Home Blog Page 3596

6 பந்துகளில் பொலார்ட் 6 சிக்ஸர்கள்! அகில ‘ஹட்ரிக்’ சாதனை!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரனான பொலார்ட், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டியுள்ளார்.

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் ஓவருக்கே, இவ்வாறு சிக்ஸர் மழை பொழிந்தார் பொலார்ட்.  இதனால் மே. தீவுகள் அணி இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.

5ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பொலார்ட், 11 பந்துகளில் 38 ஓட்டங்களைக் குவித்தார்.

அதேவேளை, இப்போட்டியில் மூன்றாவது ஓவரை வீசிய அகில தனஞ்ச, ஹட்ரிக் சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெயில் உட்பட மூவரின் விக்கெட்டுகளையே வீழ்த்தினார்.

இலங்கையின் தோல்வி படலம் தொடர்கிறது – மே.தீவுகள் அணி வெற்றிநடை!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

Coolidge Cricket Ground, Antigua மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணி முதலில் களத்தெடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது. நிஷாங்க 39 ஓட்டங்களையும், திக்வெல்ல 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மே. தீவுகள் அணி 13.1. ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. 11 பந்துகளில் 38 ஓட்டங்களைப்பெற்ற பொலாட் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலுக்கு விடை கொடுத்தார் சசிகலா!

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிராத்திப்பேன் என சசிகலா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

*நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயல‌லிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” – என்றுள்ளது.

‘தோட்ட அதிகாரிகள்மீது கைவைத்தால் கடும் நடவடிக்கை’

தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தோட்ட அதிகாரிகளின் சங்கம்  எச்சரிக்கின்றது.

சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03.03.2021) தோட்ட அதிகாரிகள் அட்டன் மல்லியப்பூ சந்தியில் கறுப்பு பட்டி அணிந்து கறுப்பு கொடி பிடித்து பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களின் கூட்டமும் ஊடக சந்திப்பும் டிக்கோயா தரவலை டி.எம்.சி.சி விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதன் தலைவர் தயால் குமாரகே கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக தோட்டத்துறைகளில் பணிபுரியும் எமது ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் குறிப்பாக மிக அண்மையில் நடைபெற்ற ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மிகவும் மிளேச்சத்தனமாக தாக்கப்பட்டனர். இதனை நாங்கள் தொடர்ந்து பொருத்துக்கொண்டு இருக்க முடியாது.

நாங்கள் தோட்டங்களை பாதுகாத்து அதில் பணிபுரிவதற்கே வந்திருக்கிறோம். அதில் ஆகவே எங்களை அவர்கள் தாக்குவதனை அனுமதிக்க முடியாது. அவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால் பாரிய பிரிச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால் தோட்டங்கள் இயங்காது நாட்டின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும். கடந்த கொரோனா காலத்தில் கூட தோட்டத்துறை மாத்திரம் தான் இந்த நாட்டிக்கு வருமானத்தினை தேடி கொடுத்தது ஆகவே அரசாங்கம் எங்களுடை பிரச்சினைகள் தொடர்பாக இதை விட கரிசனையுடன் நடந்து கொள்ளவேண்டும்.

இதற்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை. தொழிலாளர்களும் நிர்வாகமும் மிக ஒற்றுமையாகத்தான் இருந்தன. ஆகவே இதற்கு பின்னணியில் தொழிற்சங்கங்கம் மற்றும் சக்தியும் செயப்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு தொழிலாளர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை பேசித்தீர்த்து கொள்வதற்கு எத்தனையோ வழியிருக்கிறது.

அவ்வாறு இல்லாது வன்முறைகளில் ஈடுபட்டால் இந்த நாட்டின் பொருளாதாரமும் அவர்களின் பொருதாரமும் தான் பாதிக்கும். கடந்த காலங்களில் கொழும்புக்கு தேயிலை கொண்டு சென்ற லொறி ஒன்றினை அட்டன் பகுதியில் ஒரு பிரதேசபை தலைவர் ஒருவர் திருப்பி அனுப்பி வைத்தார். இதன் நஸ்ட்டத்தினை யார் கொடுப்பது ஆகவே எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்ப்பதற்கே நான் முயற்சிகின்றோம்.

ஆகவே தொழிற்சங்கங்களும் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, நாங்கள் துப்பாக்கி கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாங்கள் துப்பாக்கி கேட்கவில்லை. எங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டோம். 150 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டங்கள் காணப்படுகின்றது. சில தோட்டங்களில் துப்பாக்கிகள் இருக்கின்றது. அது சம்மந்தமாக எங்களுக்கு பயிற்சிகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது வேறு கதை. நாங்கள் ஆயுதம் எதுவும் கேட்கவில்லை. எங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த  வேண்டும் என்று தான் கேட்கின்றோம். ” – என்றார்.

ஓல்டன் தோட்ட தொழிலாளர்களுக்கு மறியல் நீடிப்பு!

மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தங்களது உரிமையை வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து மனம் தளராது போராடி வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 5ம் திகதி நாடாளவீய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு இ.தொ.கா அழைப்பு விடுத்திருந்தது.

அதேநேரத்தில் ஓல்டன் தோட்டத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிகள் தொழிற்சாலையில் பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை தூளை ஏற்று செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனை தடுத்த தொழிலாளர்களின் இருவர் தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதலை எதிர்த்து ஓல்டன் தோட்டத்திற்கு உரிய நான்கு  பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 8 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 7 பேர் பெண்கள் எனவும், ஒருவர் ஆண் எனவும் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மஸ்கெலியா பொலிஸாரால் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் 14 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின் இன்று (03.03.2021) அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில் இவர்களை மீண்டும் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தோட்ட அதிகாரிக்கு எதிரான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு அதில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மூவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அதேநேரத்தில் இது தொடர்பில் இன்று (03.03.2021) நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்களை வினவிய போது,

தமக்கு நீதி வேண்டும் எனவும், இந்த தாக்குதல் சம்பவம் தோட்ட அதிகாரியால் ஆரம்பிக்கப்பட்டதால் அவரை முதலில் கைது செய்யும்படி வலியுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

கொரோனா – 80,437 பேர் மீண்டனர் – 2,950 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 417 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 2 ஆயிரத்து 950 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

ஆசிரியை ஒருவர் உட்பட தியத்தலாவையில் எழுவருக்கு கொரோனா

பண்டாரவளை தனியார் பாடசாலையில் கடமையாற்றி வந்த ஆசிரியை ஒருவர் உட்பட தியத்தலாவை நகரில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ள ஏழு பேரும் காகொல்லை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 01-03-2021ல் 60 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை, இன்று வெளிவந்தது. அதற்கமையவே, மேற்படி ஏழு பேருக்கு கோவிட் – 19 தொற்று
உறுதியாகியிருப்பமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

சடலத்திலும் அரசியல் நடத்தும் நயவஞ்சக அரசு – வேலுகுமார் சீற்றம்

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை.  வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்துவருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (03.03.2021) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் கட்டுப்படுத்தி, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவரமுடியும் என உலக நாடுகள் கவனம் செலுத்திய நிலையில், கொரோனாவில்கூட அரசியல் நடத்தி, பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டது.

கொவிட் – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு உலகில் சிறு பரப்பளவுடைய நாடுகள்கூட அனுமதி வழங்கியபோதும், அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. முஸ்லிம் மக்களின் மத உரிமை மறுக்கப்பட்டதுடன், நம்பிக்கையும் சிதைக்கப்பட்டது. தொழில்நுட்பக்குழு என ஒன்றைக்காரணம்காட்டி தனது குறுகிய அரசியல் நோக்கங்களை ஆளுந்தரப்பு நிறைவேற்றிக்கொண்டது. மக்களின் வலி, வேதனையில்கூட ‘அரசியல் சிற்றின்பம்’ கண்டனர்.

இந்நிலையிலேயே ஜெனிவாத் தொடரும் ஆரம்பமானது. முஸ்லிம் அமைப்புகள் இவ்விடயத்தை சர்வதேசம்வரை கொண்டுசென்றிருந்தன . இதனால் சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்காகவும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்தார். பிரதமரின் இந்த அறிவிப்பைக்கூட மொட்டு கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து அரசியல் செய்தனர்.

இதற்கிடையில் இம்ரான் கான் வந்துசென்ற பிறகு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அத்துடன் இப்பிரச்சினை தீர்ந்துவிடும் என மக்கள் கருதினர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் வலுப்பெற்ற நல் உறவை சீர்குலைக்கும் வகையில் தற்போது ‘இடத்தேர்வு’ பிரச்சினையை அரசு கிளப்பிவிட்டுள்ளது.

அடக்கம் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும் அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.  தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கும் செயலே இது . எனவே, பொருத்தமான இடங்களில் சடலங்களை அனுமதிப்பதற்கு இடமளிக்க வேண்டும். மாறாக ஒரு இடம் என அறிவித்து, இது விடயத்தில் மேலும் இழுத்தடிப்பு செய்யக்கூடாது.” – என்றார் வேலுகுமார்.

‘Star Awards 2020’ விருது வழங்கும் நிகழ்வில் கிரிஸ்புரோ மதிப்பீடு செய்யப்பட்டது

இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பாக சிறந்த கவனம் எடுக்கும் நாட்டில் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ, மத்திய மாகாண தொழில் அமைச்சின் தொழிற் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2020 தொழில்முனைவுக்கான விசேட நட்சத்திர விருது வழங்கும் நிகழ்வில் மதிப்பீட செய்யப்பட்டுள்ளது. இதன்போது மத்திய மாகாணத்தின் பெரிய அளவிலான உற்பத்தி பிரிவுகளில் சிறந்த நிறுவனத்திற்கான நட்சத்திர விருதினை கிரிஸ்புரோ குழுமத்தின் இணை நிறுவனமான ஃபாம்ஸ் பிரைட் தனியார் நிறுவனம் பெற்றதுடன் மிட்லன்ட் பிரீடர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு இந்த பிரிவில் திறன் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தொழில் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2020 தொழில்முனைவுக்கான சிறந்த நட்சத்திர விருது வழங்கும் நிகழ்வு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி கண்டி கிராண்ட் கண்டி ஹோட்டலில் வைபவ ரீதியாக இடம்பெற்றதுடன் இதன்போது பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே கலந்து கொண்டார். வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வானது மத்திய மாகாணத்திலுள்ள தொழில்முனைவோரை தேசிய தரத்திற்கு அறிமுகம் செய்யும் பிரதானமான விருது வழங்கும் நிகழ்வாக இது கருதப்படுகிறது. துறைசார் பயணங்கள், நேர்காணல்கள் மற்றும் விளக்கக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களுக்காக விண்ணப்பிக்கும் தொழில்முனைவோர் மதிப்பீடு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இதனை கருத்திற் கொள்ளும் போது அளவீடுகளின் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள், நடவடிக்கை நடைமுறைகள் மற்றும் தொழில்முனைவுக்கான தரம் போன்றவையும் கருத்திற் கொள்ளப்படும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோ வர்த்தக குழுமத்தின் மனித வளம் மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன் மஹிந்தசிரி, “கிரிஸ்புரோவின் தொழில்முனைவுக்காக சிறந்த வரவேற்புடன் கூடிய அரச விருதொன்றை இவ்வாறான சவால் நிறைந்த காலத்தில் பெற்றுக் கொள்ளக் கிடைத்தமை குறித்து நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைவதோடு இவ்வாறான விருது வழங்கும் நிகழ்வில் பிரதிநிதித்துவம் கிடைத்தமை மூலம் நிறுவனமாக கிரிஸ்புரோவினால் பின்பற்றப்படும் சர்வதேசத்திற்கு உகந்த வரிசை தொடர்பில் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் மற்றும் இந்தத் துறையில் சிறந்த தன்மையான உற்பத்தித் தரத்தை உயர்த்தி வைத்திருத்தல் போன்ற சிறந்த எண்ணங்களை மேம்படுத்துவதே எமது அபிப்பிராயமாகும். அத்துடன் இந்த அரச மதிப்பீட்டின் மூலம் நாம் முன்னேர வேண்டிய பிரிவுகள் குறித்து புரிந்துணர்வு கிடைத்தல் மற்றும் நாம் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் சிறப்பு குறித்தும் உகந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்த இரு காரணிகளும் மிகவும் சிறந்த சுகாதார பாதுகாப்பு தயாரிப்பாக வாடிக்கையாளரின் கைக்கு வழங்க சந்தர்ப்பம் கிட்டும். இந்த விருதுதானது அனைத்து ஊழியர்களினதும் கடும்டட அர்ப்பணிப்பை அடிப்படையாக
க் கொண்டு கிடைத்த ஒரு வெற்றியாக இருப்பதுடன் இந்த வெற்றிக்கு அர்ப்பணித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் நீண்டகாலமாக கிரிஸ்புரோ தயாரிப்புக்களில் நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர் பெருமக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

இலங்கையில் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோவுக்கு இரண்டாவது அரச விருது கிடைப்பதுடன் இதற்கு முன்னர் மனித வலு மற்றும் தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘லக் ரெக்கியா ஹரசர’ விருதினையும் வென்றெடுக்க கிரிஸ்புரோவினால் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உணவு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் கிரிஸ்புரோ நிறுவனம் இதனூடாக கிராமிய பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு சமூக பொறுப்புணர்வு பயணத்தின் மூலம் தமது ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது.

கிரிஸ்புரோ திரி சவிய வேலைத்திட்டத்தின் கீழ் சோளம் மற்றும் நெல் விவசாயிகள் 1200க்கும் மற்றும் சிறிய அளவிலான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் 250 பேருக்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களது உற்பத்திகள் சந்தை விலைக்கு ஏற்ப நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படுவதனால் இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.

கிரிஸ்புரோ சிசுதிரிய வேலைத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் சேவை செய்யும் அனைத்து ஊழியர்கள் போன்றே அவர்களது பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதுடன் பிரதான பரீட்சைகளில் சித்திபெறும் மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுதல், பல்வேறு துறைகளில் பல்கலைக்கழக படிப்பு மற்றும் தொழில் ரீதியான பயிற்சிகளை முடித்துள்ள இளைஞர் யுவதிகளுக்காக கிரிஸ்புரோ நிறுவனத்தின் மூலம் திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிரிஸ்புரோ சிசுதிரிய வேலைத் திட்டத்தின் மூலம் நடைபெற்ற சித்திரம், நடனம், சங்கீத போட்டிகளுக்காக பங்குபற்றி வெற்றிபெற்ற கிரிஸ்புரோ குடும்பத்திலுள்ள பிள்ளைகள் அவர்கள் வெளிப்படுத்திய திறமைகளுக்கு கிரிஸ்புரோ சிசுதிரிய வருடாந்த வர்ணமயமான நிகழ்ச்சியின் போது மேடையொன்றை அமைத்து அவர்களை கௌரவித்துள்ளது.

மேலும் கிரிஸ்புரோ நிறுவன வர்த்தக நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ள பாடசாலைகளுக்காக நூலகங்களை அமைப்பதற்கும் உரிய வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கரிஸ்புரோ பிரஜா அருண வேலைத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்காக 34 புதிய வீடுகள் மற்றும் மேலும் 80 வீடுகளை பழுதுபார்த்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹரித்த சத்கார மற்றும் சுவ சத்கார வேலைத்திட்டங்களின் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் சிறந்த சுகாதாரத்தை மேற்கொள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள Crysbro’s ‘Next Champ’ புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் மூலமும் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமிய பிள்ளைகளை ஒலிம்பிக் வரை கொண்டுசெல்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ளஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

‘கொவிட் மரணம் அடக்கம்’ – எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் இரணை தீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்திற்கு எதிராக, கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருட்தந்தையர்கள், இரணைதீவு பொதுமக்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆகியோர் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இரணைதீவில் இடமளிக்க முடியாது எனவும், அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய மேம்பாட்டுக்காக பழைய மாணவர்களின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி

0
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட க/ கம்/ தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்தின் (K/GP/Dolosbage Tamil Vidyalayam) உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட்...

தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு

0
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்...

பண்டாரவளையில் கால்வாய்களில் கழிவறை கழிவுகளை வெளியேற்றிய 7 கடைகளுக்கு எதிராக வழக்கு!

0
பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. கடந்த...