Home Blog Page 3626

‘பொருளாதாரத் தடைகள் வராதவிதத்தில் ஜெனிவா சவாலை எதிர்கொள்வோம்’

இலங்கைமீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படாத விதத்தில் செயற்படக்கூடிய ஆற்றல் தற்போதைய அரசுக்கு இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன   தெரிவித்தார்.

இலங்கைமீது பொருளாதாரத் தடைகள் வரக்கூடும், இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் வர்த்தகர்கள் மத்தியில் இருக்கின்றது. இது தொடர்பில் தங்கள் கருத்து என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கையின் பொருளாதாரத்தில் கைவைப்பதற்கு சில மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன. அவ்வாறான நாடுகளுக்கும், அங்குள்ள அமைப்புகளுக்கும் யதார்த்த நிலைமை குறித்து எடுத்துரைக்கப்பட்டும். அத்துடன், அவர்கள் அறிந்திராத பல தகவல்களை முன்வைப்பதற்கு இலங்கையால் முடியுமாக இருக்கின்றது.

இலங்கையில் முற்போக்கு சக்தியொன்று நாட்டை ஆளும்பட்சத்தில் தமது நாட்டுக்கு எதிரானவற்றை தோற்கடிப்பதற்கே நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனவேதான் எமக்கு ஏதோவொரு விதத்தில் அழுத்தங்களை கொடுப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.

பொருளாதாரத்தடை, பொருளார வீழ்ச்சி ஆகியன குறித்து அறிவிப்புகள் வெளி வந்தாலும் அவை நடைமுறைக்குவராத வகையில் பார்த்துக்கொள்ளக்கூடிய – செயற்படக்கூடிய ஆற்றல் இலங்கை அரசுக்கு இருக்கின்றது.” – என்றார்.

கிழக்கில் களமிறங்க தயாராகிறார் ஜே.ஸ்ரீரங்கா!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களை இணைத்துக் களம் இறங்கவுள்ளதாக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரங்காவின் தேர்தல் அணிக்கு கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டபோதிலும் அதற்கு ஊடகவியலாளர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 19 ஆம் திகதி குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாலும் தற்போதுதான் தகவல்கள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் மட்டும் 47,760 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 47 ஆயிரத்து 760 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 940 தொற்றாளர்களில் 618 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில்  27,243 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 14,865 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில்5,652 பேருக்கும், இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

1000 ரூபாவை ஏற்க முடியாது – சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கமும் தனியார் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.

அண்மையில் கூடிய சம்பள நிர்ணய சபை, இறப்பர் மற்றும் தேயிலை துறைசார்ந்த பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை 900 ரூபாவாகவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 100 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்த நிலையில், சம்பள உயர்வு அதிகரிக்கப்படுவது, சிறுதோட்ட உற்பத்தியாளர்களையும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நடத்துகின்றவர்களையும் பெரிதும் பாதிக்குமென்று இந்தசங்கங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, சம்பள நிர்ணய சபையின் இந்த தீர்மானத்துக்கான ஆட்சேபனையை முன்வைக்கவிருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களது ஒன்றியமும் தெரிவித்துள்ளது.

தனி வழி செல்ல தயாராகும் ம.ம.மு., கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம்!

மலையக மக்கள் முன்னணி தனிவழி பயணத்துக்கு தயாராகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கட்சியையும், தொழிற்சங்க நடவடிக்கையையும் பலப்படுத்தும் நடவடிக்கையில் முன்னணி இறங்கியுள்ளது.

இதன்படி முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணனின் ஆலோசனையின் பிரகாரம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உயர்பீட உறுப்பினரும், தொழிற்சங்க பிரிவின் நிதிச்செயலாளருமான  புஷ்பா விஸ்வநாதன் மேற்கொண்டுவருகின்றார். நேற்று முன்தினம் உடபுஸல்லாவ பகுதியில்கூட மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

20 ஐ ஆதரித்த மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை, அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு தன்னிச்சையான முறையில் ஆதரவு உட்பட முன்னணியின் சில தன்னிச்சையான நடவடிக்கைகளால் முற்போக்கு கூட்டணியின் இதர பங்காளிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.

இனிவரும் தேர்தல்களில் மலையக மக்கள் முன்னணி இன்றியே போட்டியிட வேண்டும் எனவும் கூட்டணி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையிலேயே தனிவழிக்கான ஆயத்தங்களில் ராதா இறங்கியுள்ளார்.

ஐ.பி.எல். இறுதி ஏலப்பட்டியலில் யாழ். இளைஞன் வியாஸ்காந்த்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் விடும் பட்டியலில் இலங்கை எல்.பி.எல் வீரர் யாழ். இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்காக வீரர்களை எடுப்பதற்கு ஏலமும் நடைபெற இருக்கிறது. வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏலப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்தாண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கை மூடிமறைக்கப்படுமா?

21/4 தாக்குதல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகளை ஒளிக்கமாட்டோம். கூடிய விரைவில் சபையில் முன்வைக்கப்படும் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இவ்விரு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், விவாதத்துக்கு நாட் வழங்கப்படும் என சபை முதல்வர் குறிப்பிட்டார். அதுவே அரசின் நிலைப்பாடு. ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படாமல் மறைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நாம் அவ்வாறு செய்யமாட்டோம். ஒளிக்கவும் மாட்டோம். அறிக்கைகள் கூடிய விரைவில் முன்வைக்கப்படும். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் இதனையே விரும்புகின்றனர்.” – என்றார்.

73,644 பேருக்கு கொரோனா – 66,984 பேர் குணமடைவு

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 73  ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 66 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 281 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 5,634 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 5 ஆயிரத்து 634 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 684 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 3,839 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில்  768 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 27,310 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் ஷாலினி

ஷாலினியை 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஷாலினி மலையாளத்தில் அனியாத பிறவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தமிழில் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ஷாலினியே கதாநாயகியாக நடித்தார்.

இதுதான் ஷாலினி தமிழில் அறிமுகமான முதல் படம். இந்த படம் வெற்றி பெற்றதால் வாய்ப்புகள் குவிந்தன. அஜித்குமார் ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் நடித்த அலைபாயுதே இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பின்னர் அஜித்குமாரும் ஷாலினியும் காதலித்து 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினியை 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

0
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு - செலவுத்...

தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தாக்குதல்: முகாமையாளர்களை இடமாற்றக்கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

0
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு   தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, உடபுஸ்ஸல்லாவ - பெயாலமன்ட் (Blairlomond) தோட்டத்தைச் சேர்ந்த சென்மார்கிரட் பிரிவின் தொழிலாளர்கள் இன்று...

” இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு”

0
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல்...