Home Blog Page 3662

‘கொரோனா’ பிடியிலிருந்து 47,984 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 931 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 55 ஆயிரத்து 189 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்த இவருக்கு முதல் பாடல் பாடும் வாய்ப்பை பிகில் படம் மூலம் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். அப்படத்தில் இடம்பெறும் வெறித்தனம் பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியும் அசத்தி இருப்பார் பூவையார்.

இதையடுத்து விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் மாஸ்டர் படத்திலும், பூவையார் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடனே பயணிக்கும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்திலும் பூவையார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விஜய்யுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பூவையார் நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் 2,694 பேருக்கும், இரத்தினபுரியில் 1,272 பேருக்கும் கொரோனா

கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 54  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 694  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2ஆவது அலைமூலம் இம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 272 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்டார்.

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார் என வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறினார்.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனுக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடனுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் ஜஸ்டின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகோ உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா உடனான உறவு வலுப்பெறும் எனவும் அமெரிக்க மக்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க நாள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக சத்தியம் செய்தார்கள் – ஆயிரம் ரூபா எங்கே?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் இறுதியிலாவது ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவு கிடைக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவு விடயத்தில், இந்த நாடாளுமன்றத்தில் 2020 பெப்ரவரி மாதம், 27/2 இன்கீழ் கேள்வி கேட்ட வேளையில் 2020 மார்ச் மாதத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பிரதமரும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் வாக்குறுதி வழங்கினர்.

தோட்ட கம்பனிகளின் அனுமதி இருந்தாலும் இல்லாது போனாலும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார்.

எமது நாட்டில் சம்பிரதாயம் ஒன்றும் உள்ளது என்னவெனின் பிணத்திற்கு முன்னாள் வாக்குறுதி ஒன்றினை வழங்குவது சத்தியபிரமாணம் செய்வதற்கு சமமானது.

அவ்வாறே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்னாள் நின்றுகொண்டு பிரதமர் மக்களுக்கு சத்தியம் செய்தார்.

தொண்டமான் என்னை இறுதியாக சந்தித்த வேளையில் ஆயிரம் ரூபாய் குறித்தே பேசினார் எனவும் பிரதமர் கூறினார். அதன் பின்னரும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பொய்யான வாக்குறுதிகளாகவே மாற்றப்பட்டு வருகின்றது.

இந்த மாதம் இறுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்குமா என அரசாங்கத்தை கேட்கிறேன்” அவர் மேலும் தெரிவித்தார்.

‘வைரஸை வைத்து அரசியல் செய்யும் எதிரணி’ – பிரதமர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியின் சிலர் கொவிட் பிரச்சினையில் தொங்கிக் கொண்டு அதிலேனும் மீளெழுவதற்கு முயற்சித்து வருகின்றனர். நண்பர்களே, எங்களுக்கு வைரஸின் மூலம் அரசியல் செய்வதற்கான தேவையில்லை. நாட்டு மக்களின் நலன் குறித்து செயற்படுவதே எமது தேவையாக உள்ளது – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ பிரேண்ட் (Yoo Brand) பாதணி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது நாட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையர்களான நம் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் காண்பது ஒரே கனவு. அது நம் நாடு அபிவிருத்தியடைந்த நாடாகும் கனவாகும்.

நாம் உலகின் மத்தியில் பிற நாடுகளைவிட மானுட குணாதிசயங்களினால் சிறந்த தேசமாகும். வரலாற்றில் எமது நாடு பல்வேறு துறைகளில் மதிப்பு வாய்ந்ததாக விளங்குகின்றது.அண்மைக் காலத்தில் வெவ்வேறு அரசாங்கத்தின் கீழ் நாட்டின் குறிக்கோள் மாற்றமடைந்தது. எனினும், நாட்டு மக்களதும், நாட்டினதும் குறிக்கோள் தொடர்பில் நாம் எப்போதும் பொறுப்புடன் பணியாற்றினோம்.

இன்று கொவிட் நெருக்கடி முழு உலகையும் ஆட்கொண்டுள்ளது. பிற நாடுகளில் போன்றே நமது நாட்டிலும் அது மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது. வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு துறை, அரச ஊழியர்கள் போன்றே, தனியார் துறையை சேர்ந்த நீங்களும், நாட்டின் அனைத்து பொதுமக்களும் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த சவாலை வெற்றிக்கொள்ள பாடுபடுகின்றனர். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அதற்கு தேவையான தலையீட்டை செய்துள்ளோம்.

எதிர்க்கட்சியின் சிலர் கொவிட் பிரச்சினையில் தொங்கிக் கொண்டு அதிலேனும் மீளெழுவதற்கு முயற்சித்து வருகின்றனர். நண்பர்களே, எங்களுக்கு வைரஸின் மூலம் அரசியல் செய்வதற்கான தேவையில்லை. நாட்டு மக்களின் நலன் குறித்து செயற்படுவதே எமது தேவையாக உள்ளது.

நாட்டில் ஏதேனும் ஒரு சவால் மிகுந்த சூழல் நிலவும் சந்தர்ப்பங்களிலேயே பொதுமக்கள் எமக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அது பொதுமக்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கையே ஆகும். நாட்டின் பாதுகாப்பாக இருப்பினும், தொற்று நெருக்கடியாக இருக்கட்டும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நமது கடமையை நிறைவேற்றுவோம். அதேபோன்று நாம் அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றியுள்ளோம்.

பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தேனும் உள்ளூர் தொழில்முனைவோரை முன்னேற்றுவதற்கு நமக்கு முடிந்துள்ளது.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த பாதணி தொழிற்சாலை முழு நாட்டிற்குமான சொத்தாகும். உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பாடசாலை பாதணிகளை விட 30 சதவீம் குறைவாக இத்தொழிற்சாலையின் பாதணிகள் விற்பனை செய்யப்படும். அதேபோன்று விளையாட்டு மற்றும் நடைபயிற்சியின் போது அணியும் பாதணிகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப உயர் தரத்தில் தயாரிக்கப்படும் என அறியக் கிடைத்துள்ளது.

இந்த அனைத்து பாதணிகளும் Made In Sri Lanka என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின்படி, உள்ளூர் பொருளாதாரக் கொள்கைக்குள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே எங்கள் குறிக்கோள்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், எங்கள் உள்ளூர் விவசாயிகளையும் தொழிலதிபர்களையும் முன்னேற்ற விவேகமான முடிவை எடுத்தோம். மஞ்சள் மட்டுமல்ல, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தினோம். இப்போது நம் நாட்டின் விவசாயிகள் தானாகவே பயனடைகின்றனர். மறுபுறம், நம் நாட்டில் உயர்தர தயாரிப்புகளை நுகரும் வாய்ப்பும் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

இந்த தொழிற்சாலைகள் இன்று முதல் பாதணிகளை உருவாக்கத் தொடங்கும் போது, இரப்பர் செய்கையாளர்களும் பொருளாதார ரீதியாக பயனடைவார்கள். அவர்களின் குடும்பங்களின் வருமானம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதுபோன்ற ஒரு தொழிற்சாலையில் தொழில்நுட்ப அறிவைப் பெற சில நேரங்களில் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். நம் இளைஞர்கள் இப்போது இவ்வாறு அந்த அறிவைப் பெற முடியும். இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும்போது, மதிப்பு மிகுந்த உற்பத்தியின் பொருளாதார நன்மைகள் ஒட்டுமொத்தமாக நாட்டிற்கு கிடைக்கும்.

இது தெற்காசியாவில் இரண்டாவது பெரிய காலுரை ஏற்றுமதி உற்பத்தி நிறுவனமும் உங்களுக்கு சொந்தமான இவ்வகையிலேயே பாரிய சேவையை வழங்கும் நிறுவனமாகும்.எனவே, ஒரு குண்டூசியேனும் தயாரிக்காத ஒரு நாடு என்று நம்மைக் நம்மை நாதே குறைக் கூறிக் கொள்வதில் பயனில்லை. நாம் கடந்த காலத்திலிருந்து நல்லதை பெற்று எதிர்காலத்திற்காக இன்று நாம் செயற்படுத்த வேண்டும்.ஒரு வளமான நாட்டை நோக்கிய பயணத்திற்கு அத்தகைய ஒரு தொழிற்சாலையின் சக்தி மகத்தானது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” – என்றார்.

‘நுவரெலியாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று’

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் ஒன்பது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 511 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கடந்துள்ள 20 நாட்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் 113 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 54 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கவும்’

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது குறைந்துள்ளமையால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைக்கு அந்நிய வருவாயை ஈட்டித்தரும் பிரதானதுறைகளில் தேயிலைத் தொழில்துறையும் முக்கிய இடம் வகிக்கிறது.

பெருந்தோட்டத்துறை, சிறுதோட்டத்துறை என்ற அடிப்படையில் இலங்கையில் தேயிலைத்துறை செயல்படுகிறது. ஒருகாலத்தில் பெருந்தோட்டத்துறையில் அதிகமான தேயிலை உற்பத்தி இடம்பெற்ற போதிலும் தற்போது மொத்த தேயிலை உற்பத்தியில் 75 சதவீதமான உற்பத்தி சிறுதோட்டங்களின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறது.

தேயிலை உற்பத்தியில் சிறுதோட்ட உற்பத்தியாளர்களின் செயல்திறன் அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் 20 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிறுதோட்ட தேயிலைத் உற்பத்தியாளர்களாக உள்ளனர்.

நாட்டின் முழு சனத்தொகையில் 10 சதவீதமானவர்கள் சிறுதோட்ட தேயிலை உற்பத்தியாளர்களாகவுள்ளனர்.

எமது நாட்டு தேயிலைக்கு உலக சந்தையில் பெரும் வரவேற்புள்ளது. ஒருவடத்திற்கு 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. என்றாலும் சமகாலத்தில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சிக்கண்டுள்ளது. தேயிலை அறுவடை குறைவாக இருந்தமையே இதற்கு காரணம்.

இதனால் தேயிலைத் தொழில்துறையை போன்று சிறுதோட்ட உரிமையாளர்களுக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

சமகால அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகள்மீது அதிக கவனம் செலுத்துவதால் சிறுதோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுதோட்ட உடமையாளர்கள் குறித்து கவனம் செலுத்தினால் நாட்டின் அந்நிய வருவாய் குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் அதிகரிக்கும் என்பதுடன், அவர்களது வாழ்வாதாரமும் அதிகரிக்கும்.

சிறுதோட்ட உடமையாளர்களின் பிரச்சினையை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருத வேண்டும். இவர்களிடம் செஸ் வரி அறவிடப்படுகிறது. அவ்வாறு அறவிடப்படும் வரியானது சமகாலத்தில் தேயிலை உற்பத்தி தொழில்துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் பயன்படுத்தப்படுவதில்லை.

சிறுதோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, தரிசு நிலங்களை தற்போது தேயிலைத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பகிர்ந்தளித்தால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என்றார்.

இலங்கை அணியில் 5 வீரர்கள் விடுவிப்பு

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியிலிருந்து ஐந்து வீரர்களுக்கு விடுகை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (காயம் காரணமாக), குசல் மெண்டிஸ், மினோத் பானுக்க, லஹிரு குமார, நுவன் ப்ரதீப் ஆகிய ஐந்து வீரர்கள் அணியிலிருந்து விடுகை பெற்று அவர்களது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

விடுகை வழங்கப்பட்டுள்ள வீரர்கள் கொழும்பிலுள்ள உயர் ஆற்றல் வெளிப்பாடு நிலையத்தில் பயிற்சிகளில் ஈடுபட திரும்பி வருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து அணித் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.

குசல் மெண்டிஸின் இடத்தை ரொஷேன் சில்வா நிரப்புவார் எனவும் பூரண குணமடைந்துள்ள சுரங்க லக்மால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

வெள்ளை மாளிகையில் பணிகளை ஆரம்பித்தார் ஜோ பைடன்

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன் ஒவல் அலுவலகத்தில் தனது அலுவல்களை தொடங்கினார்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் நேற்று நடந்த வண்ணமயமான விழாவில் பதவியேற்றனர்

இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர்.

ராணுவத்தால் இசை முழுங்க ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளைமாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வுகள் அமெரிக்க டிவி சேனல்களிலும், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களிலும் நேரடியாக ஒளிரப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் தனது அலுவல்களை ஜோ பைடன் தொடங்கினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தனது பதவிக் காலத்தின் முதல் அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

வெள்ளைமாளிகையில் ஜனாதிபதியின் அறையிலிருந்து, ஜோ பைடன் தனது அமைச்சரவை நியமனங்கள் மற்றும் சில பரிந்துரைகளை, துணை அமைச்சரவை அளவிலான பாத்திரங்களுக்கு முறைப்படுத்தினார். பதவியேற்பு தொடர்பான பிரகடனத்திலும் பைடன் கையெழுத்திட்டார்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், “நெருக்கடியை சந்திக்கும் இந்த தருணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, ஜனாதிபதி அலுவலகமான ஓவல் அலுவலகம் செல்கிறேன். அமெரிக்க மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...