Home Blog Page 3657

‘இலங்கையில் அபாய கட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல்’

உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே கூறினார்.

இந்த நேர்மறை வீதமானது ஒரு மாதத்துக்கு முன் 3.0 மட்டத்தில் இருந்தது. பின்பு 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்தது.இப்போது 5ஆம் மட்டத்தைக் கடந்து 5.5 அளவில் உள்ளது. இது அதிக அபாயமான நிலையாகும் என அவர் கூறினார்.

எவ்வாறாயினும் வைரஸ் இன்னும் சமூகத்திலிருந்து வெளியாக வில்லை என்றும் குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொட மற்றும் பேலியகொடகொத்தணிகளுடன் தொடர்புடையோராவர் என்றும் தொற்று நோயியல் பிரிவு கூறுகிறது.

ஆனால் அண்மைய தொற்றுக்கள் மேற்படி இரு கொத்தணி களுடனும் தொடர்பற்றவை என்றும் அவர் கூறினார்.

துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து பிற மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறி விட்டது. எனவே இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன என்றார்.

அண்மையில் நாட்டின் பிற மாகாணங்களில் குறிப்பாக தெற்கு, மத்திய மாகாணங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் 100க்கு மேலான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவு என்னதான் கூறினாலும் கொவிட்-19 வைரஸ் சமூகப் பரவலாகியுள்ளதுடன் அது அடிமட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்கின்றது எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே கூறினார்.

மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

‘நாட்டில் இன்று மாத்திரம் 841 பேருக்கு கொரோனா தொற்று’

நாட்டில் மேலும் 492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 841 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். 280 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 54 ஆயிரத்து 551 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘விஞ்ஞான பிரிவை விரைவில் ஆரம்பிக்கவும்’ – செந்தில் தொண்டமான் பணிப்புரை

பதுளை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளில் உயர்தரத்துக்கான விஞ்ஞானப்பிரிவை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு ஊவா மாகாண தமிழ்க் கல்விப்பிரிவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் 10 தமிழ் பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான முன்மொழிவு மறைந்த அமைச்சர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் மூலம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானால் அப்போதைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெருமவிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதுளை மாவட்டத்தில் ஒரே தடவையில் 10 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

அதேவேளை, கடந்த காலங்களில் பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயம், லுனுகலை ராமகிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் , செந்தில் தொண்டமான்,ஊவா மாகாண கல்வி அமைச்சராக இருந்த போது விஞ்ஞான பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அப்பாடசாலைகளில் இருந்து கடந்த 4 வருடங்களாக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சென்றுள்ளனர்.

ஊவா மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் பல்கலைகழகத்தில் விஞ்ஞான கற்கை நெறியை முடித்து விட்டு வெளிவரும் போது தேசிய பாடசாலைகளாக மாற்றம் பெற்று, விஞ்ஞான பீடம் ஆரபிக்கப்பட்ட ஏனைய 8 பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கான நியமனங்களை வழங்க முன்கூட்டியே கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

‘முற்போக்கு கூட்டணியை உடைக்க அரசு விலை பேசி வலை வீசுகிறது’

” தமிழ் முற்போக்கு கூட்டணியை (TPA) பிளக்க, ஆளுகின்ற இந்த அரசு விலை பேசி, வலை வீசுகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியை பிளக்கும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன்.
தமிழ் பேசும் இலங்கை சமூகமும் மன்னிக்காது என நம்புகிறேன்.
என் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து நண்பர்களும் எம்மோடு கரங்கோர்க்க வேண்டுகிறேன்..!”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். 280 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபா கோரி பூண்டுலோயாவில் போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூண்டுலோயா நகரில் இன்று போராட்டம் நடைபெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் தோழர் மஞ்சுள சுரவீர தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

” வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் வழங்கவேண்டிய அரசாங்கம், மாறாக பொருட்களின் விலைகளை அதிகரித்துவருகின்றது. இதனை எம்மால் ஏற்கமுடியாது. ஆகவே, பொருட்கள், சேவைகளின் விலைகள் உடன் குறைக்கப்படவேண்டும்.” – என்று போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் ஆளும் வர்க்கமும், தொழிற்சங்கங்களும் இம்முறையும் கைவிரிப்பதற்கு முயற்சிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் அவர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும். நில உரிமை என்பது அரசாங்கத்திடமே இருக்கின்றது. எனவே, அரசால் கொள்கை ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை கம்பனிகள் ஏற்கவேண்டும்.” – என்றும் அவர்கள் குறிப்பிட்டார்.

க.கிசாந்தன்

9 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுமா? பிரதமர் – சபாநாயகர் அவசர சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி, பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர், சபாநாயகரிடம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்தவாரம் இரு நாட்கள் மாத்திரமே நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

‘பசறை பகுதியில் மேலும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று’

பசறை பிரதேசத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் வீ.ராஜதுரை தெரிவித்தார்.

இதன்படி பசறை நகர பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட இரண்டு மாணவர்களோடு தொடர்புகளை பேணியவர்க்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் அடிப்படையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்களில் பாடசாலை மாணவர்கள் ஆறுபேருக்கும் பெண் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது,

இன்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களை தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி இதுவரை 16 மாணவர்கள் பசறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நடராஜா மலர்வேந்தன்/ ராமு தனராஜா

‘அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கினிகத்தேனையில் போராட்டம்’

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

‘பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளிக்கீழ் கினிகத்தேனையில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்கு இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

” இந்த அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது. அரசியல்வாதிகளுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இல்லை. இவற்றை கண்டிக்கின்றோம்.” என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...