Home Blog Page 3609

செவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி- முதல் வீடியோவை வெளியிட்டது நாசா

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ஆம் திகதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது.  இந்த விண்கலம் 293 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்து, கடந்த 18 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதை நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை பெர்சவரன்ஸ் ரோவர் தொடங்கி உள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள கேமராக்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. ரோவருடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இதை சிறிது தூரம் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை நெருங்கும்போது பரபரப்பான கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பாராசூட் உதவியுடன் விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு, ரோவரின் சக்கரங்கள் செவ்வாய் கிரகத்தை தொடும்வரை பதிவாகி உள்ளன.

ரோவர் ஜெசெரோ கிரேட்டர் பகுதியில் தரையை நெருங்கும்போது தூசி எழுந்ததால் அந்த காட்சிகள் தெளிவாக இல்லை. ரோவர் செவ்வாயில் இறங்கும்போது, அதில் இணைக்கப்பட்டிருந்த கேமராக்களில் 7 கேமராக்கள் இயக்கப்பட்டு இந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆஸி. அணியை பந்தாடி நியூசிலாந்து வெற்றிநடை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 4 ஓவர்களில் 19 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மார்ட்டின் கப்தில் ரன் எதுவும் எடுக்காமலும், டிம் செய்பெர்ட் 1 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது வீரராக களம் கண்ட டேவோன் கான்வே அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினார். அவர் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து அசத்தினார். அவருடன் இணைந்த கிளைன் பிலிப்ஸ் (30 ரன்கள், 20 பந்து, 3 சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் (26 ரன்கள், 15 பந்து, 3 பவுண்டரி) ஆகியோர் வேகமாக ரன் சேர்த்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று மட்டையை சுழற்றிய டேவோன் கான்வே 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும்.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. டேவோன் கான்வே 59 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 99 ரன்னும், மிட்செல் சான்ட்னெர் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மயிரிழையில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட டேவோன் கான்வே சர்வதேச 20 ஓவர் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேனியல் சாம்ஸ், ஜய் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. நியூசிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. அந்த அணி 4.2 ஓவர்களில் 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.

இந்த சரிவிில் இருந்து கடைசி வரை அந்த அணியால் மீள முடியவில்லை. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசி கட்ட விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் காலி செய்தனர்.

17.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 131 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 45 ரன்னும், ஆஷ்டன் அகர் 23 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 1 ரன்னிலும், அறிமுக வீரர் ஜோஷ் பிலிப் 2 ரன்னிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். நியூசிலாந்து தரப்பில் சோதி 4 விக்கெட்டும், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டும், கைல் ஜாமிசன், மிட்செல் சான்ட்னெர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி டுனெடினில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

யானை – மனித மோதலால் வருடாந்தம் 271 யானைகளும், 85 மனிதர்களும் உயிரிழப்பு!

இலங்கையில் யானை மனித மோதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) ஆராயப்படவுள்ளது.
யானை – மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வெளிப்பட்டது. யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
யானை – மனித மோதல் தொடர்பில் பல வருடகால ஆராய்ச்சி ரீதியிலான அனுபவம் கொண்ட கலாநிதி பிரித்விராஜ் பெர்னாந்து இது தொடர்பான தகவல்களை முன்வைத்திருந்தார்.
இலங்கையில் யானை – மனித மோதல் காரணமாக சராசரியாக வருடமொன்றக்கு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை 271 ஆகக் காணப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் 407 யானைகள் உயிரிழந்திருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
அத்துடன், யானை – மனித மோதல் காரணமாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை 85ஆகக் காணப்பட்டதுடன், 2019ஆம் ஆண்டில் 122 பேர் உயிரிழந்திருப்பது பற்றிய தகவலும் இங்கு வெளியானது
எனவே, யானை – மனித மோதலைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து கோபா குழு கவனம் செலுத்தியிருந்தது.
அதேநேரம், ஒப்பீட்டளவில் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் செயற்றிறன் குறித்து எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி கோபா குழு ஆராயவிருப்பதுடன், 25ஆம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்றிறன் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

நேற்று மாத்திரம் மேல் மாகாணத்தில் 290 பேருக்கும் மத்திய மாகாணத்தில் 80 பேருக்கும் கொரோனா

மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 290 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 175 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 77 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 38 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் நேற்று 80 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 41 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 26 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 13 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது! 21/4 தாக்குதல் குறித்த அறிக்கையும் சமர்ப்பிப்பு!!

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. 23,24 ஆம் திகதிகளிலும் சபை அமர்வுகள் நடைபெறவுள்ளன.

இன்று இலங்கை வருகிறார் இமரான் கான் – முக்கிய உடன்படிக்கைகளிலும் கைச்சாத்து

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்கவுள்ளார்.

அதனையடுத்து விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு கௌரவமளிக்கும் வகையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்தித்து இருதரப்பு

பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. பிரதமருடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையையடுத்து அலரிமாளிகையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும்கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை மற்றும் பாகி ஸ்தான் பிரதமர்கள் முன்னிலையில்மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தையுடன் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானதொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலும் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவிருந்த நிலையில் அது பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் பாகிஸ்தான் பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாகவும் இவ் வருடத்தில் இலங்கைக்கு சர்வதேச தலைவர் ஒருவர் விஜயம் செய்யும் முதல் முறையாகவும் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

உதயாவை சீண்டும் திலகருக்கு பதிலடி கொடுத்து பிலிப் விசேட அறிக்கை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தை அதன் பிரதித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் கையகப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தில் எந்த விதமான உண்மையும் கிடையாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” தொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆம் ஆண்டு அமரர் வீ. கே. வெள்ளையன் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும். அதற்கென சொந்தமான கட்டிடம் எதுவும் இல்லாத போதிலும் ஹட்டன் நகரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
தொழிற்சங்கப் பணியில் திறமையாக செயற்பட்டு வந்த இந்த சங்கத்தின் ஸ்தாபகர் வெள்ளையன் மறைவுக்குப் பின்னர் 1980 களின் இறுதியில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு ஓர் உறுப்பினர் தெரிவாகியிருந்தார். அடுத்து வந்த தேர்தலிலும் ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய உறுப்பினர்கள் இருந்தார்கள்.
இந்த நிலையில் தொழிலாளர் தேசிய சங்கம் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. சங்கத்தை வேறு சிலர் கைப்பற்றிக் கொண்டதோடு, அதன் ‘மயில்’ சின்னமும் விற்கப்பட்டிருந்தது. அலுவலகத்துக்கு உரிய மாதாந்த வாடகை, உத்தியோகத்தர்களின் சம்பளம் முதலானவற்றை வழங்க முடியாத நிலையில் அதன் அங்கத்தவர்கள் பலர் மாற்றுத் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டு வந்தார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் தான் இப்போதைய எமது தலைவர் பழனி திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுப்பேற்றார். அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால் சங்கம் புத்துயிர் பெறத் தொடங்கியது. ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, உத்தியோகத்தர்களுக்கு சம்பளம், அவர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றோடு, அலுவலகக் கட்டிடத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை முதலானவற்றையும் செலுத்தி மீண்டும் சங்கத்தை எழுச்சி பெறச் செய்தார்.
அதேநேரம், தலைமை அலுவலகக் கட்டிடம் அமைந்துள்ள கட்டிடத்தை உரிமையாளர் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்த போது, அதை பிரதித் தலைவர் உதயகுமார் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்து 2009.06.10 இல் தமது பெயரில் விலைக்கு வாங்கிக் கொண்டார். அதற்கான சாட்சிகளில் ஒருவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கையொப்பமும் இட்டிருந்தார். அதே கட்டிடத்தில் அலுவலகம் தொடங்கி இயங்கிவருகிறது. எனினும், அதற்கான வாடகை எதனையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பிரதித் தலைவர் உதயகுமார் இ.தொ.கா. வில் இணைந்து கொள்ள நேர்ந்த போதும் அவர் எமது தலைவர் திகாம்பரத்தைப் பற்றிய விமர்சனத்தையோ, கட்டிடத்துக்கு வாடகை தர வேண்டும் என்ற கோரிக்கையையோ முன்வைத்தது கிடையாது.  அரசியல், தொழிற்சங்கப் பணிகள் வழமைபோல் இன்றும் இடம்பெற்று வருகின்றன.
எமது சங்கத்தைப் பொறுப்பேற்ற தலைவர் திகாம்பரம் அதன் அரசியல் பிரவேசத்துக்கு பாரிய பங்களிப்பை செய்து அரசியலில் அஞ்சா நெஞ்சம் படைத்தவராக இருந்த அவரது தூர நோக்கினால்  மலையகத்தில் அரசியல் மாற்றத்துக்கும், அபிவிருத்திப் பணிகளுக்கும் காரணமாக இருந்துள்ளார். அதற்குப் பக்கபலமாக பிரதித் தலைவர் உதயா இருந்து வந்துள்ளார். அதன் பயனாக 2011 ஆம் ஆண்டு எமது சங்கத்தின் சார்பில் ஒரு உறுப்பினரைக் கொண்டிருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் 2015 இலும், 2020 இலும்  இரண்டாக அதிகரித்திருந்தது.
அதேபோல், 2013 இல் மத்திய மாகாண சபையில் மூன்று உறுப்பினர்களையும், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 40 உறுப்பினர்களையும் பெற்றுக் கொளளக் கூடியதாக இருந்தது. தொழிற்சங்க அங்கத்தவர் தொகையும் அதிகரித்திருந்தது.
இவ்வாறு கட்சி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய நேரத்தில், கட்சியில் பிளவுகளை ஏற்படுத்தி, எமது கட்சியோடு இணைந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்த எம். உதயகுமார் போன்றோர் கட்சியில் இருந்தால் தாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால், அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி இ.தொ.கா. வில் இணைந்து கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே  காரணமாக இருந்துள்ளார். எனினும், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உதயகுமார் மீண்டும் எமது கட்சியுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் மீண்டும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இரண்டாக தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது, கட்சியிலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தலைமைக்கு எதிராக செயற்பட்ட காரணத்தால் கட்சியின் உயர் மட்டக் குழுவின் ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய, அண்மையில் இடைநிறுத்தப்பட்டும், வெளியேற்றப்பட்டும் உள்ளார்கள். கட்சியின் ஊடாக அரசியலுக்கு பிரவேசித்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களை நாம் வெளியேற்றுவதற்கு  முன்னதாகவே, தாங்களாகவே கட்சியின் பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்து விட்டதாக ஊடகங்களில் தெரிவித்து வந்தவர்கள், இப்போது உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்களாக கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக அவதூறு பரப்புவதிலும், அனாவசியமான விமர்சனங்களை மேற்கொள்வதிலும் குறியாக இருந்து வருகின்றார்கள்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கும் என்ற உண்மை நிலையை எமது அங்கத்தவர்கள் நன்றாக உணர்வார்கள். நாம் என்றும் போல, கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், ஒருவரே தொடர்ந்து பதவி வகித்து சுகபோகம் காணுவதற்கு இடமளிக்காத வகையில் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கவும், உத்தியோகத்தர்களை ஜனநாயக ரீதியில் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யவும் தயாராக இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி பெருந்தோட்டக் கம்பனிகள் முடிவு!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, சம்பள நிர்ணய சபையின் கீழ் செயற்பட அனைத்து நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன என்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறின. எனவே, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி, சம்பள நிர்ண சபையின்கீழ் செயற்படுவதற்கு அனைத்து நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.

பொறுப்பு வாய்ந்த முகாமைத்துவத்தினர் என்ற அடிப்படையில், செய்யக்கூடிய விடயங்களுக்கே தங்களுக்கு இணங்க முடியும். அந்தவகையில் 725 ரூபா, 75 ரூபா என்றவாறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், இவை அனைத்தும் அவசியமில்லை என்றும், தங்களுக்கு வெறுமனே 1,000 ரூபா வேண்டும் என்றும் எவ்வித அடிப்படையும் இன்றி தொழிற்சங்கங்கள் கூறின.

தற்போது இந்தப் பிரச்சினை தங்களின் கரங்களை மீறி சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அதன் தீர்மானத்திற்கு அமைய செயற்பட வேண்டும். சம்பள நிர்ணய சபை தீரமானம் மேற்கொண்டு, வர்த்தமானியில் அறிவித்தால், அதுவே ஆகக்குறைந்த வேதனமாகும்.” – எனவும் ரொஷான் ராஜதுறை குறிப்பிட்டார்.

இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 223 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 75 ஆயிரத்து 110 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 667 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 445 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! பஸில் – மங்கள இரகசிய சந்திப்பு?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகாதபோதிலும், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

தெற்கு அரசியலில் பஸில் ராஜபக்சபோல மங்கள சமரவீரவும் முக்கிய புள்ளியாவார். ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாகவே இருவரும் கருதப்பட்டனர், படுகின்றனர்.

பாராளுமன்ற அரசியலுக்கு விடை கொடுத்தாலும் மங்கள சமரவீர இன்னும் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓயவில்லை. சஜித் அணியுடனான உறவும் நல்லதாக இல்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பஸில் -மங்கள சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளதா என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பீரிஸ் மற்றும் சாகர காரியசம் ஆகியோரிடம் இன்று கேள்வி எழுப்பட்டது. குறித்த தகவலை அவர்கள் நிராகரிக்கவில்லை.

” தங்களுக்கு தெரிந்தவரை அவ்வாறானதொரு சந்திப்பு நடைபெற்றிருக்காது. இருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அந்தவகையில் சந்தித்திருக்கவும் கூடும்.” – என்ற தொனியிலும் கருத்து வெளியிட்டனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

19 வயது இளைஞனுக்கு எமனான சைக்கிள்: புசல்லாவை பகுதியில் சோகம்!

0
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகலை, கித்துல்பெந்த பகுதியில் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சைக்கிளில் இருவர் பயணித்துள்ள நிலையில், திடீரென...

லக்னோவிடம் வீழ்ந்தது சிஎஸ்கே!

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற...