Home Blog Page 3666

‘தோட்டக்கம்பனிகள் தன்னிச்சையாக செயற்படமுடியாது’ – அரசு மீண்டும் எச்சரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவாகும். அந்த முடிவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகாது. சவால்களை எதிர்கொள்ளும்.

சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது. கடந்த காலங்களில் 50 ரூபாவைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது.

இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டொப்பந்த முறையில் இப்போதுக்கு 1000 கிடைக்காது : கம்பனிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை : மனோ கணேசன்

தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் சூழ்ச்சி வலை விரிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அடிப்படை சம்பளம் 1000 ரூபா இப்போதைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் குறிப்பு :

தோட்டத்தொழிலாளர் தொடர்பில், அவர்களது நாட்சம்பளம் பற்றிய கோஷம்தான் கடந்த பல்லாண்டுகளாக எப்போதும் உரக்க கேட்டது.

இன்றைய தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அல்லது 1000/= என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500/= க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000/=, கூட்டொப்பந்த முறைமையின் கீழ் வழங்கப்படாது என நாம் கணித்திருந்தோம்.

ஆகவேதான், தோட்டத்தொழிலாளர்களுக்கு சொத்தமாகவோ, நீண்ட குத்தகைக்கோ காணி பிரித்தளிக்கபட்டு அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்-கிராமவாசிகளாக மாற்றப்படுவதே நிரந்தர தீர்வு எனவும் கணித்திருத்தோம்.

தொழிலாளருக்கு தோட்டக்காணி பிரித்து வழங்கப்பட வேண்டும் என்று பலர் பலகாலமாய் கூறி வந்தாலும் அதை அரசியல் கோஷமாக்கி, 2019 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞானத்தில் உள்வாங்கி ஆவணப்படுத்தியது, தமிழ் முற்போக்கு கூட்டணியே..!

இன்று, இந்த கோஷம் அனைத்து தரப்புகளாலும் முன் வைக்கப்படுவது, முற்போக்கான வளர்ச்சியாகும்.

ஆனால், இந்த காணி பிரித்து அல்லது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படுவது என்பதும், வெளிவாரி உற்பத்தி என்று கம்பனிகள் தொழிலாளருக்கு “கண்ட்ராக்ட்” வழங்குவது என்பதும் இதை வேறு விஷயங்கள் என்பதை நாம் உணர வேண்டும். தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை இதுவாகும்.

 

18 நாட்களில் கொழும்பில் 2,806 பேருக்கும், நுவரெலியாவில் 99 பேருக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 197 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை கடந்துள்ள 18 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 806 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 99 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு வரமா, சாபக்கேடா?

தொழில் தருநர்களுக்கும் தொழில் பெறுபவர்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவை. சில நாடுகளில் அரச ரீதியான சட்ட ஆவணமாகவும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உத்தரவாதம், தொழிலாளர்களின் பொது சுகாதார பாதுகாப்பு, தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவையான குடியிருப்பு, தாய்சேய் பாதுகாப்பு, குடிநீர், தொழிலாளர் பிள்ளைகளின் கல்வி, தொழில் காப்புறுதி எனப் பல சேமநலத் திட்டங்களுடன் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவும், சேவைக்காலக் கொடுப்பனவும் ஊக்குவிப்புக்களும் இந்த கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன.

ஆனால் இலங்கையில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தொடர்பாக செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

தொழில் பாதுகாப்பு என்பது முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மாதாந்தம் 22 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தவறின் அதற்கேற்ற முழுச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது முதலாளிமாருக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது. கட்டாயமாக தொழில் வழங்கியே தீர வேண்டும் என்பதால் தேயிலை, இறப்பர் தோட்டங்களைப் பாதுகாத்தார்கள், புல் வெட்டினார்கள், உரம் போட்டார்கள். இதனால் தோட்டங்கள் பாதுகாக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு நிரந்தரமான தொழிலும் கிடைத்தது.

இன்று தேயிலை, இறப்பர் தோட்டங்கள் பற்றைக்காடுகளாகவே மாறி விட்டன. போதிய பராமரிப்பு இல்லை. விஷப்பாம்புகள், குளவிகள், காட்டு சிறுத்தைகள் குடிகொள்ளும் உறைவிடங்களாக மாறி விட்டன. குளவி கொட்டியும், பாம்பு தீண்டியும், சிறுத்தைகள் தாக்கியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் வேதனைகள் தொடர்கின்றன.

சம்பவம் நடந்தவுடன் தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை விடுகின்றனர்.

ஆனால் நடப்பது ஒன்றும் இல்லை.தொழிலாளர்களின் மரணங்கள் வெறும் செய்தியாகவே மறைந்து விடுகின்றன.தேயிலைச் செடிகளுக்குள் காணப்படும் குளவிக் கூடுகளைக் முற்றாக அழித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எண்ணம் தோட்ட நிர்வாகங்களுக்கு இல்லை. அதைத் தட்டிக் கேட்கும் தைரியமும் தொழிற்சங்கங்களுக்கு இல்லை.

கூட்டு ஒப்பந்தங்களை செய்து விட்டால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்தவும் தொழிற்சங்கங்கள் ஆவன செய்ய வேண்டும்.தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் முதலாளிமாருக்கு சாதகமாகவே அமைந்து விட்டன.

கடந்த ஆறு வருடங்களில் பல ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நிரந்தர தொழில் அற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். பெருந்தொகையான தோட்டக் காணிகள் மூடப்பட்டு தரிசுகளாக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறை பேரழிவுக்கே இட்டுச் செல்லப்படுகின்றது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

காலம் காலமாக பெருந்தோட்டத் துறையையே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் எதிர்காலம் சூனியம் ஆக்கப்படுகின்றது.தோட்டங்களில் தொழில் இல்லாததனாலேயே மலையக இளைஞர், யுவதிகள் தூரப் பகுதிகளுக்கு தொழில் தேடிச் சென்றனர்.

தோட்டங்களை விட்டு வெளியேறிய இளைஞர்கள் இன்று கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தோட்டங்களுக்கே திரும்பி விட்டனர். வருமானமின்றி அவர்கள் உள்ளனர். ஒவ்வொரு தோட்டத்திலும் பெருந்தொகையான இளைஞர், யுவதிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு தொழில் வழங்க முடியாவிட்டாலும், தோட்டங்களில் தரிசாக கிடக்கும் காணிகளை வழங்கினால் அவர்கள் விவசாயம் செய்ய முடியும்.

தோட்டங்களில் தொழிலாளர்களின் பல சலுகைகள் இன்று ஒழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லயத்திற்கு லயம் துப்புரவுத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தினசமும் தொழிலாளர்களின் குடியிருப்புகளை சுற்றி துப்புரவு செய்தனர். தோட்ட வைத்தியர் என ஒருவர் இதனை மேற்பார்வை செய்வார்.

தோட்டத்தில் வேலைக்குப் போகாதவர்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என பரிசோதித்து மருந்து கொடுப்பார்கள். பாடசாலைக்கு செல்லாத வயதில் இருக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாகப் பகல் உணவும் வழங்கினார்கள்.

ஆனால், தோட்டங்கள் புதிய கம்பனிக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்த சலுகைகள் எல்லாம் இல்லாமல் போய் விட்டன. வைத்தியசாலைகள் என்ற பெயரில் ​வைத்தியரும் மருந்தும் இல்லாத கட்டடங்கள் அங்கு இருக்கின்றன. தொழிலாளர்களின் அத்தியாவசிய நலன்புரித் திட்டங்கள் கூட்டு ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இரா. புத்திரசிகாமணி

கந்தப்பளையில் பலத்தைக்காட்டிய இ.தொ.கா., கம்பனிகளிடம் பதுங்குவது ஏன்?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்த அரசாங்கம் தற்போது அந்த உறுதிமொழியிலிருந்து ‘பல்டி’ அடித்துள்ளது – என்று நவசமமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி தேர்தல் காலங்களில் வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த பின்னர் ‘அடிப்படை’ என்ற சொற்பதம் மாயமாகிவிட்டது. அரசாங்கமும், அதன் பங்காளிக்கட்சியான காங்கிரசும் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.

அதுமட்டுமல்ல ஊழியர்களுக்கு சட்டபூர்வமாக கிடைக்கவேண்டிய விடயங்களைக்கூட சம்பள உயர்வாகக்காட்டும் வகையில் நயவஞ்சக சம்பள சூத்திரத்தையே கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசிலுள்ள பங்காளி என்ற வகையில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு இருக்கின்றது.

கந்தப்பளையில் தோட்ட முகாமையாளருக்கு எதிராக மக்களை திரட்டி பலத்தை காட்டிய காங்கிரஸ், கம்பனிகளிடம் பதுங்குவது ஏன்? உறுதியானதொரு முடிவை இது விடயத்தில் காங்கிரஸ் அறிவிக்கவேண்டும். கூட்டு ஒப்பந்தம் மற்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அனைவரும் இணைந்து போராடலாம்.” – என்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

2ஆவது அலை ஊழித்தாண்டவம் – இதுவரை 257 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு, மோதரை, களுத்துறை, தெஹிவளை மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையினால் மட்டும் இதுவரை 257 பேர் பலியாகியுள்ளனர்.

இரு தினங்களுக்கு நாடாளுமன்றம் கூடும்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நிவாரணியாக பிரசாரம் செய்யப்பட்ட ஆயுர்வேத பாணி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொவிட் தொற்று

இராஜாங்க அமைச்சர் பிரியல் நிசாந்தவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

துரித ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை செய்ததன் மூலம் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சின் 10 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கேகாலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்ப்டடுள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்கான ஆயுர்வேத நிவாரணியாக தம்மிக்க பண்டார வழங்கிய கொவிட் பாணி நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டபோது, இராஜாங்க அமைச்சர் பிரியால் நிசாந்தவும் இதனை அருந்தியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவருக்க கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 224 பேரில் தற்போது நான்காவது நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

 

1,105 ரூபாவே இறுதி யோசனை : ஏற்க மறுத்தால் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் : ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது என கம்பனிகள் அறிக்கை

படம் : யுவராஜன் (நுவரெலியா)

பெருந்தோட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும்
இறுதி யோசனையை இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது திட்டங்களில் உள்ள பெறுமதியை ஜனாதிபதி காண்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் முன்வைத்த அனைத்துத் திட்டங்களையும் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், எந்தவொரு சிறந்த சாத்தியமான மாற்றுத் திட்டத்தையும் தொழிற்சங்கள் சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும்

அத்துடன், தமது இறுதித் தீர்மானத்தை தொழிற்கங்கள் ஏற்க மறுத்தால் அது கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வழிவகுக்கும் என்றும் அவ்வாறு நடந்தால் சம்பள சபையை நாட வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ,

தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும்
இறுதி யோசனையை சமர்ப்பித்துள்ள இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள்

• ஒவ்வொரு தோட்டத் தொழிலாளருக்கும் நிலையான எதிர்காலத்தை வழங்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
• புதிய திட்டமானது தொழிலாளரின் நாளாந்த வருமானம் ஆயிரம் ரூபாவை தாண்டுவதை உறுதி செய்கிறது
• ஒட்டுமொத்த தோட்டத்துறையினதும் நிதி ஸ்திரத்தன்மைக்கு அனைத்து பங்குதாரர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் (ஆர்.பி.சி) தலைவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் பெருந்தோட்ட துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்துகின்றது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர், “அமைச்சருடான சந்திப்பு மிக பயனுள்ளதாக அமைந்தது. எமது தொழிலாளர்களுக்கு மிக உயர்ந்த வருமானத்தை பெறக்கூடிய திறனை வழங்கும். அத்துடன் எமது இந்த வரைவு மாதிரிக்கு அமைய வருமானத்தில் 30மூ அதிகரிப்புக்கு உதவலாம். அத்துடன் உற்பத்தித்திறன் அடிப்படையிலான முறைமையின் கீழ் தொழிலாளர்கள் அதிக வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது எமது முழுத் தொழிலையும் நவீனமயமாக்குவதற்கான முதல் படியாகும், மேலும் காலனித்துவ சகாப்தத்தின் நினைவுச்சின்னமாகவும், புதுப்பித்தலுக்கான நீண்ட கால தாமதமாகவும் இருக்கும் ஒரு அடிப்படை நாளாந்த சம்பள முறையை தாண்டிய ஒரு நடவடிக்கையாகவே உள்ளது”

“நாங்கள் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளாக இருந்த ஆயிரம் ரூபா சம்பளத்தை தாண்டிச் சென்;றுள்ளோம். இது முன்பிருந்த ஒப்பந்தத்தில் இருந்ததைவிட 40மூ அதிகரிப்பாகும். ஆடை மற்றும் சுற்றுலா துறையின் சம்பளங்கள் குறைக்கப்பட்டு தொழிலாளர்கள் தொழில்களை இழக்கும் தருணத்தில், எமது ஊழியர்களை தொற்றுநோய்களின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாத்து, சம்பள உயர்வை அதிகரிக்க எடுத்த தீர்மானம் முக்கியமாகும். இது எளிதான விடயமல்ல. இது இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் தமது வருமானத்தை நிலையாக வைத்திருப்பதற்கு கடினமான நிலைமையாகும். எமது நிலை தொடர்பாக அரசாங்கத்திற்;கு தெளிவுபடுத்தியுள்ளதுடன், அதன்படி சரியான முடிவை எடுக்க வேண்டிய தேவை தற்போது தொழிற்சங்கங்களிடமே உள்ள ” என அவர் தெரிவித்தார்.

இந்த புதிய நிதி திட்ட வரைவுக்கமைய இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் நாளாந்தம் நிலையான சம்பளமாக ரூ.1,105ஐ நிர்ணயித்துள்ளன. அத்துடன் நாளாந்த வருகை மற்றும் உற்பத்தித்திறன் ஊக்கங்களை மீள அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றை தொழிற்சங்கங்கள் முன்னர் எதிர்த்தபோதும் சமீப காலமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் விளைவாக தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றியுள்ளன.

நாளாந்த சம்பள பிரிவுகள் இவ்வாறு அமைகின்றது. அடிப்படை சம்பளம் – ரூ. 700, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி (நுPகுஃநுவுகு) – ரூ. 105, வருகை ஊக்குவிப்புத் தொகை – ரூ. 150 மற்றும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்புத் தொகை – ரூ. 150. புதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் ரூ.6,250 அதிகரிக்கப்பட்ட தொகை கிடைக்கும்.

திருத்தப்பட்ட நாட் சம்பள மாதிரிக்கு மேலதிகமாக, தொழிலாளர்களுக்கு இறுதியாக பயனுள்ள ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதையும் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் வெகுமதி பெறுவதையும் உறுதி செய்வதற்காக உற்பத்தித்திறன் – இணைக்கப்பட்ட வருமானம் ஈட்டும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் பரிந்துரைத்துள்ளன.

முன்மொழியப்பட்ட நிலையான நாளாந்த சம்பள மாதிரி வாரத்தில் 3 நாட்கள் செயல்படுத்தப்படும், ஏனைய நாட்களில் அவை இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் முன்வைக்கும் தனித் திறன் சார்ந்த இரண்டில் ஒன்றை அடைவதன் ஊடாக தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமான ரூ.1,105 ஐ விட அதிகம் வருமானத்தை அடையலாம்.

உற்பத்தித்திறன் – இணைக்கப்பட்ட கூறுகளின் கீழ், ஊழியர்கள் பறித்த ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் ரூ. 50 (நுPகுஃநுவுகு உட்பட) தொகையையும் இறப்பரை பொறுத்தமட்டில் ஒரு கிலோ இறப்பருக்கு ரூ. 125 ( நுPகுஃநுவுகு உட்பட) வழங்கப்படுகின்றது.

மாற்றுத் திட்டமாக இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் துறையில் வெற்றியுடன் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளதைப் போலவே, அதிக வருமானத்தை வழங்கும், வருமான பகிரக்கூடிய மாதிரியின் அடிப்படையில் ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள். இந்த இரண்டு மாதிரிகளையும் தொடர விரும்பாத நிறுவனங்கள், நிலையான நாளாந்த சம்பள முறையைத் தொடர உரிமையை (தங்கள் விருப்பப்படி) வழங்கும்.

தற்போது, தேயிலை உற்பத்தி செலவு ஒரு நாளைக்கு 615 ரூபாய், அது உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் எந்தவொரு நாட்டுடன் ஒப்பிடும் போது இது அதிகமாகும். அதன்படி ஒட்டுமொத்த உற்பத்திக்காக ஏற்படும் தொழிலாளர்களின் மொத்த உற்பத்தி செலவில் 63மூ ஆகும். நாளாந்த வருமானம் ரூ. 1,105. நாளாந்த உற்பத்தி செலவு இனி ரூ.730 ஆகும். துரதிர்ஷ்டவசமாக, அதிக உற்பத்தி செலவு இருந்த போதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலையான விலையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது இந்தத் துறையின் பொருளாதார நம்பகத்தன்மையை மேலும் குறைத்துவிடும்.

ஆரம்பத்தில் ஆர்.பி.சி தேயிலை ஏல விலை என்றுமில்லாத வகையில் ரூ. 2017 இல் சராசரியாக கிலோவுக்கு ரூ.601 (அமெரிக்க டொலர் 3.99) மற்றும் அதன் பின்னர் கிலோவுக்க ரூ. 581 ஆகும் (அமெரிக்க டொலர் 3.16). இருப்பினும், இலங்கையின் தேயிலைக்கு உலகளாவிய சந்தையில் விலை அதிகரித்ததால் விலை போட்டியற்றதாகிவிட்டது, குறிப்பாக கென்யாவில் நடந்த மொம்பாசா ஏலத்தில் தேயிலைக்கு 1.94 அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில். கென்யா போன்ற போட்டியாளர்கள் பயிர் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வெளிப்படுத்தி உலகளாவிய ரீதியில் 50மூ வரையான சந்தை விநியோகத்திற்கு வழிவகுத்தது. இது இலங்கை தேயிலையை சர்வதேச சந்தையில் குறைப்பதற்கு கட்டாயத்திற்கு உள்ளானது.

“உலகளவில் மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சந்தை நிலைமைகளால் தேயிலைத் தொழில் வீழ்ச்சியடைந்திருந்தது. கொவிட்-19 காரணமாக மோசமான பொருளாதார நிலைமைகள், உலகளாவிய நாடுகளுக்கு இடையிலான முடக்கல்கள் மற்றும் போக்குவரத்து விரைவாக வீழ்ச்சியடைந்ததால் சிக்கல்கள் ஏற்பட்டன. இது தொழில்துறையின் நீடித்த தன்மையையும், இலங்கை தேயிலை வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இருப்பினும் இன்னுமொரு சாத்தியமான, நிலையான வழி உள்ளது, ஆனால் அதனை தொடர, அனைத்து பங்குதாரர்களும் இந்த அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்: நாம் சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பளம் செலுத்த முடியாது. உலகளாவிய சந்தை செயற்பாடுகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. இலங்கை தேயிலைக்கு ஒரு நிலையான பாதையை அடைவதற்கான ஒரே வழியாக உற்பத்தி திறனை அதிகரிப்பதே சிறந்தது. அவ்வாறு இல்லையென்றால் இந்த தொழிலை முற்றாக அழித்துவிடும். இந்த உண்மைகளை மிகவும் கவனமாக பரிசீலிக்க மீதமுள்ள பங்குதாரர் குழுக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்”

“அமைச்சர் மற்றும் ஜனாதிபதி எமது திட்டங்களில் உள்ள பெறுமதியை காண்பர் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. மேலும் எங்கள் தொழில்துறையின் நீடித்த தன்மையைப் பாதுகாப்பதில் அவை எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இப்போது, நாங்கள் பல திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம், அவை அனைத்தும் தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன, அவை எந்தவொரு சிறந்த சாத்தியமான மாற்றுத் திட்டத்தையும் சமர்ப்பிக்;க தவறிவிட்டன. நாம் முன்வைக்கும் அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டத்தக்க விதத்தில் அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கு அணிவகுத்து நிற்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிந்துள்ளதுடன் ஆனாலும் தொழிலாளர் வருமானத்தை அதிகரிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறைவடைந்து வரும் நமது தொழிலாளர் சக்தியைக் கருத்தில் கொண்டு, உழைப்பை ஈர்க்கும் மற்றும் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும், அதாவது உலகளாவிய சிறந்த நடைமுறைகள் காலத்திற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை புதுப்பித்தலாகும். எவ்வாறாயினும், எங்கள் இறுதி தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால், அது கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழிவகுக்கும், அதனுள் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூஜ்யமாகவும், வெற்றிடமாகவும் மாற்றும். அதன்பிறகு நாம் சம்பள சபைக்கு மட்டுமே செல்ல முடியும். இது நாங்கள் எடுக்க விரும்பும் ஒரு நடவடிக்கை அல்ல, ஏனெனில் இது தொழிலாளர்களுக்கு சிறந்த ஒப்பந்தத்தை வழங்காது. ஆனால் ஒரு கூட்டு ஒப்பந்தம் இல்லாமல், இதுவே ஒரே வழி”என்று அவர் குறிப்பிட்டார்.

1000 ரூபா சம்பள விவகாரத்தில் இ.தொ.கா நழுவாது : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நாட் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாதம் இறுதிக்குள் நல்ல பதில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்க வேண்டும், அதுவும் அடிப்படை சம்பளமாக அமைய வேண்டும் என பல்வேறு மட்டத்தில் வழியுறுத்தப்பட்டு வருகின்றது. .

இருப்பினும் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நழுவப்போவதில்லை என காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது தலைவரின் கடமை ஆகையால் சம்பள விடயத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமான பதில் இம்மாத இறுதிக்குள் கிட்டும், அதை நான் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...