Home Blog Page 3608

பலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்தக்கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டம்

அமைதியை விரும்பும் ஒரு சமூகத்துக்கு தொடர்ச்சியாக அநியாயம் செய்வதை நிறுத்தி, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கொவிட்19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் பலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்தக்கோரி, கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில், இன்று (23) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்கள், கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு கட்சிகள், இஸ்லாமிய அமைப்புக்கள், சமூக நல இயக்கங்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டமை, எங்களின் மத உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே. அதிகாரத்தை பயன்படுத்தி, தொடர்ந்தும் இந்த அரசாங்கம் எமது சமூகத்துக்கு இழைத்து வரும் அநியாயங்களால் மக்கள் வேதனையில் வாழ்கின்றனர்.

நாங்கள் இந்த அரசாங்கத்திடம் எதுவுமே கேட்கவில்லை. கொவிட்19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யுமாறு மட்டுமே வேண்டி நிற்கின்றோம். ஆனால், நீங்கள் தொடர்ந்தும் இந்த விடயத்தில் கல்லாகவே நிற்கின்றீர்கள். ஒரு சமூகத்தின் மத உரிமையை நசுக்கும் இந்த இழி செயலை இனியாவது கைவிடுங்கள். எங்கள் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி தந்து, எங்களை நிம்மதியுடன் வாழ விடுங்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியை கண்ணியமாக மதித்து, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். பல்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய வைத்தியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை இரண்டு மாதங்களாக ஏன் முடக்கி வைத்திருக்கின்றீர்கள்? அந்த அறிக்கையில் கூறப்பட்டவாறு அதனை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுங்கள்.

இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக இந்தக் கொடூரத்தை நீங்கள் தொடர்ந்தேர்ச்சியாக நிகழ்த்தினால், இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது எந்தக் காலத்திலும் சாத்தியப்படாது என்பதை மட்டும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரள கஞ்சாவுடன் பசறையில் ஒருவர் கைது!

பசறை நகரில் ஒரு தொகை கேரள கஞ்சாவை தம்வசம் மறைத்து வைத்திருந்த 48 வயது மதிக்கத்தக்க நபரொருவரை பசறை பொலிஸார் நேற்று (மாலை கைது செய்துள்ளனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து உப பொலிஸ் பரிசோதகர் பிரியந்த இஷாந்த தலைமையிலான குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விற்பனை நோக்கில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பசறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இரு தோட்டங்களில் குளவிக்கொட்டு – 18 தொழிலாளர்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குளவிக்கொட்டு தாக்குதல்களில் 10 பெண் தொழிலாளர்கள் உட்பட 18 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை இன்று குளவிகள் கொட்டியுள்ளன. இதனால் 12 பேர் பாதிக்கப்பட்டனர். அறுவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அறுவர் சிகிச்சைகளின் பின்னர் வெளியெறியுள்ளனர்.

இதேவேளை, மஸ்கெலியா மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 6 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

க.கிசாந்தன்

கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுத்தார் உபுல் தரங்க

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுதாக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க இன்று அறிவித்துள்ளார்.

‘எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை’

எவரது குடியுரிமையையும் இரத்து செய்வதற்கோ அல்லது அதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ தலையீடுகளை மேற்கொள்ளாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் பெருந்தொட்ட தொழிற்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட சிலரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் கூற்று குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் மேலும் பதிலளிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

700 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. இதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கு 3 வார காலம் சென்றது.

இதன் பின்னரே நேற்றை தினம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஊடா நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போன்று இது தொடர்பில் எந்தவித அரசியல் அழுத்தத்தையும் சம கால அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எரி பொருள் , எரி வாயு விலைகள் அதிகரிக்கப்படாது

எரி பொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவிலை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானனே இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வாய் மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைப்பினாலான பயன்களை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் நீண்ட நாட்களுக்கு இதனை வழங்க முடியாமல் போனது.

நாம் அன்று முன்வைத்திருந்த விலை தொடர்பான பட்டியல் குறித்து அரசாங்கம் அப்போது விமர்சனங்களை மேற்கொண்டது.

பாராளுமன்ற உறுப்பினர்:- தற்பொழுது எரிபொருள் மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

அமைச்சர் :- ஒன்றரை வருட காலமாக நாம் இவ்வற்றின் விலைகளை அதிகரிக்கவில்லை. இறுதியாக 2019 ஆம் ஆண்டு செப்ரம்பர் முதலாம் திகதியே விலை அதிகரிப்பு இடம்பெற்றது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் தற்போதைய விலை 64 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்களது விலைப் பட்டியலுக்கு அமைவாக இவற்றின் விலையை அதிகரித்திருக்க வேண்டும். நாம் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வில்லை.

எரிபொருளின் விலை உலக சந்தையில் அதிகரித்த போதிலும் அவற்றின் சுமையை பொது மக்களின் மீது சுமத்துவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

21/4 தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாசிகசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. பிரதிகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை எம்.பிக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

கணவருடன் சண்டை – 3 வயது மகளுடன் கிணற்றில் பாய்ந்து தாயும் தற்கொலை!

கணவனுக்கும், மனைவிக்குமிடையே இடம்பெற்று வந்த வாய்த்தர்க்கம் முற்றவே, மனமுடைந்த மனைவி தனது மூன்று வயது மகளையும் தூக்கிக்கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட துக்ககரமான சம்பவமொன்று பிபிலையில் இடம்பெற்றுள்ளது.

பிபிலைப்பகுதியைச் சேர்ந்த நெல்லிவத்தை கிராமத்தின் 24 வயது நிரம்பிய நதீகா பிரியங்கிகாவும்,  அவரது மூன்று வயது நிரம்பிய கேஷா தேவமி ஆகிய இருவருமே மரணமானவர்களாவார்.

இவ்விரு மரணங்களும் 23.02.2021ல் நெல்லிவத்தை கிராமக் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டன.

பிபிலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே. செனரத் தலைமையிலான குழுவினர்,  மேற்படி மரணங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டபோது,  தற்கொலை செய்து கொண்ட இருவருக்கு பாதுகாப்பாக இருந்த அயல்வீட்டுப் பெண் சாட்சியமளித்தார். இறந்த மனைவியின் கணவன் இராணுவத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கும்,  இறந்த பெண்ணிற்குமிடையே அடிக்கடி வாய்த்தர்க்கங்கள் ஏற்பட்டு வருவதுண்டு. சம்பவதினமிரவும் இருவருக்குமிடையே கையடக்க தொலைபேசி ஊடாக கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததை,  இறந்த பெண் பேசிய தொனியிலிருந்து அறிய முடிந்தது.

இதையடுத்து,  அப் பெண் அழுது கொண்டே தனது குழந்தையையுப் தூக்கிக்கொண்டு சென்றார். மறுதினம் அவ்விருவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனரென்று கூறினார்.

இம் மரணங்கள் குறித்து பொலிசார் தொடர்ந்தும் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம். செல்வராஜா பதுளை

ஐ.எஸ். அமைப்பு குறித்து எச்சரிக்கை – விழிப்பாகவே இருக்கிறது இலங்கை!

ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பிரமுகரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அவ்வப்போது இவ்வாறான தகவல்கள் கிடைக்கும். அவை தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தேவையான தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படும். சில தகவல்களை வெளிப்படையாக குறிப்பிடமுடியாது. ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும்.” – என்றார்.

பூண்டுலோயாவில் 2,755 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது!

பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச்செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவுத் தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இரு சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

அக்கரபத்தனை, பொகவந்தலாவை பகுதியிலிருந்து குறித்த கழிவுத் தேயிலை தூள் கம்பளைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வைக்கப்பட்ட பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத் தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

க.கிசாந்தன்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

“ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரின் கதையை முடித்துவிட்டோம்”

0
  ISIS அமைப்பின் மிக முக்கியமான இரண்டாம் நிலைத் தலைவர், கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். Abu-Bilal al-Minuki , நைஜீரியாவில் பதுங்கி இருந்த நிலையிலேயே...

மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

19 வயது இளைஞனுக்கு எமனான சைக்கிள்: புசல்லாவை பகுதியில் சோகம்!

0
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகலை, கித்துல்பெந்த பகுதியில் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சைக்கிளில் இருவர் பயணித்துள்ள நிலையில், திடீரென...