Home Blog Page 3659

‘அநுராதபுரத்தில் ஒரு பகுதி முடக்கம்’

அநுராதபுரம் மாவட்டத்தில் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியின் 295 ஏ, கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கொரோனா வைரஸ் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறை தொடரும்.

‘சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு’

காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதில் காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினை குறித்து ஆராய மூவரடங்கிய குழு நியமனம்

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உயரதிகாரிகளைக் கொண்ட இக்குழு, கடற்றொழில் அமைச்சு, திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற் படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான பரந்துரைகளை கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கவுள்ளது.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செய்ற்பபாடுகளினால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன் இலங்கையின் கடல் வளமும் அழிவடைந்து வருகின்றது.

இதனால், குறித்த சட்ட விரோதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற் படையினரால் மேற்கொள்ளபப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்பட்ட துரதிஸ்ட சம்பவத்தின் காரணமாக நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான சூழலில், குறித்த எல்லை தாண்டிய செயற்பாடுகளை நிரந்தரமாக நிறுத்துவதனை நோக்கமாகக் கொண்டு குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

‘அமைச்சரவைக்குள்ளும் ஊடுருவியது கொரோனா வைரஸ்’

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவுகள் இன்று (23) வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் இதற்கு முன்னர் மூன்று இராஜாங்க அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை இதுவே முதல்முறையாகும்.

அதேவேளை, சுகாதார அமைச்சர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.

புதிய வகை கொரோனா இங்கிலாந்தில் ஊழித்தாண்டவம் – ஒரு நாளில் 1,401 பேர் பலி!

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால்  ஆயிரத்து 401 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தை உலுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், மறுபுறம் வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் பரவலாக ஊகங்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போரிஸ் ஜான்சன், “

தென்கிழக்கில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் அதிக அளவு இறப்பு ஏற்படுத்துவதற்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் உள்ளன” என்றார்.

மேலும், தற்போதைய கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த போரிஸ் ஜாசன், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுப்பதாக கூறினார்.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் சீனா உள்பட சுமார் 60 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து 27 ஆம் திகதி இலங்கை வருகிறது கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இருந்து 6 லட்சம் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை  கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகமாக இந்தியாவிடம் இருந்து குறித்த 6 இலட்சம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘கிழக்கு முனையத்தை விற்கவே கூடாது’ – சுதந்திரக்கட்சி வலியுறுத்து

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமூன மைத்திரிபால சிறிசேன கூறியவை வருமாறு,

” நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் துறைமுகத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வேண்டுகோளை நான் ஏற்கவில்லை.

அத்துடன், கிழக்கு முனையத்தை வெளிநாட்டிடம் ஒப்படைக்கமாட்டேன் என துறைமுக ஊழியர்களுக்கும் உறுதிமொழி வழங்கினேன். எனவே, அந்த உறுதிமொழியில் – கொள்கையில் நான் உறுதியாக இருக்கின்றேன். சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடும் இதுவே. எந்தவொரு காரணத்துக்காகவும் கிழக்கு முனைத்தை விற்பனை செய்ய – விட்டுக்கொடுக்க இணக்கம் தெரிவிக்க முடியாது.” – என்றார் மைத்திரி

தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான் – வார்னர் புகழாரம்

‘வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான தமிழகத்தின் நடராஜனை ஒரு ஜாம்பவான்’ என்று ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் தலைமையில் விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கடந்த ஐ.பி.எல். சீசனில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார்.

அது மட்டுமின்றி அந்த ஐ.பி.எல்.-ல் மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்ட அவர் ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனதுடன் மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகள் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

அவருக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்து ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் முதலில் ‘வாழ்த்துகள் நட்டு’, என்று தமிழில் பேசியுள்ள வார்னர் அதன் பிறகு, ‘நடராஜன், நிச்சயம் நீங்கள் ஒரு ஜாம்பவான். நான் உங்களுடன் நிறைய நேரத்தை செலவிட்டு இருக்கிறேன். களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நீங்கள் சிறப்பான மனிதர். நீங்கள் எங்கள் அணியில் (ஐதராபாத்) இருப்பதை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.

மேலும் வார்னர் கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக அவருக்கு நான் கேப்டனாக இருந்துள்ளேன். நடராஜன் வியப்புக்குரிய வீரர். பணிவானவர். உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அவரது பந்து வீச்சு இருந்ததை பார்த்தோம். அதைத் தொடர்ந்து வலைபயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தார்.

தனக்கு முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்க செல்லாமல் தியாகம் செய்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு மகத்தான சாதனை. அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்ய வேண்டும், சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கடந்த முறை இறுதிகட்ட பந்துவீச்சில் நேர்த்தியாக செயல்பட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றும் குறிப்பிட்டார்.

‘கொரோனாவால் உலகளவில் 21 லட்சத்துக்கு மேற்பட்டோர் பலி’

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 87 லட்சத்து 48 ஆயிரத்து 510 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 7 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொகவந்தலாவை சிகிச்சை நிலையத்தில் 112 பேர் அனுமதி – 50 பேர் குணமடைவு!

பொகவந்தலாவை மோரா தோட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையம் கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையமாக மாற்றப்பட்டு இதுவரையில் 112 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சிகிச்சை நிலையத்திற்கு கொழும்பு,தலைமன்னார், நிட்டம்புவ, கம்பஹா, வலப்பனை மற்றும் நுவரெலியா பகுதிகளை சேர்ந்த தொற்றாளர்களே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

138 பேர் சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டுள்ள மேற்படி சிகிச்சை நிலையத்தில் இதுவரையில் 50 பேர் குணமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்த

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...