Home Blog Page 3664

கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கு கொரோனா தொற்று

டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தாதியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும், அவர் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 07 இலக்க விடுதியில் (வார்ட்டில்) சிகிச்சைப்பெற்று வந்த பெண் ஒருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் என 15 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் தாதியொருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் கோட்டா அரசு’ – சபையில் அநுர சீற்றம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றிவருகின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கினார். கம்பனி வழங்க மறுத்தாலும் அதனை பெற்றுக்கொடுப்போம் எனவும் உறுதியாக கூறினார். ஆனாலும் இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்ற பிரதமர், ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் என சத்தியம் செய்தார். அந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்தும் ஆயிரம் ரூபா குறித்த உறுதிமொழியை பிரதமர் வழங்கினார். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. தொழிலாளர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றிவருகின்றது.” – என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணியிலிருந்து நடராஜன் ‘அவுட்’!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி- 20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெப்ரவரி  5 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகின்றது.

இந்நிலையில், இங்கிலாந்துடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்:-

விராட் கோஹ்லி  , ரஹானே, ரோகித் சர்மா, சுக்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்டியா, ரிஷிப் பண்ட், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், கேஎல் ராகுல் (உடல்தகுதியை பொறுத்து).

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட டி நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.

அமெரிக்காவின் சுகாதாரத்துறை துணை செயலாளராக திருதங்கையை நியமித்த பைடன்

அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை வைத்தியரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார்.

அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின்.

நிலையான தலைமை மற்றும் இன்றியமையாத நிபுணத்துவத்தை லெவின் கொண்டு வருவார் என்றும், இதுபோன்ற பதவிகளுக்கு வருவதற்கு அவர்களின் ஜிப் குறியீடு, இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல என்றும் பைடன் தனது அறிக்கையில் கூறி உள்ளார். ‘அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின்’ என்றும் பைடன் கூறி உள்ளார்.

லெவின் தற்போது பென்சில்வேனியா சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் உள்ளார்.

‘மாகாண சபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தயார்’

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமையுடன் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு ஒன்றை எட்ட வேண்டும். அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மாகாணசபை கட்டமைப்பு நாட்டில்இப்போதும் உள்ளது. அதற்கான சட்டங்கள், அதற்கான அமைச்சுக்கள், பொறிமுறைகள் என அவை அனைத்தும் நடைமுறையில் உள்ளன.

எனினும் அவை ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளினால் செயற்படுத்தப்படுகின்றன.அதனை முழுமையானதாகக் கருதமுடியாது என்பதால் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும். அதனூடாக மக்களுக்கான ஜனநாயகம் கிட்டுவதுடன் அதன் மூலம்மக்களுக்கான சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறை, எல்லை நிர்ணயம் என பல்வேறு குறைபாடுகள் காரணமாக மேலும் பல வருடங்களை வீணடிக்க முடியாது. பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும். அவ்வாறு நடத்துவதற்கு சிக்கல்கள் இருக்குமானால் அதற்கான ஒரு திருத்தத்தை மேற்கொள்ளவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை,தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய ஆணைக்குழு பொறுப்பை ஏற்றுக்கொண்ட மறுநாளே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம். அதற்கான செயற்பாடுகள் மந்த நிலையில் உள்ள நிலையில் அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமித்து அதற்கான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அது தொடர்பிலும் பிரதமரோடு கலந்துரையாடியுள்ளோம்.” – என்றார்.

நுவரெலியாவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 502 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 05 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 640 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில்  ஆயிரத்து 253 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

கடந்துள்ள 19 நாட்களில் 10,958 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்துள்ள 19 நாட்களில் மாத்திரம் 10 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 806 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 120 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 809 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

19  நாட்களில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இனி கவர்ச்சி காட்டமாட்டேன் – சமந்தா திட்டவட்டம்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் சமந்தா, இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என கூறி உள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:

‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.

நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பதற்றம் இருக்கும். படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை துரத்தும். இயக்குனர், கேமராமேன் ஏதாவது சொன்னால் பதற்றம் இன்னும் உச்சத்துக்கு போய் விடும். ஆனால் அதை யாருக்கும் தெரிகிற மாதிரி காட்டிக்கொள்ள மாட்டேன்.

புதிய நடிகையாக அந்த கதாபாத்திரத்துக்குள் செல்ல வேண்டும் என்ற உணர்வும், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்ற வெறியும்தான் அந்த பயத்துக்கு காரணம். 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.” இவ்வாறு சமந்தா கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு!

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன்கிழமை பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது. இதையொட்டி வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக இந்த பதவியேற்பு விழாவின்போது வாஷிங்டனுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவர். 2009-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முதல்முறையாக பதவியேற்கும்போது 20 லட்சம் பேர் வருகை தந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக கொண்டாட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்க மக்கள் பதவியேற்பு விழாவை காண தலைநகருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஜோ பைடனின் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த 6-ந்தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு வாஷிங்டன் அதிகாரிகளும் இதே கோரிக்கையை விடுத்தனர்.

கடந்த காலங்களில் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அது 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அமைதியாக நடைபெறும் பதவியேற்பு விழாவின் பாரம்பரிய வழக்கமான ராணுவ தளபதி படைகளை பார்வையிடுதல் நிகழ்ச்சி இந்த முறையும் நடைபெறும்.

ஆனால் வழக்கமாக நடைபெறும் ராணுவ அணிவகுப்பு, `இணைய அணிவகுப்பாக’ அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டையும் போல இந்த ஆண்டும் நட்சத்திர விருந்தினர் நிகழ்ச்சி நடைபெறும். ஜோ பைடனின் ஆதரவாளரான அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடுவார். நடிகை ஜெனிபர் லோபசின் பாடல் நிகழ்ச்சியும் உண்டு.

பைடனின் பதவியேற்புக்கு பிறகு அமெரிக்க நடிகர் டாம் ஹான்க் 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இலங்கை நேரப்படி இரவு 10 மணி) பதவி ஏற்பு விழா தொடங்கும்.

நண்பகல் 12 மணியளவில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

கெரோனா தொற்றாளர் தப்பியோட்டம் – தேடுதல் வேட்டை தீவிரம்

கொரோனா நோயாளர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்றிரவு (19) 7.30 மணியளவில் புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ – மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றும் குறித்த ஊழியர் கடந்த 13 ஆம் திகதி PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி, கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

43 வயதான குறித்த நோயாளர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதை தொடர்ந்து, இதுவரை 14 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...