Home Blog Page 3661

நாட்டில் கடந்த 21 நாட்களில் 12,615 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கடந்துள்ள 21 நாட்களில் மாத்திரம் 12 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 543 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 440 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 960 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 114 பேருக்கும், பதுளையில் 22 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

3 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் – 32 பேர் பலி

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது, இருவரும் தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளில் ஈராக்கில் நடந்த முதலாவது தற்கொலைப்படை தாக்குதல் இதுவே ஆகும். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாணியை நினைவுபடு்த்தினாலும், இதற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

‘டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்’ – ரிஷாப் பண்ட்

டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விடயம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்ட் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்டிடம், உங்களை டோனியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு 23 வயதான ரிஷாப் பண்ட் கூறுகையில்,

‘டோனி போன்ற மிகச்சிறந்த வீரருடன் என்னை நீங்கள் ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை, எந்த வீரருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட்டில், எனக்குரிய அடையாளத்துடன் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விடயம் அல்ல. ஆஸ்திரேலிய தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து ஒட்டுமொத்த அணியினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றார்.

சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்களும் விளாசி ரிஷாப் பண்ட் ஹீரோவாக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாத்திரம் 873 பேருக்கு கொரோனா – இருவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றுமாத்திரம் 873 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 866 பேருக்கும், கைதிகள் 7 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் அண்மைய நாட்களில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாகவும் நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆகவும் அதிகரித்துள்ளது.

பேலியகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடுமையான நியூமோனியாவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர் தப்பியோட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றிய நபரொருவர் தப்பியோடியுள்ளார்.

கட்டுநாயக்க – வலனாகொட பகுதியில் தங்கியிருந்த இவரை, கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவேளையிலேயே தப்பியோடியுள்ளார்.

பதவிய போகஹபிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் 10 வருடமாக பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக்கம் :

அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் 10 வருடமாக பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக்கம் : செந்தில் தொண்டமானின் அதிரடியால் தோட்ட மக்களுக்கு தீர்வு!

அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் கடந்த 10 வருடகாலமாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆதிக்க காணப்பட்டுவந்த விவகாரம் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அந்த பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்துள்ளார்.

அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயம் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் புனரமைப்புப் பணிகளுக்காக உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஆலயத்தின் நிர்வாகச் சபைத் தலைவராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் இருந்தமையால் இந்த ஆலயத்தை கடந்த 10 வருடங்களாக புனரமைக்க முடியாது போயுள்ளது. ஆலயத்தில் தோட்ட மக்களால் வழிபாடுகளில்கூட ஈடுபட முடியாத வகையில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் இடர்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.

பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் பெண்ட்ரிக் தோட்டம் அமைந்துள்ளமையால் இந்த மக்கள் பொறுமைக்காத்து வந்துள்ளனர். என்றாலும் ஆலய புனரமைப்புக்காக வழங்கப்படும் நிதியை தலைவராகவுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் தமது தேவைக்காக தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளதால் மக்கள் பொறுமையை இழந்ததுடன், விவகாரத்தை தோட்ட மக்கள் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

நேரடியாக விடயத்தில் தலையிட்டு ஆலய நிர்வாகத்தை தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் ஆலயத்தை புனரமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொடுக்கவும் செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார்.

இதற்கான உத்தரக் கடிதம் சீதாவக்க பிரதேச சபைக்கும் பிரதேச செயலாளருக்கும் இந்துச் சமய கலாசார அலுவலகங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனால் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளனர். 274 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 51 ஆயிரத்து 666 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ – ஐவர் பலி!

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம்  தயாரிக்கின்றது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கடும்போராட்டத்திற்குப்பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், கட்டுமானம் நடந்து வந்த இடத்தில் ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது என புனே மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீரம் நிறுவனத்தின் சிஇஓ-வும் உரிமையாளருமான ஆதார் பூனவல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் தீ விபத்தால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலம் என டி நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகம் ஆன டி நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. டி நடராஜன் மாலை சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார்.

அப்போது செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலமாக அவரை வரவேற்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் அவரை வரவேற்க தடைவிதிக்கப்பட்டது. கைக்குலுக்குவதற்கும், சால்வை அணிவிப்பதற்கும் தடைவிதித்தது. மேலும், 14 நட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வரவேற்பு விழா நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அகற்றியது.

பசறையில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

பசறை நகரிலுள்ள  பிரபல பாடசாலை ஒன்றில் (பசறை மத்திய மகா வித்தியாலயம் )
ஆறு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இன்று( 21/01)
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 4 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவிகளும் அடங்குகின்றனர்.

குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை அறிக்கையின்படி இன்று தொற்றாளர்கள்  உறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இவர்களில் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரும்
, லுணுகலை பிரதேசத்தைச் சேரந்த மூன்று பேரும் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...