Home Blog Page 3655

‘மேலும் மூன்று எம்.பிக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்’

ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர் ஒருவரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயெ இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியில் வசந்த யாப்பா பண்டார பங்கேற்றிருந்தார். இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோரும் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

இதன்காரணமாகவே மேற்படி மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளனர்.

1000 ரூபாவை வழங்க அமைச்சரவை நேற்று அனுமதி – அரச ஊடகம் தகவல்

தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் 1000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று (25) கூடிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது என ‘தினகரன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரம்தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அமைச்சரவை இம்முடிவுக்கு வந்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்பதால் அதனை உடனடியாக நிறைவேற்றவேண்டுமென அமைச்சர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையின் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதில் பிரச்சினை காணப்பட்டதோடு, தொழில்தருநர் விரும்பாவிடில் சம்பள நிர்ணய சபையினூடாக அம்முடிவை செயற்படுத்த முடியுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நிதி அமைச்சின் முடிவினை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாக அறிந்த ஜனாதிபதி இந்த அமைச்சரவைகூட்டத்திலேயே அதனை அனுமதிக்கவேண்டுமென கூறியுள்ளார்.

அதன் பிரகாரம் சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் முடிவுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

‘சோளப் பயிர்களுக்கு மத்தியில் கஞ்சா வளர்த்த சூத்திரதாரி கைது’

மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டமாறுவயில் சோள பயிர்களுக்கு மத்தியில் வளர்க்கப்பட்ட இரண்டு கஞ்சா செடிகளை மடூல்சீமை பொலிஸார் கைப்பற்றியதோடு ஐம்பது வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து SI பியந்த தலைமையிலான குழுவினர் ஸ்தானத்திற்கு விரைந்து சோளம் பயிர் செய்யப்பட்டிருந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது மூன்றரை அடி உயரமான இரண்டு கஞ்சா செடிகளை மீட்டு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

செய்தி ராமு தனராஜா

நேற்று மாத்திரம் 737 பேருக்கு கொரோனா – நால்வர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று மாத்திரம் 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 337 பேர் குணமடைந்துள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 55 ஆயிரத்து 288 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

‘பெருந்தோட்ட விவகாரங்களைக் கையொளும் பொறுப்பு வடிவேல் சுரேஷிடம்’

ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்தோட்டத்துறை தலைவராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போது வடிவேல் சுரேசுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.

பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை

கன்னட பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற நடிகை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கன்னட பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் நடிகை ஜெயஸ்ரீ ராமையா. அந்த சீசனில் பங்கேற்ற ஜெய ஸ்ரீக்கு அவர் எதிர்பார்த்ததுபோல வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு 22-ஆம் திகதி, ஜெய ஸ்ரீ அவரது  பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை எண்ணம் குறித்த ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “ நான் முடித்துக்கொள்கிறேன். இந்த உலகத்துக்கும் மன அழுத்தத்திற்கும் குட் பாய்” என்று பதிவிட்டார்.

இந்த  பேஸ்புக் பதிவு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அந்தப் பதிவை நீக்கிய அவர், அதன் பின்னர் தான் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பதிவிட்டார். இந்நிலையில் அவர் இன்று பெங்களூரு, மகடியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான (Uppu Huli Kara) படத்தில் அறிமுகமான இவர் (Malashree) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

‘பசறை பகுதியில் இதுவரை 18 மாணவர்களுக்கு கொரோனா’

பசறை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இரு பாடசாலை மாணவர்களுக்கும், கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்ட கோணக்கலை மற்றும் உடகம பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இன்று தொற்றுறுதி செய்யப்பட்ட நால்வரையும் காஹல்ல தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இன்றைய தினம் தொற்றாளர்களோடு நெருங்கிய உறவை பேணியவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 200 இற்கு அதிகமானோரின் பி.சி.ஆர் மாதிரிகள் சோதனைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை பசறை பிரதேசத்தில் 18 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாற்பதிற்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நடராஜா மலர்வேந்தன்

‘நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும்’ – பிரதமர்

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று விரும்புவமாக கௌரவ பிரதமர் மஹிந்த இன்று (2021.01.25) தெரிவித்தார்.

ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முன்னணியில் இருப்பதாக தெரிவித்த   பிரதமர், சட்ட தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், பிரச்சினைகளை திறம்பட தீர்ப்பதற்கும், நீதிமன்றம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய நாம் அனைவரும் வழக்கற்றுப் போன முறைகளிலிருந்து விலகி அணுகுமுறையையே மாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் உரையாற்றுகையிலேயே   பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட அளுத்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு பதிலாக கட்டப்படும் புதிய நீதிமன்ற வளாகம் 06 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படுவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான செலவு 16,500 மில்லியன் ரூபாயாகும்.

நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, நினைவுப் பலகையை திறந்து வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை வருமாறு,

நீதிமன்றம் என்பது ஒரு நாட்டின் அடிப்படை தேவை. அதை நோக்கிய ஒரு வரலாற்று ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

அன்று நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தொடர்ச்சியான திட்டங்களை நாட்டுக்கு முன் வைத்தோம். அதற்காக மக்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றோம்.

நாங்கள் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாட்டின் பொதுமக்கள் விரும்பினர். நீதித்துறையிலும் இதேபோன்ற நம்பிக்கை உள்ளது.

அரசியல் ரீதியாக நாம் எவ்வாறான எண்ணப்பாட்டை கொண்டிருந்தாலும், இறையாண்மை நாட்டு மக்களிடமேயே உள்ளது. எனவே, நாம் முன்வைக்கும் கொள்கைகளும் சீர்திருத்தங்களும் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வரலாற்றில் ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நாங்கள் பணியாற்றினோம். தனிப்பட்ட குறுக்கீடு மூலம் நாங்கள் ஒருபோதும் சட்டத்தை வளைக்க முயற்சிக்கவில்லை.

எனவே, மக்களின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நம் நாட்டு மக்கள் இன்னும் காலாவதியான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து புதிதாக சொல்ல தேவையில்லை. இந்த அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிப்பது நமது பொறுப்பு.

தற்போதுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவை சமரசக் குழுவால் தீர்க்கப்பட முடியுமானால் அவை அதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

மேலும், வழக்கு விசாரணைகளின் தாமதம் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னதாகவே இறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

இந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, இன்று தொடங்கும் நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இதற்கு முன்னர் கொழும்பில் உள்ள அளுத்கடை கட்டிடங்களின் பாழடைந்த நிலை குறித்து விவாதித்த பின்னர், எந்த தீர்வும் முன்மொழியப்படவில்லை. இன்று நாம் ஒரு நிரந்தர தீர்வைக் கொண்டு வந்துள்ளோம். இதைப் பற்றி நாங்கள் 2014 இல் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அன்றே இதனை தொடங்க விரும்பினோம். ஆனால் ஆட்சி மாற்றத்தினால் அது நிகழவில்லை. ஆனால் இன்று இதைத் தொடங்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு இணையாக நாடு முழுவதும் 100 புதிய நீதிமன்ற அறைகளை நிறுவ நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். நீதித்துறையின் உட்கட்டமைப்பு இந்த முறையில் உருவாக்கப்படும்போது, வழக்குகளை விரைவுபடுத்தலாம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் இது ஒரு வரலாற்று நடவடிக்கையின் ஆரம்பம்.

வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. அந்த வசதி சில சிறைகளுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் முழு நீதி அமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எங்கள் குறிக்கோள். எதிர்வரும் பெப்ரவரி முதல் அந்தப் பணியைத் தொடங்க அமைச்சர் ஆர்வமாக உள்ளார். இது நீதித்துறையின் செயல்திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

பௌதீக மேம்பாட்டின் மூலம் மாத்திரம் நீதித்துறையை மேம்படுத்த முடியாது. அதற்கு மனித வள மேம்பாடு தேவை. சட்டத் துறை தொடர்பான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வு வசதிகளை விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

சட்டத்தை புதுப்பித்து, சட்ட தாமதங்களை தடுக்க செயற்திறன் மிகுந்த முறையில் மோதல்களைத் தீர்க்கும் முறையை வெற்றிகரமாக்குவதற்கு அதன் பங்குதாரர்களான நீதிமன்றம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலாவதியான முறைகளில் இருந்து விலகி அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தை நோக்கும்போது 40 ஆண்டுகளின் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் வெற்றி என்று நான் நம்புகிறேன். அத்தகைய நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைச்சரும் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும், பிரஜைகள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் நாங்கள் எப்போதும் விரும்புகின்றோம். மேலும், நீதித்துறையில் பணியாற்றும் பிரஜைகளுக்கு அந்த நிறுவனங்கள் குறித்த அச்சம் நீங்க வேண்டும்.

இந்த சீர்திருத்தங்களை ஒரே இரவில் நிறைவேற்ற முடியாது என்பது உண்மைதான். நீங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அந்த உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஒரு நாட்டிற்கான தேசிய நலனை, ஒரு சட்டத்தை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளோம். அதற்கு பொருத்தமான சட்ட கட்டமைப்பை நாட்டின் மத்தியில் புதுப்பிப்பதற்கு நீங்கள் உள்ளிட்ட இத்துறையைச் சேர்ந்த அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகின்றோம்.” – என்றார்.

58,813 பேருக்கு கொரோனா – 50,337 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 800 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 337 பேர் குணமடைந்துள்ளனர். 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 54 ஆயிரத்து 934 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

3 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா

மஹியங்கனையில் மூன்று வயதுச் சிறுமியொருவர் உட்பட குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தார்.

மூன்று வயதுச் சிறுமியின் தாய், தந்தை, சகோதரி ஆகியோருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக, மஹியங்கனையில் மேறகொள்ளப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையில் இன்று 25.01.2021 தெரியவந்துள்ளது.

இக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கொழும்பில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றிவிட்டு, விடுமுறையில் குறிப்பிட்ட இவ் வீட்டிற்கு வந்துள்ளார். மூன்று தினங்கள் அவ்வீட்டில் தங்கியிருந்து, மீளவும் கொழும்பின் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியது.

இவரினாலேயே, அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கிழக்காகியுள்ள மேற்குறிப்பிட்ட நால்வரும், காகொல்லை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 25.01.2021ல் அனுப்பப்பட்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...