Home Blog Page 3654

‘ஐ.தே.க. வழங்கிய பதவியை நிராகரித்தார் நவீன் திஸாநாயக்க’

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை பொருத்தமான நபரொருவருக்கு வழங்குமாறுகோரி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நவீன் திஸாநாயக்க இன்று (26) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் நவீன் திஸாநாயக்கவை நீடிக்க வைப்பதற்கு கட்சியின் மத்தியசெயற்குழு அண்மையில் முடிவெடுத்திருந்தது. இந்நிலையிலேயே நவீன் இவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கட்சி உறுப்புரிமை மற்றும் செயற்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்த்து தனக்கு போதும் எனவும், பிற பதவிகள் அவசியமில்லை எனவும் நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

‘மலையக வீட்டுத் திட்டத்துக்கு மேலதிகமாக 3 பேர்சஸ் காணி வழங்க அமைச்சரவை அனுமதி’

மலையக பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீட்டுத் திட்டத்துக்கு மேலதிகமாக 3 பேர்சஸ் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே 07 பேர்சஸ் காணி ஒதுக்கப்பட்டுவந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க இனிவரும் காலப்பகுதியில் 10 பேர்ச்சஸ் காணியிலேயே வீடுகள் அமையவுள்ளன.

கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்தை முன்னெடுப்பதற்காகவே மேலதிகமாக 3 பேர்ச்சஸ் காணி வழங்கப்படவுள்ளது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜீவன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே குறித்த பத்திரத்தை அமைச்சரவையில் நேற்று முன்வைத்துள்ளார்.

‘விழி பிதுங்கி தவிக்கும் ராஜபக்ச அரசு’

“எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு, தெருவில் இறக்கி, அரசியல் செய்த ராஜபக்ச அரசு, இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்பு மாவட்ட எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இது இவர்களது இனவாத பரம்பரை பழக்கம். எமது நல்லாட்சியின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வு திட்டத்தை, புதிய அரசியல் அமைப்பாக நாம் கொண்டு வர முயற்சி செய்த போது, அதை எதிர்த்து நாட்டில் பேரினவாத தீயை பற்ற வைத்தவர்கள் இவர்களாகும். இவர்களை ஒதுக்கி தள்ளி ஆரம்பித்த பணியினை முடிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை.

அதைபோல், அமெரிக்க அரசுடன் எம்சிசி ஒப்பந்தம் குறிந்து நாம் பேசிய போது, அதை எதிர்த்து நாட்டை தீ வைத்து கொளுத்தி, இதுபற்றி ஒன்றுமே தெரியாத, வண. உடுதும்பர காஸ்யப்ப என்ற பெளத்த தேரரை கொண்டு வந்து எம்சிசிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தவர்கள், இவர்களாகும்.

பின்னர் ஆட்சிக்கு வந்த உடன், எம்சிசி ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இனாமாக தர இருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துக்கு ஆசைப்பட்டு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள். எம்சிசி ஒப்பந்தத்தில், 70 விகிதம் நல்லதே என உதய கம்மன்பில என்ற தமிழ், முஸ்லிம் மக்களை சதா கரித்து கொட்டித்தீர்க்கும் அமைச்சர் சொன்னார். ஆனால், கடைசியில் “சரிதான் போங்கடா” என, அமெரிக்கா எம்சிசி ஒப்பந்தத்தையும், 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் எடுத்துக்கொண்டு போயே போய் விட்டது.

“ஐயோ, கைக்கு வந்தது, வாய்க்கு எட்டவில்லையே” என கையை விட்டு போய்விட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நினைத்து நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது.

அதைபோல், கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளை பங்காளிகளாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது, அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு தெருவில் இறக்கி அரசியல் செய்த, மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய கூட்டணி, இன்று நந்தசேன கோடாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சி அமைத்தவுடன், சுருதி இறங்கி பேசுகிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதவும் முடியாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள, இதே கொழும்பு துறைமுகத்தில் 85 விகித பங்குரிமையுடன் இவர்கள் சீனாவின் சைனா மெர்ச்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள சீஐசீடி என்ற இன்னொரு முனையத்தை திரும்பி வாங்கவும் முடியாமல், கோடாபய ராஜபக்ச அரசாங்கம், விழி பிதுங்கி போய் நிற்கிறது.

இந்நிலையில் இந்த அரசில் இருக்கும் ஒரு அரை அமைச்சரான நிமல் லான்சா, “கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை யார் தடுத்தாலும், இந்தியாவுக்கு வழங்கியே தீருவோம்” என வெட்டி வீறாப்பு பேசுகிறார். இதை இவர் இன்றைய எதிரணியான எங்களிடம் கூற தேவையில்லை. தெரியாமல் வாக்களித்த பொதுமக்களிடம் கூற தேவையில்லை.

எதிர்கட்சியில் இருக்கும் போது இவர்களே ஊட்டி வளர்த்த இவர்களது கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர், வண. முருத்தெட்டுகம தேரர் ஆகிய பெளத்த தேரர்களிடம்தான் கூற வேண்டும்.” – என்றார்.

உலகளவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஒரு வருடம் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியே 3 லட்சத்து 64 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியே 23 லட்சத்து 43 ஆயிரத்து 692 பேர் குணமடைந்துள்ளனர்.

 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 50 ஆயிரத்து 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளங்கனில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது ஆட்டோ – மூவர் படுகாயம்!

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா கிளங்கன் பகுதியில் ஆட்டோவொன்று  இன்று (26)  அதிகாலை 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 03 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும், சாரதியுமே காயமடைந்துள்ளனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

‘பெருந்தோட்ட வீடமைப்புக்கான பெறுமதியின் 50  வீதத்தை பயனாளிகளிடமிருந்து அறவிட முடிவு’

பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிக்கு மேலதிகமாக இந்திய அரசாங்கமும் இவர்களுக்கான வீட்டு திட்டத்திற்கு உதவியுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு 550 சதுர அடியை கொண்ட வீட்டுடன் இரண்டு வீடமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வீடொன்றை அமைப்பதற்காக 7 பேர்ச் காணி, மேலதிகமாக 3 பேர்ச் காணி அதாவது கால்நடை வளர்ப்புக்கான தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,

ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்டு மிகவும் பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்தல்

தோட்ட தொழிலாளர்களுக்கு லயின் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 7 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்பு மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களுடன் 550 சதுர அடிகளைக் கொண்ட 02 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இம்முன்மொழிவுத் திட்ட முறைமையின் கீழ் வீடுகளை வழங்கும் போது பின்பற்றுகின்ற நடைமுறைகள் மாறுபடுகின்றமையால் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளதால், தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றுவதற்கும், அதற்கமைய கீழ்க்காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக   பிரதமர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தற்போதுள்ள லயின் அறைகளை அகற்றி குறித்த இடத்திலேயே புதிய வீடுகளை அமைத்தல்

• வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துக்கள் இருப்பின், மற்றும் லயின் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இடவசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடமைப்பை நிர்மாணித்தல்

• பிற்காலத்தில் குறித்த வீடுகளை இருமாடி வீடுகளாக நிர்மாணிக்கக் கூடிய வகையில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்திற்காக 1.3 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணித்தல்

• கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒதுக்கி வழங்கல்

• வீடமைப்பிற்கான பெறுமதியின் 50  வீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும், அதற்காக 20 வருடகாலம் வழங்குதலும்

• லயின் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரைக்கும் வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல்

‘தபால் ஊழியர் இன்மையில் கலஹாவில் தேங்கி கிடக்கும் கடிதங்கள்’

கலஹா குரூப் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். எனினும், இவர்களுக்கு வரும் – அனுப்படும் கடிதங்கள், முக்கிய ஆவணங்கள் வீடுகளுக்கு வராமல், கலஹா காரியாலத்திலேயே தேங்கி – குவிந்து கிடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தோட்டத்துக்கு பொறுப்பான நபர் ஒருவர் ஊடாக கடிதங்கள் எடுத்துச்செல்லப்பட்டாலும் அவை உரிய முறையில் மக்களிடம் சென்றடையாமல் மீண்டும் திருப்பி அனுப்பும் நிலைக்கு உள்ளாக்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கலஹா மேற்பிரிவு, கிதுல்முல்ல, அப்பர் டொனாலி, மாசிமலை, மல்பெரி, எட்ரி டிவிசன்  ஆகிய பகுதிகளுக்கான கடிதங்களே சரியான முறையில் விநியோகிக்க உத்தியோகத்தர் இல்லாமையால் இவ்வாறு தேங்கி கிடக்கின்றன.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஹட்டனில் போராட்டம்

இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் அட்டன் மல்லியப்பு சந்தியில் மலையக சிவில் அமைப்புகள் இன்று (26.01.2020) போராட்டத்தில் ஈடுபட்டன.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் அதானி நிறுவனம் ஆழமாக காலூன்றுவதை கண்டிக்கும் பதாதைகளும் இருந்தன.

இந்திய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும், சிறு விவசாயிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் நசுக்குவதில் இருந்து அவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி 60 நாட்கள் நடைபெறும் தொடர் போராட்டத்தில் இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளதற்கு இதன்போது அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய மத்திய அரசுக்கு கண்டனமும் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் அதானி கம்பனி தற்போது இலங்கையின் கிழக்கு முனையத்தை பெற்றுக்கொள்வது போல ஏனைய துறைகளின் நிலங்களையும் பெறுவதற்கு திரைமறைவில் சதி நடப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிலங்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்திய நிறுவனமான அதானியின் செயற்பாடுகளை இந்திய பிரஜைகளே கண்டித்து வெறுக்கும் நிலையில் அந்நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதை அனுமதிக்க முடியாது, இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவும் கூடாது எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

க.கிசாந்தன்

‘1000 ரூபாவை கையிலெடுக்கிறது சம்பள நிர்ணயச்சபை’

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பள நிர்ணய சபை ஊடாக மேற்கொள்வதற்கு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த யோசனை வருமாறு,

இரத்தினபுரியில் அறநெறி மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அற நெறி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

இப்பகுதியை பொறுத்தவரையில் சகல மதங்களையும் சார்ந்த அறநெறிப் பாடசாலைகள் வார இறுதி நாட்களில் அப்பகுதி மத வழிபாட்டுத்தலங்களிலும் பொது இடங்களிலும் இடம் பெற்று வருகின்றன.
இவ்வாறு வழிபாட்டுத்தலங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத போதனைகளை பெற்று வருகின்றனர். இவர்களை இலக்கு வைத்து போதைவஸ்து விற்பனையாளர்கள் மிகவும் சூட்சுமமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயமாக இம் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு இப்பிரதேச சர்வ மத மற்றும் சமூக நல அமைப்புகள் வேண்டுகோள் விடு க்கின்றன.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...