Home Blog Page 3660

ஜனாதிபதி கோட்டாவின் இரு கதாபாத்திரங்களும் ‘பெயில்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இரண்டு கதாபாத்திரங்களுமே ‘பெயில்’ – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தனக்கு இரு முகங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் இந்த இரு கதாபாத்திரங்களையும் அடையாளம் காண்பது தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. நல்ல பக்கம் எது, கெட்ட பக்கம் எது என்பது தெரியாமல் உள்ளது. என்னை பொருத்தவரையில் இரு காதபாத்திரங்களுமே பெயில் என்றுதான் கூறுவேன்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் தொடர்பில் ஒரு கார்ட்டூனைக்கூட வரையும் சுதந்திரம் இருக்கவில்லை. அரசாங்கத்தை விமர்சித்த சில ஊடகவியலாளர்களுக்கு இவ்வுலகைவிட்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் 2015 இல் அவர்களுக்கு வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போதும் எதிரணியை மிரட்டி, அச்சுறுத்தல்விடுத்து – மௌனிக்க வைத்து பழைய யுகத்துக்கு செல்வதற்கு முயற்சிக்கின்றனர். “ – என்றார்.

அதேவேளை, ஜனாதிபதியின் அறிவிப்பை திரிவுப்படுத்தி எதிரணி உறுப்பினர்கள் கருத்து வெளியிடுவதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தயாப்பா பண்டார தெரிவித்தார்.

முடிந்தால் அனுரவை சிறையில் அடைக்கவும் – ஜே.வி.பி. விடுத்துள்ள சவால்

அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டுமாறு ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஊடாக அநுரகுமார திஸாநாயக்கவும் தவறு செய்துள்ளதாக ஒரு கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுக்களால் தண்டனை வழங்க முடியாது. நீதிமன்றத்தால்தான் தண்டனை வழங்க முடியும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.

மக்களுக்கு நாம் ஒன்றை தெளிவாக தெரிவிக்க விருப்புகிறோம். நாம் எப்போதும் பேய்களுக்கு பயப்படுவதில்லை. ஆகவே, நாம் அரசாங்கத்திற் பயமில்லை. அநுரகுமார திருடர்களுக்கு பயமென்றால் அவர்களை திருடர்களென கூறமாட்டார். ராஜபக்சவின் அரசாங்கத்தில் பலர் ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டனர் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் அறிந்துதான் தகவல்களை வெளியிட்டுள்ளோம்.

ஷஊழல் எதிர்ப்பு குழுக்கள் என ஊழல்வாதிகளே குழுக்களை அமைத்துக்கொண்டு அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குகின்றனர். அவ்வாறான ஊழில் குழுக்களின் மூலம்தான் பிள்ளையானை விடுதலைச் செய்துள்ளனர். அந்த குழுக்கள் ஊடாகதான் சிபாரிசுகள் வருகின்றன. பல்வேறு ஊழல் – மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களின் ஈடுபட்டவர்கள்; விடுதலைச் செய்யப்படுகின்றனர்.

ஆகவே, நீதிமன்றம் நீதியானதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாம் தயார். அதேபோன்று பாராளுமன்றத்திலும், அதற்கும் வெளியிலும் என அனைத்து இடங்களிலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.

முடிந்தால் நீதிமன்றில் குற்றவாளியாக்கி அநுரகுமாரை சிறையில் அடைத்துக்காட்டுங்கள். மக்களின் பணத்தில் ஒருசதத்தைக்கூட கொள்ளையடிக்காதவர். ஊழல் எதிர்ப்பு குழுவில் அநுரகுமார திஸாநாயக்கவால் செய்யப்பட்ட ஒருவிடயத்தை நிரூபித்துக்காட்டுங்கள் என்றார்.

க.கிசாந்தன்

‘நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று’

நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர். 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 52 ஆயிரத்து 548 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம் -மனோ கணேசன் சுட்டிக்காட்டு

ட்ரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது இலங்கைக்கு ஒரு பாடம்.

நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர, இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அமெரிக்க ஜனநாயக தேச அமைப்பின் ஏனைய தூண்கள், “ஆம் ஐயா” (இயஸ் சேர்) என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் சரணடையவில்லை.

நீதித்துறையும், பாராளுமன்றமும், ஊடக துறையும் ஜனாதிபதி ட்ரம்பை வெளுத்து வாங்கி வெளியேற்றி உள்ளன.

இன்று “ஜனாதிபதி சேர்” தோற்றுபோய் அவமானப்பட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு வென்றுள்ளது.

அமெரிக்காவின் தேர்தலை அடுத்த ஆட்சி மாற்ற குளறுபடிகளை பார்த்து, இலங்கையின் பல பேரினவாத “அறிவாளிகள்” அமெரிக்காவை எள்ளி நகையாட தொடங்கினர்.

அமெரிக்காவை விட தங்களை, மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக காட்ட முற்பட்டனர்.

உலகிற்கு அறிவுரை கூற அமெரிக்கா தகுதியற்றது எனக்கூறி தங்களது இனவாத அட்டூழியங்களுக்கு நியாயப்பாடுகளை தேட முற்பட்டனர்.
இன்று இவர்களுக்கு, நெற்றியில் செருப்பால் அடித்ததை போல் அமெரிக்க ஜனநாயக அமைப்பு நிமிர்ந்து நிற்கிறது.

நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர, இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெளியுறவு கொள்கைகள் தொடர்பான எங்களது கருத்து முரண்பாடுகள் அப்படியே இருக்க, அமெரிக்காவின் இந்த உள்நாட்டு ஜனநாயக வெற்றியை நாம் பாராட்டுகிறோம்.

இப்போது இந்த இடைக்காலத்தில், அமெரிக்காவை விமர்சித்த இலங்கை இனவாத வீரர்களை தேடுகிறோம். காணவில்லை.

பசறையில் மேலும் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேச பிரபல பாசாலையொன்றில் மேலும் இரண்டு மாணவர்களுக்கு இன்று( 22/01) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி இனங்காணப்பட்ட தொற்றுக்குள்ளான இரண்டு மாணவர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிய 06 மாணவர்கள் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டதோடு, இன்று மேலும் இரண்டு மாணவர்களுக்கு இன்று தொற்றுறுதி செய்யப்பட்டது என பசறை பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானோரோடு நெருங்கிய தொடர்பை பேணிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்கள் இன்று தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்ப

‘கண்டி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 1,200 வீடுகள்’ – பாரத் அருள்சாமி தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைய ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு ஒரு வீடு என்ற செயற்றிட்டம் கிராம பகுதிகளுக்குச் சேர்ந்த போதிலும் என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க கண்டியில் தோட்ட பகுதிகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாசக்தியின் செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய ரங்கலை பெரி தோட்டத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு ஒரு வீடு என்ற செயற்றிட்டத்தை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தியின் பணிப்பாளர் நாயமுமான பாரத் அருள்சாமி, தெல்தெனிய பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இ.தொ.கா.வின் மாவட்ட தலைவர் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய பாரத் அருள்சாமி,

” இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடாக கண்டி மாவட்டத்திற்கு ஆரம்ப கட்டமாக 1,100 இந்திய வீடமைப்பு திட்டமும் தோட்ட உட்கட்மைப்பு அமைச்சின் ஊடாக 100 வீடுகளும் 32 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களும் என்னுடைய கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.

பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்றதன் பின்னர் தகவல் தொழில்நுட்பம், சுய தொழில், பண்ணை வளர்ப்பு போன்ற அபிவிருத்தி திட்டங்கள் தோட்ட பகுதிகளுக்கு கொண்டுச் சேர்க்கும முதல் கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுய தொழில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் கண்டி மாவட்டத்திற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, அரசாங்கம் கொண்டுவந்துள்ள பத்திக் சாரி உற்பத்தி, கூட்டு பண்ணை மரபு போன்றவற்றை நாங்கள் மலையகம் தோறும் கொண்டுச் செல்வுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், பன்வில, ரங்கலை, கெலாபொக்க, உலுகங்கை, மீமுறே போன்ற பிரதேசங்களை இணைத்து ஒரு சுற்றுலா வலையத்தை உருவாக்குவதன் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்க முடியும். உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளையும் இதனூடாக முன்னெடுக்க முடியும்.

அதேபோன்று, தோட்டபுறங்களில் காணப்படும் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

‘கொரோனாவிலிருந்து 48,617 பேர் மீண்டனர்’

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 633 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 183 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 56 ஆயிரத்து 76 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கு கொரோனா’

டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் மிட்போட் தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவருக்கும், நோர்வூட் வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளங்கன் வைத்தியசாலைக்குநேற்று சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் என்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் உச்சம்’

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரச வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மூச்சுத்திணறலால் பெங்களூரு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரச வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது.

சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன.

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.” -என்றுள்ளது.

கொழும்பில் நாளை நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு – 1, 2, 3, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணிமுதல் மறுநாள் காலை 9.00 மணிவரையான 24 மணிநேரப் பகுதியிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...