Home Blog Page 3652

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது. .

‘கொரோனா’விலிருந்து ஒரே நாளில் 1,520 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஆயிரத்து 520 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அதிகளவானோர் குணமடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன் 7 ஆயிரத்து 68 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 59 ஆயிரத்து 922 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பன்மூர் தோட்டத்தில் வீட்டுக்குள் நாகப்பாம்பு – அச்சத்தில் மக்கள்

ஹட்டன் பன்மூர் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றின் அறையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 அடி நீலமான இந்த பாம்பு அறையில் காணப்படும் கட்டு ஒன்றின் மீது காணப்பட்டுள்ளது.

இது சாரை பாம்பு என்று ஊகித்த வீட்டு நபர் அதனை பிரம்பு ஒன்றினால் வெளியில் தள்ளிவிட முயற்சித்த போது அது தனது தலையினை விரித்த நிலையில் அது நாகப்பாம்பு என்பதை அறிந்து நிலை தடுமாறியுள்ளார்.

உடனே தன்னை சுதாகரித்த அவர் தனது சகோதரனின் உதவியுடன் அந்த நாகப்பாம்பை ஒரு பிளாஸ்டிக் வாளியினுள் அதனை செல்ல செய்து பாதுகாப்பாக பிடித்துள்ளார்.

இந்த பிரதேசத்தில் நாகப்பாம்பு காணப்படுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை காணப்பட்டுள்ள போதும் இன்றே அதனை தாம் நேரில் கண்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனை பார்வையிட அதிகளவானவர்கள் இவரின் வீட்டிற்கு வருகை தந்ததுடன் அவர்கள் நெருக்கமாக காணப்படும் தேயிலை செடிகளிடையே தாம் சென்று கொழுந்து கொய்வதற்கு தற்போது பயம்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் குளிர் காலநிலையில் இவ்வாறான விச பாம்புகள் காணப்படுவது மிக மிக அறிதான விடயமாக உள்ளதுடன் தற்போது நாகபாம்பின் குட்டி கண்டுப்படிக்கப்பட்டுள்ளதானது இப்பகுதி மக்களை பெரும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. பெரிய நாகப்பாம்புகளும் காணப்படக்கூடும் என்று அச்சப்படுகின்றனர்.

இது தொடர்பாக அட்டன் பொலிசாருக்கும் வன ஜீவராசிகள் திணைக்கள காரியாலயத்திற்கும் அறிவித்த நிலையில் அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப இப்பகுதிக்கான கிராம் உத்தியோகத்தருடன் கலந்துரையாடி மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இதனை பாதுகாப்பாக விடுவதற்கு வீட்டின் உரிமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

க.கிசாந்தன்

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி – வைத்தியசாலையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.

இந்நிலையில் 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2-ம் திகதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

9 மாணவர்களுக்கு கொரோனா – ஹட்டன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் 13 வயதான மாணவர் ஒருவருக்கு கடந்த 22 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் 37 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 9 மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தது – விடுதலையானார் சின்னம்மா!

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது.

இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு வைத்தியர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று அதில் கூறி இருந்தது.

இதனைத்தொடர்ந்து சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை தெரிவித்தது. மேலும் சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும் உதவியுடன் நடப்பதாகவும், அறிகுறி இல்லாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டது. மேலும், செயற்கை சுவாச கருவியின் உதவியின்றி தொடர்ந்து இயல்பாக சசிகலா சுவாசித்து வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். முன்னதாகவே இதற்கு கர்நாடக பொலிஸ் துறை அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை சந்தித்தனர். அவரிடம் விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். கையொப்பம் பெற்று, நகலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறை சார்பில் அளிக்கப்பட்டு வரும் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட உள்ளது. பிறகு அவரை குடும்பத்தினர் தங்களின் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். சசிகலாவுக்கு தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிப்பதா? அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதா? என்பது குறித்து உறவினர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார். அவரது உடல்நிலை நன்றாக தேறிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு நாளை சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தால், அவரை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

‘முன்கள பணியாளர்களுக்கு நாளை மறுதினம் தடுப்பூசி ஏற்றப்படும்’

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca தடுப்பூசி நாளை இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

நாளை காலை 11.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் எடுத்து வரப்படும் இந்த தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் வைபவத்தில் வைபவத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவற்றை உத்தியோகபூர்மாக பொறுப்பேற்பார்.

இதனைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை ,சுகாதார அமைச்சின்  குளிரூட்டப்பட்ட களஞ்சிய பகுதிக்கு எடுத்துச்செல்லப்படும். வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று காலை இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டன.

தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

2ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்

சம்பள முன்மொழிவுக்காக ஓரணியில் திரள்வோம் – இ.தொ.காவுக்கு வேலுகுமார் அழைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்க தரப்புகளில் இருந்து இன்னும் காத்திரமானதொரு வரைவுநகல் முன்வைக்கப்படவில்லை.  எனவே, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து உறுதியானதொரு முன்மொழிவை விரைவில் முன்வைக்க வேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.

கண்டி மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் பிரச்சினை என்பது உச்சகட்டத்துக்கு வந்துள்ளது.  இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் உத்தேச சம்பள முன்மொழிவு திட்டத்தை சமர்ப்பித்து, அதனை சந்தைப்படுத்திவருகின்றது. ஆயிரம் ரூபாவுக்கு மேல் வழங்குவதற்கு தயார் என்ற தொனியில்கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தொழிற்சங்கங்கள் தமது தரப்பு திட்டத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. எவ்வாறு, எப்படி, எவ்வளவு சம்பள உயர்வை வழங்கலாம் என்பதற்கான சூத்திரம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதனை முன்னிலைப்படுத்தியே பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும். அதனைவிடுத்து ஆயிரம் வேண்டும் என வாய்வார்த்தையில் மட்டும் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மறுபுறத்தில் அரசாங்கமும் ஆயிரம் குறித்து கதைக்கின்றதேதவிர தமது உறுதியான – இறுதியான திட்டத்தை  இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் சம்பள உயர்வுக்கான சமரில் கம்பனிகளே முன்னிலை வகிக்கின்றன. தொழிற்சங்கங்கள் பலவீனமான கட்டத்தில்தான் உள்ளன என்பது புலப்படுகின்றது. இதுவே கம்பனிகளுக்கு ஏதோவொரு விதத்தில் பலமாக அமையும்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபடவேண்டும். ஒரு மேசையில் அமர்ந்து பொதுவான – காத்திரமானதொரு சம்பள முன்மொழிவு திட்டத்தை உடன் தயாரிக்கவேண்டும். அதனைவிடுத்து ஒவ்வொரு தரப்பும் வெவ்வேறான அறிவிப்புகளை விடுப்பதும் கம்பனிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும்.

அதேவேளை, சம்பள உயர்வு குறித்து கவனம் செலுத்து  நிலையில், தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதிலும் விழிப்பாக இருக்கவேண்டும்.” – என்றார்.

‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரையான காலப்பகுதியில் (2ஆவது அலை) கொழும்பு மாவட்டத்தில் 22 ஆயிரத்து 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்​கெடுப்பு

0
தவெக அரசுமீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று (12) நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால்...

மழை தொடரும்: மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய தினமும் கடும் மழை எதிர்பார்க்கப்படுகின்றது. மலையகத்தில் சில இடங்களில் காலை முதலே மழை பெய்துவருகின்றது. அதேவேளை, 8...

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...