Home Blog Page 3605

‘எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மண்கவ்விய ஐக்கிய தேசியக்கட்சி, அதன்பின்னர் 1977 இல் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பலமானதொரு அரசு அமைக்கப்பட்டதுடன், அதிரடியான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சவாலாக அமைந்த சுதந்திரக்கட்சியின் தலைவர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறிப்பதற்கு ஜே.ஆர். அரசு நடவடிக்கை எடுத்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை சட்டவிரோதமாக ஈராண்டுகள்வரை நீடித்தமை உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டடே அரசியல் ரீதியில் ஶ்ரீமா வேட்டையாடப்பட்டார்.

இதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. போராட்டங்கள் வெடித்தன. ஆனாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு சிவில் உரிமைகள் கிடைக்கப்பெற்றன. இதனால் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீமாவோ அம்மையாரால் களமிறங்கமுடியாமல்போனது. ஹெக்டர் சுதந்திரக்கட்சியின் சார்பில் ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடியுரிமையை பறித்து சிறையில் அடைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இராணுவ நீதிமன்றமும் பயன்படுத்தப்பட்டது. அனைத்துலக மட்டத்திலிருந்து எதிர்ப்புகள் வலுத்ததால் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலைசெய்யவேண்டிய நிலை மஹிந்தவுக்கு ஏற்பட்டது.

தற்போதைய ஆட்சியின்கீழும் குடியுரிமை உட்பட சிவில் உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் தனி நபர்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தாலும் இம்முறை எதிரணியிலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களின் தலைவகள் குறிவைக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சிகள் பதறுகின்றன.

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 2021 ஜனவரி இறுதியில் கையளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் இக்குழுவில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல் வேட்டைக்காகவே இவ்வாறான குழு அமைக்கப்பட்டுள்ளது என எதிரணி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

நல்லாட்சியின்போது உயர்மட்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் எதிரணி உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். அந்தவகையில் சம்பந்தன், சம்பிக்க ரணவக்க, அநுரகுமார திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் சில எதிரணி உறுப்பினர்களே தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களே தம்மை அரசியல் ரீதியில் பழிவாங்கலுக்கு உட்படுத்தினர் என ராஜபக்ச படையணி கருதுகின்றது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்களை தண்டிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு வெள்ளையடிப்பு செய்வதற்குமே கோட்டா அரசு ஆணைக்குழுக்களை அமைத்து, அரசியல் செய்வதாக எதிரணி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இறுதியில் 7 ஆண்டுகளுக்கு தமது குடியுரிமை உட்பட சிவில் உரிமைகளை அரசாங்கம் பறிக்கக்கூடும் எனவும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க அச்சம் வெளியிட்டுள்ளார். அவ்வாறு நடந்தால் சர்வதேச அழுத்தம் குவியும் எனவும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசின் இந்த நகர்வுக்கு எதிராக ஜே.வி.பி. தற்போதே போராட்டங்களை நடத்திவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும் அடுத்துவரும் நாட்களில் நடவடிக்கையில் இறங்கக்கூடும். விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளிவரவுள்ளது. அதன்பின்னரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடிக்காட்டக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எனினும், குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை எனவும், விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்காது எனவும் அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

எயார்டெல் தமது வாடிக்கையாளர் பிரிவு வலையமைப்பை நாடு முழுவதிலும் விஸ்தரிக்கிறது

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்கா தற்போது நாடு முழுவதிலுமுள்ள தமது வாடிக்கையாளர் பிரிவு வலையமைப்பை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விஸ்தரிப்பானது அண்மையில் நாடு முழுவதிலும் 4G தொழில்நுட்பத்தை முழுமையாக நிர்வகிக்கும் விதத்தில் வழங்கவுள்ள எயார்டெல்லின் நடவடிக்கைக்கு சமமாக அமையும்.

இந்த விஸ்தரிப்போடு எயார்டெல்லிடம் தற்போது நாடு முழுவதிலும் 5000 சேவை பிரிவுகள் மற்றும் 70 லங்கா பெல் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதன்படி புதிய கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பெற்றுக்கொள்ளுதல், ரீலோட் செய்தல் / கட்டணங்களை செலுத்தும் வசதிகள், சிம் கார்ட் Update செய்தல் மற்றும் மேலும் பல சேவைகளை இந்த நிலையங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான, அஷீஷ் சந்திரா, “நாம் எமது கையடக்க தொலைத்தொடர்பு வலைப்பின்னலை எப்பொழுதும் மேம்படுத்துவதோடு அந்த செயற்பாடுகளுடன் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் அனுபவத்தையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இந்த உறுதியான பயணத்தின் மூலம் எமக்கு தேவைப்படுவது எதிர்காலத்தில் நாம் அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ள சர்வதேச மட்டத்திலான 4G வலைப்பின்னல் அனுபவத்திற்கு நெருங்குவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாகும். இந்த விஸ்தரிப்புக்காக நாடு முழுவதிலும் நாம் மேற்கொண்ட முதலீடுகள் தற்போதுள்ள மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்காக எமது நிரந்தரமான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது என நான் நம்புகின்றேன், அத்துடன் ஏனைய போட்டியாளர்களையும் விட சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களுக்கு முக்கியத்துவத்தை பெற்றுக் கொடுக்கவும் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தார்.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு அங்கமாக எயார்டெல் அண்மையில் Google’s Business Messages சேவையுடன் வெற்றிகரமாக ஒன்றிணைந்து இலங்கையில் முன்னணி கையடக்க தொலைதொடர்பாளராக மாறியுள்ளது. இந்த சேவையுடன் இணைந்ததுடன் எயார்டெல்லின் ஒத்துழைப்பு அல்லது தகவல்களை தேடும் எவருக்கும் Google Maps மற்றும் Google Searchக்கு இலகுவாக பிரவேசிக்க முடியும். மேலும் எயார்டெல் பாவனையாளர்களுக்கு மெசேஞ்ஜர், வைபர், டெலிகிராம், ட்டுவிடர், வட்ஸ்-அப் மற்றும் எயார்டெல் இணையத்தளம் ஆகிய அனைத்து பிரதான டிஜிட்டல் தளங்களின் ஊடாக எயார்டெல்லின் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களுடன் இலகுவாக தொடர்புகொள்ளவும் முடியும். அனைத்து ஊடக வலைப்பின்னல்களுக்காக வாடிக்கையாளர் சேவைகளை அறிமுகம் செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எயார்டெலின் வாடிக்கையாளர் பிரிவு வலைப்பின்னல் சிறப்பான விதத்தில் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் அதில் customer self-service செயலி (App) மூலம் எயார்டெல் பாவனையாளர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் டிஜிட்டல் வடிவில் அல்லது விற்பனை நிலையத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள முடியுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்காக அல்லது விற்பனை நிலையமொன்றுக்கு செல்ல ‘My Airtel’ Appக்கு செல்லவும் இல்லாவிடின் www.airtel.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.

பொகவந்தலாவயில் ஒரு பிரிவு ‘லொக்டவுன்’

பொகவந்தலாவ – செபல்டன் தோட்டத்தில் பி.எஸ். பிரிவு உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை இப்பகுதியில் தனிமைப்படுத்தல் நடைமுறை தொடரும்.

ஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது ‘தலைவி’ படம்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26 ஆம் திகதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 23 ஆம் திகதி தலைவி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள, இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டார் பழ. நெடுமாறன்

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பழ.நெடுமாறன் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கடந்த 11 ஆம் திகதி சளி, காய்ச்சல் அறிகுறியுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் 2 வார கால சிகிச்சைக்கு பிறகு பழ.நெடுமாறன் நேற்று காலை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

21/4 தாக்குதல் அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சற்று நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூல பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அறிக்கைமீது பிரிதொரு நாளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

டில்லியின் ஆதரவை கோருகிறது கொழும்பு! மோடிக்கு கோட்டா அவசர கடிதம்!!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவிடம், இலங்கை எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தாலும் தனது நிலைப்பாட்டை புதுடில்லி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் கடந்த 22 ஆம் திகதி  ஆரம்பமானது. எனினும், மாநாட்டில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இலங்கை முன்கூட்டியே இறங்கியது.

இதன்ஓரங்கமாக இந்தியாவின் ஆதரவைக்கோரி அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு டில்லியிடமிருந்து கொழும்புக்கு இன்னும் உரிய பதில் வழங்கப்படவில்லை என இராஜதந்திர மட்டங்களில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், இந்தியா ஆதரவளிக்ககூடும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு சார்பாக செயற்படுவதற்கு சீனா முடிவெடுத்துள்ளதால் இந்தியா நேரடியாக எதிர்ப்பு வெளியிடாவிட்டாலும் நடுநிலை வகிக்கக்கூடும் என ஒரு தரப்பினரும், பிராந்திய பலனை நிலைநிறுத்துவதற்கு கொழும்புக்கு நேசக்கரம் நீட்டக்கூடும் என மற்றுமொரு தரப்பினரும் கருத்து வெளியிடுகின்றனர்.

ஜெனிவாவில் இலங்கைக்கு 18 நாடுகள் ஆதரவு – அரச ஊடகம் தகவல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர்மட்ட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவு, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த 18 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கள்பேரவையில் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளும் உள்ளதுடன் அவை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்.

யுத்த காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து இலங்கை மீது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய நாடுகளின் குழுவினரின் முயற்சியைத் தடுப்பதற்கு, தமக்கு நட்பான நாடுகளின் ஆதரவைக் கோருவதற்கு இலங்கை ஒரு தீவிரமான சர்வதேச பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின் முதல் வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு ஒத்ததாக இருப்பதாக இலங்கை நம்புகிறது.

2019இல் பதவியேற்ற தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச்சில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியது.

நல்லிணக்கத்தின் அலுவலகம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும், மனித உரிமைகள் பேரவையில் அதன் 49ஆவது அமர்வில் எழுதப்பட்ட புதுப்பித்த விடயங்களை உள்ளடக்கியும் முதல் வரைவு காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தியாவுடன் கூட்டாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிலிருந்து தற்போதைய அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக இலங்கை – இந்தியா இடையே நெருடல்கள் உள்ளன.

நன்றி தினகரன்

இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கிறிஸ் கெய்ஸ்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடனான ரி 20 தொடரில் விளையாடும் நோக்கில் தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி 20 தொடரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் விலகியுள்ளார்.

இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல், நேற்று தனது சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை   நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இலங்கையுடன் விளையாடவுள்ள மேற்கிந்த தீவுகள் அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல், இலங்கை அணியுடனான ரி 20 தொடரில் விளையாடுவதற்காக தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி20 போட்டிகளிலிருந்து தற்காலிகமாக விலகி   மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகியுள்ளார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து வெளியேறியது தொடர்பில் கிறிஸ் கெய்ல் கருத்து தெரிவிக்கையில்,

“பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ஆரம்ப கட்ட போட்டிகளில் இருந்து வெளியேறியது உண்மையில் கவலையளிக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் விளையாடுவதுதான் எனது எதிர்பார்ப்பாக இருந்தது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ஆதிக்கத்தை கையில் எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் தான் நான் இங்கு வந்தேன்.

இந்தத் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு மீண்டும் பாகிஸ்தான் வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், அந்த அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.

இதில் கராச்சி கிங்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 39 ஓட்டங்களையும், லாகூர் க்ளெண்டர்ஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் 68 ஓட்டங்களையும் அதிரடியாக குவித்தார். எனினும், குறித்த இரண்டு போட்டிகளிலும் கிறிஸ் கெய்ல் விளையாடிய குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்

கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும், சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் (Dr. Deshani Herath) தெரிவித்தார்.

கொவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தடுப்பூசியை பெற்றதும் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது என நினைக்ககூடாது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அதேவேளை இதுவரை கடைபிடித்த சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றை செய்யவேண்டும்.

கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றினால் எதிர்காலத்தில் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாது என்பது இன்னும் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்படவில்லை. நடவடிக்கைகள் ஆய்வு மட்டத்திலேயே உள்ளன. ஆனாலும் வைரஸ் தொற்றினால்கூட பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம். எனவே, இதனை சாதகமானதாக பார்க்கவேண்டும்.” – என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...

கம்பளை நகரில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!

0
கம்பளை நகரில் இன்று காலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலில், கம்பளை காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த...

தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை: மலையக எம்.பிக்கள் மௌனம்!

0
“மலையக மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பாதது ஏன்.” என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி...