Home Blog Page 3653

மத்திய மாகாணத்தில் 4,148 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் 4 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் இரண்டு பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 546 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 3,066 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 536 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டுக்கு அழைத்து நடவடிக்கை’

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தினார்.

வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு முடியாமல் தவிப்பதாக இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி இப்பணியாளர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

இப்பணியாளர்களை அழைத்துவரும் பயணிகள் விமானங்களுக்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளல் தொடர்பிலும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை பெற முடியுமா என்பது குறித்தும் ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும்  பிரதமர் குறிப்பிட்டார்.

இதுவரை 32000 வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22483 பேர் தமது சொந்த நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

துனிமைப்படுத்தல் நிலையங்களின் இடவசதியை கருத்திற்கொண்டு இதுவரை அப்பணியாளர்களுக்கு நாட்டிற்கு வருவதற்கான விமானச்சேவை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே அவர்கள் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே, ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று மாத்திரம் 748 பேருக்கு கொரோனா – ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் இன்று மாத்திரம் 748 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ளனர். 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 56 ஆயிரத்து 36 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

‘அரசனை நம்பி புருஷனை கைவிட தயாரில்லை’ – அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வேண்டும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

சங்கத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது வஞ்சிக்கபடாமல் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும். அதேபோல தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான தொழில் சலுகைகளும், நலன்புரி விடயங்களும் வழங்கப்படவேண்டும்.

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என வலியுறுத்தி பல சுற்று பேச்சுகள் நடைபெற்றன. எனினும், அவை வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிட்டது. தற்போது  சம்பள நிர்ணயச்சபை ஊடாக சம்பள உயர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் ஆளுந்தரப்பில் கூறப்படுகின்றது.

குறிப்பாக ‘ஆயிரம் ரூபாவரை’ என்ற சொற்பதம்மூலம் அடிப்படை சம்பளம் ஆயிரம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்ல சம்பள நிர்ணயச்சபை தலையிட்டுள்ளதால் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள இதர சரத்துகளுக்கு பொறுப்புக்கூறவேண்டியது யார் என்ற வினாவும் எழுகின்றது.

கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லாவிட்டால் கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடும். 10 நாட்கள் வேலை வழங்கலாம். தொழில் சுமைகளைத் திணிக்கலாம். எனவே, சம்பள உயர்வு வழங்கப்படும் அதேவேளை  தொழில் உரிமைகள் மற்றும் சலுகைகள் என்பனவும் உறுதிப்படுத்தப்படவேண்டும். நலன்புரி விடயங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் அரசனை நம்பி புருஷனை கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. சம்பள நிர்ணயசபையைக்காரணம்காட்டி, எமது மக்களின் தொழில் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது, சுமைகள் திணிக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றோம்.

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்பதுடன் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கான சலுகைகளும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதனை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.”  என்றார்.

‘கொரோனா’வால் கொலம்பியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொலம்பியா நாட்டின் பாதுகாப்பு  அமைச்சர் கார்லோஸ் (வயது -69) உயிரிழந்துள்ளார்.

‘டெல்மார் கீழ் பிரிவு தோட்டத்தில் தீ – ஒரு வீடு தீக்கிரையானது’

உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஒரு வீடு முற்றாக எரிந்துள்ளது.

குறித்த வீட்டில் இருந்த ஐவர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பாக உடபுஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

‘நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று’

நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா’விலிருந்து 51,046 பேர் மீண்டனர்’

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 709 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 834 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 59 ஆயிரத்து 167 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும் ‘ – ம.ம.மு. வலியுறுத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது இனிவரும் காலப்பகுதியிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி., மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பின் பிரகாரம் அடிப்படை நாட்சம்பளமாக 860 ரூபாவும், இதர கொடுப்பனவுகளாக 140 ரூபாவும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம். வாழ்க்கைச்சுட்டெண்ணுக்கமைய அவர்களுக்கான வேதனம் நிர்ணயிக்கப்படவேண்டும். இனிவரும் காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தலையிடவேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் ஏனைய தொழில்சார் உரிமைகளும் இருக்கின்றன. அவை தொடர்பில் கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய சலுகைகளை, உரிமைகளை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

அதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் இன்று படுபாதாளத்தில் விழுந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து. டொலரின் பெறுமதி உச்சம் தொட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்தீரத்தன்மையுடன் வைத்திருக்கும் தகைமையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பது இதன்மூலம் புலனாகின்றது.

வாழ்க்கைச்சுவை அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருட்கள், சேவைகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புபட்ட மஞ்சள் விலையையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘பதுளை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்’

பதுளை மாவட்டத்தில் 10 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உயர்த்துவது தொடர்பில் தமிழ் கல்வி அமைச்சில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது செந்தில் தொண்டமான்,  அப்பாடசாலைகளில் நிலப்பரப்பு மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யுமாறு தமிழ் கல்வி பிரிவின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் இப்பாடசாலைகளில் விஞ்ஞான பாடத்திட்டத்தை தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு பெயர் பட்டியலில் சிபாரிசு செய்தமைக்காக அப்பாடசாலையின் அதிபர்கள் செந்தில் தொண்டமானுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மழை தொடரும்: மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய தினமும் கடும் மழை எதிர்பார்க்கப்படுகின்றது. மலையகத்தில் சில இடங்களில் காலை முதலே மழை பெய்துவருகின்றது. அதேவேளை, 8...

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...