Home Blog Page 3665

கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 06, அரநாயக்க மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை இன்று மாத்திரம் 660 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்தால் தொழிலாளர்களுக்கே பாதிப்பு’

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக்கே  பாதிப்பாக அமையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கம்பனிகளும், தொழிற்சங்கங்களும்தான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன. அரசாங்கத்தால் மூன்றாம் தரப்பாக தலையிடவே முடியும். அந்தவகையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.

கூட்டு ஒப்பந்தம் அநீதியானது என குறிப்பிட்டு தொழிலாளர்களை சிலர் தூண்டிவிடுகின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு நன்மைகளும் உள்ளன. குறிப்பாக வருடம் 300 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படாவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் கூட்டு ஒப்பந்தம் இல்லையேல், தொழில் அமைச்சரிடம்தான் முறையிடவேண்டிவரும். கம்பனிகள் நினைத்தால் 2 நாட்கள்கூட வேலை வழங்கலாம். அவர்களின் முடிவை சவாலுக்குட்படுத்த முடியாது.

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்வதற்கு நாமும் தயார். ஆனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு , கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களே பொறுப்பு கூறவேண்டும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.

ரஞ்சனின் தலைவிதி இன்னும் 3 வாரங்களில் நிர்ணயம்

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டில் குற்றவாளியாக சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்க முடியுமா அல்லது முடியாதா என்பது தொடர்பிலான தீர்மானத்தை 3 வார காலத்திற்குள் தாம் அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேரவர்தன இன்று சபையில் அறிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்

ரஞ்சன் ராமநாயக்கா தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முறையான சட்ட ஆலோசனையைப் பெற்று தமது தீர்மானத்தை அறிவிப்பதாகவும், இது தொடர்பில் எந்வொரு உறுப்பினரும் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 2 வாரத்திற்குள் அதனை கடிதம் மூலம் தமக்கு சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இந்தியா முதலிடம் – 7ஆம் இடத்தில் இலங்கை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வரலாற்று வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அத்துடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணி 430 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 420- புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2- ஆம் இடத்திலும் 332- புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது. இலங்கை 7ஆம் இடத்தில் உள்ளது.

மண்டியிட்டது ஆஸி. அணி. – இந்தியா வரலாற்று வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 369 ஓட்டங்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸில 336 ஓட்டங்களைக் குவித்தது.

33 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இலக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார்.

அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது.

அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் இருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது.

ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்டது.

மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார்.

இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது.

6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தது.

கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

’54 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை’

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 87ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர். 270 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 50 ஆயிரத்து 238 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘சுற்றுலாப்பயணிகளுக்காக 21 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு’

எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவது குறித்து அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.

சுற்றுலா வீசாப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டவர்கள் இலங்கை வர முடியும் என்றும் இதனைத் தவிர இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் இலங்கைக்கு வர முடியும்.

எனினும், அவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்டு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் அத்தியாவசியமானது.

இதனைத்தவிர, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் பி.சீ.ஆர். பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் அவர்கள் ஒருவாரம் பாதுகாப்பு நடைமுறைகளுடன் தங்கவைக்கப்படுவர்.

இதேவேளை, குறித்த ஓட்டல்கள் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இவ்வாறு ஒருவார காலத்தின் பின்னர் தேவையெனில் மீண்டும் பி.சீ.ஆர். பரிசோதனை செய்துகொண்ட பின்னர் அவர்கள் இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

எனினும், சுகாதார நடைமுறைகளுடன் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவோர் அவர்களைக் கையாள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டவர்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விளக்கமளித்தார்.

விஜய்சேதுபதிக்கு அடித்துள்ள அதிஷ்டம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதிக்கு, தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

டாப் ஹீரோ என்ற இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

இவ்வாறு தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன.

சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியில் ‘ரீமேக்’ ஆகிறது விஜய்யின் ‘மாஸ்டர்’

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ‘ரீமேக்’ செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏற்கனவே லாரன்சின் காஞ்சனா படம் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி என்ற பெயரில் இந்தியில் வெளியானது. நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் குட்லெக் ஜெர்ரி என்ற பெயரில் இந்தியில் தயாராகிறது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

கார்த்தி நடித்த கைதி, விஜய்சேதுபதியின் விக்ரம் வேதா ஆகிய படங்களும் இந்தியில் தயாராகின்றன. ஶ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்து 2017-ல் வெளியான மாநகரம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த வரிசையில் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் படமும் இந்தியில் ‘ரீமேக்’ ஆக உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

அரிசி, மா, சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நடைமுறை யிலிருக்குமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலையின் பின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கென விநியோ கஸ்தர்களுக்கான விலைமனு கோரல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கிணங்க அரிசி, மா, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, ரின் மீன் உள்ளிட்ட 10 அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கே கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி அத்தியாவசிய உணவுப்பொருட்களை நாடு முழுவதிலுமுள்ள சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...