Home Blog Page 3656

புதையல் தோண்டிய 14 பேர் கொஸ்லாந்தை பொலிஸாரால் கைது!

சட்ட விரோதமாக புதையல் தோண்டிய 14 பேரை, கொஸ்லாந்தை பொலிஸார் இன்று 25.01.2021 கைது செய்துள்ளனர்.

கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார், தும்மல்ஹார என்ற இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 14 பேரையும், கைது செய்தனர்.

அத்துடன், புதையல் தோண்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14பேரும், ஊவா-மாவெலகமைச் சேர்ந்த ஒக்பீல்ட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் விசாரணையின் பின்னர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவித்தார்.

எம். செல்வராஜா – பதுளை

ஐக்கிய மக்கள் சக்தியில் உமாவுக்கு உயர் பதவி!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய யாப்பின் பிரகாரம் கட்சியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போதே கட்சி தலைவரால் உமாசந்திரா பிரகாசுக்கு, பிரதி செயலாளர் பதவிக்கான நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. உமா கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் செத்து மடியும் காகங்கள்

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காகங்கள் இறந்து கிடப்பதனை அடிக்கடி காண முடிவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாத்திற்குள் மட்டும் ஆங்காங்கே ஐந்து காகங்கள் இறந்து கிடந்துள்ளன.

இன்றைய தினமும் நகர் பகுதியில் காகம் ஒன்று தீடிரென கீழே வீழந்து துடிதுடித்து இறந்து விட்டதாகவும் பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதி
கிழித்து பார்த்த போது உள்ளே லஞ் சீற் காணப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு பதவி விலக வேண்டும் – ஜே.வி.பி. வலியுறுத்து

கொரோனா  வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மூடநம்பிக்கைகளுக்கு பின்னால் ஓடி – பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் – என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

காலியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான சுனில் ஹத்துனெத்தி இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் நாட்டில் பரவியபோது நாடு முடக்கப்பட்டு, அதனை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதுமட்டுமல்ல அனைவருக்கும் நிவாரணமும் வழங்கப்பட்டது. செயலணிகள் அமைக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் காத்திரமான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. தேர்தலில் வெற்றிபெற்றார்கள், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் கிடைத்தது. இன்று கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது.  பாணி அருந்தியவர்கள் உட்பட சுகாதார அமைச்சருக்குகூட வைரஸ் தொற்றியுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் இன்னும் சமூகத்தொற்று இல்லை என விளக்கமளிக்கப்படுகின்றது.

பானிமூலம் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியுமென்றால் அதனை அரசாங்கம் சட்டபூர்வமாக செய்திருக்கவேண்டும். அதனைவிடுத்து ஆட்சியாளர்களே பானிக்கு பிரச்சாரம் செய்தனர். மக்களும் அதனை நம்பினர். கடைசியில் அதன்மூலமும் கொரோனா பரவியது. இவ்வாறு நாட்டை கீழ்மட்டத்துக்கு கொண்டுவந்து, பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் அரசாங்கம் பதவி விலகவேண்டும். வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. ஆனாலும் நிவாரணங்கள் இல்லை.” – என்றார்.

இலங்கை ‘சுப்பர் லீக்’ உதைபந்தாட்ட தொடர் பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பம்!

சர்வதேச நாடுகளில் இடம்பெற்றுவரும் தொழில் ரீதியிலான உதைபந்து லீக் தொடர்களைப் போன்று இலங்கையிலும் இவ்வருடம் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

“ ஸ்ரீலங்கா சுப்பர் லீக் உதைபந்தாட்டத் தொடர்” என்ற பெயரில் இம்மாதம் 29ஆம் திகதி கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை உதைபந்தாட்ட சம்மேளனம் செய்து வருகிறது.

இம்மாதம் 29ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டாலும் இதன் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி முதல் ஆரம்பித்து ஜுலை இறுதி வரை நடக்கவுள்ளது.

இத்தொடரில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு போட்டியும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரு போட்டிகளுமாக நடாத்துவதற்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

இதில் பங்குகொள்ளவிருக்கும் வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வரும் உதைபந்தாட்டக் கழகங்களுக்கான தங்குமிட வசதிகளையும், போக்குவரத்து செலவுகள், போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்கான செலவு மற்றும் நடுவர்களுக்கான செலவுகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் முதல் முதலாக நடைபெறவிருக்கும் மேற்படி தொடரில் 10 அணிகள் பங்குகொள்ளவுள்ளன.

ப்ளூ ஈகல் உதைபந்தாட்ட கழகம், களுத்துறை ப்ளூ ஸ்டார், கெழும்பு உதைபந்தாட்ட கழகம், டிபெண்டர் உதைபந்தாட்டக்கழகம், வென்னப்புவை நியூ யங்ஸ் உதைபந்தாட்ட கழகம், கொழும்பு ரத்தினம் விளையாட்டு கழகம், பாணந்துறை ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம், கொழும்பு ரினவுன் விளையாட்டுக் கழகம், கொழும்பு ஸீ ஹோர்க்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் நாவலப்பிட்டி அப்கன்ரீஸ் லயன்ஸ் விளையாட்டுக்கழகங்கள் இத்தொடரில் பங்குகொள்ளவுள்ளன.

இத் தொடரில் இலங்கை தேசிய அணி வீரர்களும், இலங்கை இரண்டாம் தர அணி வீரர்களும், எமது நாட்டிலுள்ள சகல உதைபந்தாட்ட கழகங்களிலுமுள்ள சிறந்த, அனுபவ வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதால் இப்போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தாக்கத்தின் காரணமாக சுகாதார அமைச்சினதும், விளையாட்டுத்துறை அமைச்சினதும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இத்தொடர் நடைபெறவுள்ளதால் ஒரே மைதானத்தில் இத்தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் அடுத்த அணியுடன் இரு போட்டிகளில் விளையாட வேண்டும். அவ்வடிப்படையில் ஒரு அணி 18 போட்டிகளில் விளையாடவுள்ளது. இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி இலங்கை சுப்பர் லீக் உதைபந்தாட்ட சம்பியன்களாகத் தேர்ந்தெடுப்பதற்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த அங்குரார்ப்பண தொடரில் சம்பியனாகும் அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் 5 மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளளது.

அத்தோடு இம்முறை தொடரில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளுக்கும் பணப் பரிசு வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். இத்தொடரில் கடைசியாக இடம்பெறும் அணிக்கும் ஒரு மில்லியன் பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் தொழில் ரீதியான விளையாட்டாக உதைபந்தாட்டத்தை உயர்த்துவதற்கு முதல் அடித்தளமாக இத்தொடரை அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்தொடரை எதிர்வரும் ஆண்டுகளிலும் சிறப்பாகச் செய்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து வருகிறோம்.

இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இத்தொடரை வெற்றிபெறச் செய்வதற்கு சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் (பீபா) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

30 தடவைகள் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வேகப்பந்து வீச்சாளர்

டெஸ்கட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 40 ஓட்டங்களுக்கு  6 விக்கெட்டு களைக் கைப்பற்றினார்.

157-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆண்டர்சன் 30ஆவது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத்தை முந்தினார். மெக்ராத் 29 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி 36 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 6-வது வீரர் ஆண்டர்சன் ஆவார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த  6 வீரர்கள் வருமாறு:-

1.முரளிதரன் (இலங்கை) -67 முறை (132 டெஸ்ட்).

2.வார்னே (ஆஸ்தி ரேலியா)- 37 (145).

3.ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து)- 36 (86).

4. கும்ப்ளே (இந்தியா) 35- (132).

5. ரங்கன ஹேரத் (இலங்கை)-34 (93).

6. ஆண்டர்சன் (இங்கிலாந்து)- 30 (157).

எஜமானுக்கு சிகிச்சை – வைத்தியசாலை வாசலில் 6 நாட்களாக காத்திருந்த நாய்

துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக வைத்தியசாலை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது.

துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட சிறிய, கலப்பின வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி சென்டர்க் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கொண்டு செல்லும்பொழுது ஆம்புலன்ஸ் பின்னாலேயே போன்கக் தொடர்ந்து சென்றுள்ளது. இதன்பின் அவரது வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தது.

ஆனால், அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை. அவருக்கு 6 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவமனைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டு தனது உரிமையாளரை காண ஆவலுடன் காத்திருந்தது போன்கக்.

சென்டர்க்கின் மகள் பலமுறை போன்கக்கை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அது மீண்டும் மருத்துவமனைக்கு ஓடி விடும் என அவர் கூறியுள்ளார். அதனை மருத்துவமனை ஊழியர்கள் துரத்தினாலும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.

இதுதொடர்பாக, அந்த மருத்துவமனை இயக்குனர் புவாட் உகுர் கூறுகையில், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

அதன்பின், 6 நாட்கள் கழித்து சிகிச்சை முடிந்து சென்டர்க் வரும்பொழுது, அவரை கண்ட ஆவலில் தனது வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மனிதர்களை போன்று எங்களுடன் நெருங்கியுள்ளது. உங்களை அது மகிழ்ச்சிப்படுத்தும் என சென்டர்க் கூறியுள்ளார்.

‘சஜித் அணியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டம்’

ஐக்கிய மக்கள் சக்தியின் கன்னி மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (25) முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

கட்சிக்கான அமைப்பாளர்கள் தேர்வு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு இநுதி முடிவுகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 100 அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன் புதிய கூட்டணி அமைக்கும் நடவடிக்கை எந்த கட்டத்தில் உள்ளது எத்தகைய தரப்பினரை உள்வாங்கலாம் என்பது பற்றியும் இக்கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனவரியிலும் தீர்வு இல்லை – இழுபறியில் கூட்டு ஒப்பந்த பேச்சு!

2021 ஜனவரி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டு ஒப்பந்த பேச்சு இழுபறி மட்டத்திலேயே இருக்கின்றது.

பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் தொழில் அமைச்சரின் தலைமையில் இதுவரை 6 சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாகும். எனினும், அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையில் சூழ்ச்சிகரமான சம்பள சூத்திரத்தை கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. அத்துடன், அடிப்படை சம்பளம் ஆயிரம் என்ற கோரிக்கையையும்  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கம் கைவிட்டுள்ளது.

ஜனவரி மாதம் முடிவடைவதற்குள் தீர்வு காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை. எனவே, சம்பளப் பிரச்சினை பெப்ரவரி மாதத்துக்குள்ளும் நுழைகின்றது.

கம்பளை நிருபர் – லாவண்யா

தேசிய பாடசாலைகள்…. உண்மை செய்தி என்ன?

இந்த பதிவை வாசிப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் நுவரெலியா மாவட்டத்துக்கு மட்டும் 16 தேசிய பாடசாலைகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை.

இலங்கை முழுவதும் 1000 தேசிய பாடசாலைகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது ஒரு தேசிய மட்டத்திலான திட்டமாகும். ஆகவே 9 மாகாணங்களிலும் அதில் அடங்கும் மாவட்டங்களிலும் உள்ள எம்.பிக்களோ , அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ இதற்கு தனிப்பட்ட ரீதியாக உரிமை கோர முடியாது என்பதை முதலில் சொல்லி வைக்க விரும்புகிறேன். அது தான் உண்மையும் கூட. அது எப்படி நியாயமாகும் என்று கேட்பவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

புதிய அரசாங்கத்தின் கொள்கை

தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 4 ஆவது அத்தியாயத்தில் பயனுள்ள பிரஜையும் மகிழ்ச்சியான குடும்பமும் என்ற தலைப்பின் கீழ் கல்வி என்ற பிரிவில் பாடசாலை முறையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்ற விடயத்தில் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதான கொத்தணி பாடசாலை முறை பற்றி கூறப்பட்டுள்ளது. அதன் படி ஒரு பிரதேச செயலகத்தில் குறைந்தது 3 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படல் வேண்டும் என்பது பரிந்துரையாகும். நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றன. ஏற்கனவே இம்மாவட்டத்தில் 7 பெரும்பான்மை கல்லூரிகள் தேசிய பாடசாலைகளாக விளங்குகின்றன. ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை (அல் மின்ஹாஜ்– ஹபுகஸ்தலாவை) இருக்கின்றது.

ஆகவே மேலதிகமாக ஒரு பிரதே ச செயலாளர் பிரிவில் 3 பாடசாலைகள் படி 15 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலதிக ஒரு பாடசாலையே முதற்கட்டமாக தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது.

இதில் மூன்று கட்டங்கள் உள்ளன.

1) எந்தவொரு தேசிய கல்லூரியும் இல்லாத 123 பிரதேச செயலகங்களில் உள்ள ஒரு மாகாண பாடசாலையை தேசிய கல்லூரியாக மாற்றுதல். ( இந்த பிரிவிலேயே நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியும் கண்டி மாவட்டத்தில் இராமகிஷ்ணா கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளன)

2) தேசிய கல்லூரிகளாக உருவாக்கம் பெறத்தக்க வகையில் அடையாளம் காணப்பட்ட 673 மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்துதல்.

3) ஏற்கனவே நாட்டிலுள்ள 373 தேசிய கல்லூரிகளை இன்னும் வளங்கள் அடிப்படையில் மேம்படுத்துதல்

ஏனைய பாடசாலைகள் அவ்வாறு தரமுயர்த்தப்பட குறைந்தது ஒரு வருட காலமேனும் செல்லும். அவை இரண்டாம் கட்டத்தில் உள்ளன. ஏனெனில் தேசிய பாடசாலை கட்டமைப்புக்கு அவற்றை ஒரே இரவில் மாற்ற முடியாது. அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(உ+ம்) ஆசிரியர், கட்டிடம், காணி மற்றும் ஏனைய வளங்கள்)

மூன்றாம் கட்டத்தில் ஏற்கனவே தேசிய பாடசாலைகளாக செயற்படும் கல்லூரிகளுக்கு மேலதிக வளங்கள் சேர்க்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதியின் நிபுணத்துவ ஆலோசனை குழுவான வியத்மக அமைப்பினரால் ஜனாதிபதியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டதே சுபீட்சத்தின் நோக்கு திட்டம். இதில் உள்ளூர் அரசியல்வாதிகளினதோ அல்லது வேறு எவரினதோ தலையீடுகள் இருந்ததில்லை. ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மாகாண கல்வித்திணைக்களங்களே ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலுமிருந்து பாடசாலைகளை தெரிவு செய்தன.

(அதற்கான ஆதாரங்கள் உள்ளன)

ஆகவே இது அரசாங்கத்தின் தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் திட்டமாகும்.

மலையக சமூகத்தை பாராளுமன்றில்பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் தமது பிரதேசத்தில் தமிழ் பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக தரமுயர்த்தியவர்களாக இரண்டு பேரை மட்டுமே என்னால் குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

1) எம். சச்சிதானந்தன் (முன்னாள் பிரதி கல்வி அமைச்சர்)

2) எஸ்.இராஜரட்ணம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

முதலாமானவர் பதுளை மாவட்டத்தில் பசறை மற்றும் பதுளை பிரதேசங்களில் தமிழ் தேசிய கல்லூரிகளை தரமுயர்த்த காரணமாக இருந்தார். இரண்டாவது பிரமுகர் (கண்டி மாவட்டம்) தனது காலத்தில் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியை தரமுயர்த்தினார்.

இதற்கு அப்பாற்பட்டு நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ இருந்த எவருமே இங்குள்ள மாகாண பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக தரமுயர்த்துவதற்கு எதிராகவே இருந்தனர். இதன் தாற்பரியம் விளங்காத ஒரு பிரதிநிதி ஒரு முறை நேர்காணலின் போது தும்புத்தடி வாங்குவதற்கும் மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பார்க்க வேண்டும் அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என என்னிடம் கூறியிருந்தார். (நேர்காணலை தேவைப்பட்டால் பதிவேற்றலாம்)

ஒரு கட்டத்தில் சில பாடசாலைகள். தேசிய கல்லூரிகளாக தெரிவு செய்யப்பட இருந்தன அதிபர்களிடம் அது தேவையில்லை என கடிதங்கள் எழுதி வாங்கப்பட்ட சம்பவமும் இங்கு தான் நடந்தது. எனவே தற்போது இந்த தேசிய திட்டத்தில் மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு மாத்திரமே சம்பந்தப்பட்டிருக்கின்றன.

எனினும் இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை கூட சிலர் முகநூலில் இதெல்லாம் நடக்காது ….படம் காட்டுகிறார்கள் என கிண்டல் மற்றும் கோபம் கலந்த பதிவுகளை இட்டு வருகின்றனர். அதற்குக் காரணம் உள்ளது.

ஏனென்றால் இதற்கு முன்னதாக இந்த சமூகத்துக்கென அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும் கிடைக்காமலிருக்கும் விடயங்கள் பல உள்ளன.

அதில் பிரதானமானது தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம்.

இரண்டாவது இந்த சமூகத்துக்கான தனி பல்கலைக்கழகம்.

மூன்றாவதாக தேசிய கல்லூரிகள் என்ற விடயம் உள்ளது.

முதலிரண்டும் கிடைப்பது பற்றிய நம்பிக்கைகளை இந்த சமூகத்திலுள்ளோர் இழந்து விட்டனர். அந்த விரக்தியினாலேயே அவ்வாறான எதிர்மறை கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு நான் கூற வந்த விடயம் முக்கியமானது.

இது அரசாங்கத்தின் கொள்கையாகும். அதிலும் குழறுபடிகளை ஏற்படுத்தி இந்த கல்லூரிகள் உருவாகாமல் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதோ அல்லது இந்த பட்டியலில் உள்ள பாடசாலைகளை மாற்றும் விடயங்களை முன்னெடுக்காமலிருந்தாலே போதும்.

இறுதியாக…..

இந்த பதிவு யாருக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. இந்த விடயம் பற்றி இனி ஆக்கங்கள் எழுத இருப்பவர்களுக்கு சில தகவல்கள் மட்டுமே. மற்றும் படி இலங்கையில் தேசிய கல்லூரிகள் பற்றிய வரலாறு புள்ளி விபரங்கள் தேவைப்பட்டால் உள்பெட்டியில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Sivalingam Sivakumaran
(முகநூலில் இருந்து…)

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...