலைத்து, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, ஒரு “அரசாங்கத்தை” 2018ம் வருடம் நியமிக்க முயன்றார் என்பதையும் மறக்க முடியாது.

ஆகவே, “பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாத மொட்டுகாரர்களை நோக்கியே, இப்போ திரும்பி வருகிறது.

உயிர்த்த ஞாயிறு உதிர்த்த அப்பாவி உயிர்கள், எனது கொழும்பு கொச்சிக்கடையிலும், மட்டக்களப்பிலும் உயிரிழந்த தமிழ் கத்தோலிக்க உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டி, “வினை விதைத்தோர், வினை அறுக்கும்” Count Down படலம் ஆரம்பமாகிறது..!

பிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறதாம். இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...

கம்பளை நகரில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!

0
கம்பளை நகரில் இன்று காலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலில், கம்பளை காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த...

தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை: மலையக எம்.பிக்கள் மௌனம்!

0
“மலையக மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பாதது ஏன்.” என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி...