Home Blog Page 3663

குருந்தூர் மலை ஆய்வில் வெளிப்படைத்தன்மை அவசியம்!

குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் கோவில் அமைந்துள்ள நிலையில் அங்கு மறைமுகமாக தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதனை ஏற்கமுடியாது. ஆய்வுகளில் வெளிப்படைதன்மை அவசியம் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு இது தொடர்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வன்னி மாவட்டத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் இறுக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் கோவில் உள்ளது. 1933 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ‘குருந்தூர் மலை’ எனதான் விளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் தமிழ் பெயர் இருக்கும் நிலையில் தற்போது எதற்கு அவசர அவசரமாக அகழ்வாய்பு நடக்கின்றது?

கடந்தகாலங்களில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. திடீரென விகாரைகள் முளைத்தன. எனவே, குருந்தூர் மலை விவகாரத்திலும் எமது மக்களுக்கு சந்தேகம் இருக்கின்றது. மக்கள் வழிபடுவதற்கு தடை இருக்ககூடாது என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பொங்கல் வைத்து வழிபட சென்ற மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டுள்ளது.

அகழ்வாய்வு ஏன் மறைமுகமாக செய்யப்படுகின்றது? வெளிப்படை தன்மை அவசியம். பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்துவந்து செய்யும் நிலையில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களையும், மாணவர்களையும் இதில் இணைத்துக்கொள்ளுமாறு நாம் கேட்டிருந்தோம். இது சம்பந்தமாக எமது தலைவர் சம்பந்தன் ஐயா, இராஜாங்க அமைச்சர் விதுலவுடன் பேச்சு நடத்தினார். இணைத்துக்கொள்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சளவில் மட்டும் அல்லாமல் உறுதிமொழி நடைமுறைக்கு வரவேண்டும்.வெளிப்படைதன்மையுடன் ஆராய்ச்சிகள் நடைபெறவேண்டும்.” – என்றார்.

நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம் மூலம் மலேசிய பேரரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் முயாதீன் யாசீன் பேரரசரை பிழையாக வழிநடத்தியுள்ளதாக பீ.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பிரதமர், பதவி மோகத்தினால் இவ்வாறு பேரரசரை பிழையாக வழிநடாத்தி ஆட்சியில் நீடித்துக் கொள்ள சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றை மீளவும் கூட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் இந்த கோரிக்கை கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேரரசருக்கு எதிராக போராட்டங்களை நடாத்தவில்லை எனவும் அவசரகாலச் சட்டம் குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் தொடர்பில் பிரதமர் கூறியுள்ள நியாப்படுத்தல்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளை கட்படுத்தும் நோக்கில் அவசரகால நிலையை நீடித்து வருவதாக பிரதமர் யாசீன் கூறியுள்ளார்.

எனினும், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முடக்கவும், ஆட்சியில் தொடர்ந்தும் நீடித்துக் கொள்ளவும் பிரதமர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

‘கொரோனா’ – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 16 தேசிய பாடசாலைகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் தொடர் முயற்சியின் பலன்

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தொடர் முயற்சியால் இதற்கா நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த வருடம் கல்வி அமைச்சரிடம் இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

இதன்பின்னர், நுவரெலியா மாவட்ட தேசிய பாடசாலை விவகாரம் குறத்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இதுகுறித்து கடந்த வாரம் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் முதன்முறையாக 16 தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை நுவரெலியா தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல்

Highlands college
Bosco’s college
Talawakala TMV
Holbrook TMV
Kotagala TMV
St Mary’s college – Bogowantalawa
Norwood TMV
St Joseph’s college – Maskeliya
Horncey college
Bloomfield college
Ragala TMV
Al Minhaj MV
Punduloya TMV
Holy trinity TMV
Methodist college
Maraya TMV

– ஊடகப் பிரிவு

புதிய கட்சி ஆரம்பித்து அதிரடிக்கு தயாராகிறார் ட்ரம்ப்

அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியதும் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த மோசடி குற்றச்சாட்டுக்கு அவரது கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அத்துடன், டிரம்பின் செயல்களை விமர்சித்தனர்.

இதற்கிடையே, ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேச்சால் அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்ட விவகாரம் சொந்த கட்சியினரின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது.

கலவரத்திற்கு டிரம்ப் பொறுப்பு ஏற்க வேண்டும் என குடியரசு கட்சியை சேர்ந்த மெக்கனல் விமர்சனம் செய்தார். இதுபோன்ற காரணங்களால் டிரம்புக்கு குடியரசு கட்சியின் பல்வேறு தலைவர்களுடன் சுமுக உறவு இல்லாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் தனியாகவே தேசபக்தர் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்க டிரம்ப் யோசித்து வருகிறார் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களுடன் ஆலோசனையை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரையில் இருகட்சி ஆட்சி முறையே தொடர்கிறது. ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றன. இந்நிலையில், மூன்றாவதாக ஒரு கட்சியை நிறுவுவது என்பது டிரம்புக்கு சவாலான பணியாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது.

நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 700 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர். 270 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 50 ஆயிரத்து 940 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் கைதான நபர் இரண்டு லட்சம் ரூபா பிணையில் விடுதலை

காலி ரயில்வே வீடமைப்புத் தோட்டத்திற்குச் சொந்தமான காணியில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் 21 தேங்காய்களைப் பறித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இவரை இரண்டு லட்ச ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

காலி வீடமைப்புத் தோட்டத்தில் உள்ள தேங்காய் மரத்தில் 21 தேங்காய்களை நேற்று மாலை பறித்த குறித்த நபர் அந்த இடத்திலேயே அதனை தோல் நீக்கி துப்பறவு செய்துள்ளார்.

இதன்போது ரயில்வே வீடமைப்பின் காவல் அதிகாரிகள் குறித்த நபரை பிடித்து காலி பொலிஸ் நிலையத்தில் தேங்காய்களுடன் ஒப்படைத்துள்ளனர்.

பொலிசார் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் தாக்கல் செய்தபோது, சந்தேக நபரை இரண்டு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

ஹட்டனில் மேலும் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களுக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து 42 மாணவர்களும், ஆசிரியை ஒருவரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (20) வெளியாகின. இதில் நான்கு மாணவர்களுக்கும், ஆசிரியைக்கும் வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.

இவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பகுதிகளில் மேலும் 6 பேருக்கு கொரோனா

மஸ்கெலியா பொது சுகாதார அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று  மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி நரேந்திர குமார் தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் பொலிஸ் பிரிவில் நால்வருக்கும், நல்லதண்ணி பிரிவில் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

பதுளை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 10 தேசியப் பாடசாலைகள் : செந்தில் தொண்டமானின் தூரநோக்கு 

பதுளை மாவட்டத்தில் 10 தமிழ் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான முன்மொழிவுகள் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அப்போதைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெருமவிடம் கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கையளிக்கப்பட்டிருந்தது.

செந்தில் தொண்டமான் ஊவா மாகாண கல்வி அமைச்சராக இருந்த போது குறித்த பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அடித்தளத்தை போட்டிருந்ததுடன், அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு தேவையான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன்பின்னர் குறித்த ஆவணங்கள் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலமாக கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு, குறித்த 10 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் பதுளை மாவட்டத்தில் குறித்த 10 தமிழ் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஒரே தடவையில் 10 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதை ஊவா மாகாண தமிழ்க் கல்விச் சமூகம் பாராட்டியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...