Home Blog Page 4044

ஆண் சிசுவை குழிதோண்டி புதைத்த தாய் – 15 நாட்களுக்கு பின் சடலம் மீட்பு! டிக்கோயாவில் கொடூரம்!!

தனது தாயால் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆண் சிசுவொன்று, 15 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட பெருந்துயர் சம்பவமொன்று ஹட்டன் – டிக்கோயாவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து இன்று (22) ஹட்டன் – டிக்கோயா தோட்டத்துக்குச்சென்ற பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய தாயிடம் விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் சிசு புதைக்கப்பட்ட இடத்தை அவர் காட்டியுள்ளார். ஹட்டன் நீதிமன்றத்தின் பதில் நீதவானின் கண்காணிப்பின்கீழ் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சட்டவைத்திய அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.

சிசுவின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இக்கொடூரச்செயலில் ஈடுபட்ட பெண் ஏற்கனவே திருமணமானவர், அவரின் கணவர் உயிரிழந்துவிட்டார் எனவும், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

பலாங்கொடை குடிநீர் பிரச்சினை – களத்தில் இறங்கினார் ஆனந்தகுமார்

பலாங்கொடை – விகிலிய – அல்தொரவத்த பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் கள விஜயமொன்றில் ஈடுபட்டு விடயங்களை ஆராய்ந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள சுமார் 300ற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்களில் இன்று செய்தி வெளியாகிய நிலையிலேயே அவர் இந்த கள விஜயத்தில் ஈடுபட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கிணறு தற்போது முழுமையாக செயலிழந்துள்ளதாக அறிய கிடைத்தது.

கடந்த ஆட்சியாளர்கள் குறித்த கிணறை செய்து கையளித்துள்ள போதிலும், பிரதேச மக்களிடமிருந்து மாதாந்தம் 2000 ரூபாவை அறவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் ஆனந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவ்வாறான நிலையில், குறித்த கிணற்றிற்கு பொருத்தப்பட்ட நீரை பெற்றுகொள்வதற்கான இயந்திரம் இரண்டு மாதங்களிலேயே செயலிழந்து விட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான குடிநீரை பெற்றுகொள்வதற்கு சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை சென்று நீரை பெற வேண்டிய நிலைமை உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமது பிரச்சினைகளை கடந்த ஆட்சியாளர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என ஆதங்கம் வெளியிட்ட அந்த பிரதேச மக்கள், தாம் ஆனந்தகுமாரை தற்போது நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி – பதறுகிறார் ரிஷாட்

பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,

“குருநாகல் மாவட்டத்துக்கு இன்று வருவேனா என்பது, நேற்றுமாலை வரை எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. வரமுடியுமா அல்லது வரவிடுவார்களா? என்று எதுவுமே தெரியாத நிலையில் இருந்தேன். கட்சியின் தவிசாளர் அமீர் அலியுடன் தொடர்புகொண்டு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில், என் சார்பில் கலந்துகொள்ள ஆயத்தமாகுமாறும் வேண்டினேன்.

நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கு ஏதாவது வழக்கு இருக்கின்றதா? அல்லது தவறு ஏதும் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றதா? 17 வருட அமைச்சுப் பதவி உட்பட, சுமார் 20 வருடகால அரசியலில், என்னைப் பற்றி போலியான கதைகளை பரப்பினார்களேயொழிய, எந்தக் குற்றச்சாட்டும் பொலிஸில் இதுவரை இல்லை.

மக்களுக்கு காணி வழங்கியதற்காக இனவாதிகள் வழக்கிட்டனர். சமூகத்துக்காக பேசியதனால் மதவாதிகள் நீதிமன்றத்தை நாடினர். வேறு எந்த தனிப்பட்ட வழக்கும் எனக்கு இதுவரை கிடையாது.

சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. பேசியதில்லை. தொலைபேசியில் கூட கதைத்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே அந்தக் கயவனின் செயலுடன் என்னையும் தொடர்புபடுத்தி, சிறையில் அடைக்க சதிகள் இடம்பெறுகின்றன.

தேர்தலுக்கு முன்னர் என்னை அடைக்கலாம். எனினும், “இறைவன் பாதுகாப்பான்” என்ற நம்பிக்கை எமக்குண்டு. நமது சமுதாயத்தை அடிமைப்படுத்துவதற்காகவும் பயமுறுத்துவதற்காகவும், சமூகத் தலைமைகளாக அங்கீகரிக்கப்பட்ட எம்மை அச்சுறுத்தி, அடக்கப் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, சிறையில் அடைக்கவும் முயற்சிக்கின்றனர். எம்மை அடைப்பதன் மூலம், சமுதாயத்தை பயமுறுத்த முடியும் எனவும் திட்டமிடுகின்றனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் நிரபராதி. எமது நேரத்தை, காலத்தை வீணடிப்பதே இதன் நோக்கம். என்னை சிறையிலடைத்து, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரித்து, மூன்றிலிரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை எடுப்பதே இவர்களின் திட்டம். அதன்மூலம், சமூக உரிமைகளை இல்லாமல் செய்வது, சமூகத்தை கையாலாகாததாக மாற்றுவதே இவர்களின் திட்டம். இதில் மக்களாகிய நீங்கள் தெளிவாக இருந்துகொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்துகொள்ளுங்கள்.

குருநாகல் மாவட்டத்தில், இம்முறைத் தேர்தலில், இரண்டு வேட்பாளர்கள் தொலைபேசிச் சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்முறை நமது சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றால், வரலாற்றில் ஒருபோதுமே பெறமுடியாது போய்விடும்.

முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை தமது கட்சியில் நிறுத்தாதவர்கள், தமது ஏஜெண்டுகளை அனுப்பி, வெட்கமில்லாமல் வாக்குக் கேட்கின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கினால், நமது சமூகம் தலைகுனிய நேரிடும். நாங்கள் அரசியல் அநாதைகளாகியும் விடுவோம்.

எங்களுக்கு எதுவும் நடக்கலாம். ஆனால், சமூகம் கௌரவத்துடன் வாழ வேண்டும். சமூகத்துக்கு அடித்தால் தட்டிக் கேட்கின்றோம். குருநாகல் மக்களாகிய உங்களுக்கு அடித்தாலும் ஓடி வருகின்றோம். நாங்கள் வரவில்லை என்றால் யார் வருவது? பொம்மைகளாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கின்றார்களா?

இறைவன், குருநாகல் மக்களாகிய உங்களுக்குத் தந்த இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால், உங்களின் தலையெழுத்தை இம்முறை மாற்ற முடியும். சுமார் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட நீங்கள், தொடர்ந்தும் அரசியலில் தனித்துவிடப்பட முடியாது. எனவே, பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்றார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 16 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 16 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O64  ஆக அதிகரித்துள்ளது.

655 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 730 ஆக இருக்கின்றது.

2ஆம் புவனேகபாகு மன்னன் குறித்து மஹிந்த வெளியிட்ட கருத்தால் மனோ சீற்றம்!

நாட்டில் தற்போது இனவாத ஆட்சியே இடம்பெற்றுவருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” குருணாகலையில் இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரசசபை தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மொட்டு கட்சியை சேர்ந்த மேயர் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார். இது குற்றமாகும். தொல்லியல் பெறுமதிமிக்க இடத்தை தரைமட்டமாக்கிய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஆனால், குறித்த மேயர் தனது கட்சி உறுப்பினர் என்பதால் அவரை பாதுகாக்கும் விதத்தில் பிரதமர் கருத்து வெளியிடுகின்றார்.   புவனேகபாகு மன்னன் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளதால், அவர் பெரிய மன்னன் கிடையாது என்ற விம்பத்தை உருவாக்கும் விதத்தில் கருத்து வெளியிடுகின்றார். பிரதமர் பதவியை வகிப்பவர் இவ்வாறு கருத்து வெளியிடுவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும். இதனால் கவலையடைகின்றேன்.

கண்டி இராஜ்ஜியத்தை கடைசியாக தமிழ் மன்னர் ஒருவரே ஆண்டார். இந்தியாவுக்கு சென்று மக்கள் அவரை அழைத்துவந்து அக்கிராசனத்தில் அமரவைத்தனர். அன்று மக்களிடம் இனவாதம் இருக்கவில்லை. இந்த ஆட்சியில்தான் இனவாதம் பரப்பப்படுகின்றது.” – என்றார்.

-44-

ஆட்டோ ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை – சினிமாப் பாணியில் மஸ்கெலியாவில் சம்பவம்

ஆட்டோ சாரதிக்கு மயக்கமருந்து கொடுத்து, பணம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆபரணங்களை கொள்ளையர்கள், கொள்ளையிட்டுச்சென்ற சம்பவமொன்று நேற்று (21) மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மஸ்கெலியா நகரில் 2ஆவது ஆட்டோ நிறுத்துமிடத்திலிருந்து, நோட்டன் பகுதியில் உள்ள  லக்சபானவிற்கு செல்ல வேண்டும் எனக் கூறி 3 இளைஞர்கள், ஆட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ளார்.

இவ்வாறு செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனருக்கு குளிர்பானம் ஒன்றை வழங்கி குடிக்குமாறு கூறியதுடன், தாங்களுடன் அருந்தியுள்ளனர்.

ஆட்டோ நோட்டன் பகுதியை அண்மித்தவேளையில் அதன் ஓட்டுனர் மயக்கமடைந்து, ஆட்டோ வடிகாலில் சென்று நின்றதும் அதில் பயணித்த இளைஞர்கள் ஆட்டோ சாரதியின் பணம்,நகை என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

ஆட்டோ சரிந்துகிடப்பதை கண்ட மக்கள்,  மயக்கமுற்றிருந்த சாரதியை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். நோட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 91 லட்சம் பேர் தப்பினர்

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 721 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 91 லட்சத்து  16  ஆயிரத்து 242 பேர் குணமடைந்துள்ளனர். 53 லட்சத்து 62 ஆயிரத்து 886 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 63 ஆயிரத்து 646  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 லட்சத்து 19 ஆயிரத்து 593  பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

தொண்டமானின் வீட்டுத்திட்ட கனவை நிறைவேற்றுவோம் – பிரதமர் மஹிந்த

” உங்களின் பெறுமதியான வாக்குகளை வீணடிக்காமல் நாட்டை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்துங்கள்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று (2020.07.21) மாலை கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பேதத்தை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் பயன்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் உட்பட அனைத்து மக்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அதிகாரத்திற்கு வரும் பொதுஜன பெரமுன அரசாங்கம் மூலம் மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்ட வீட்டுத் திட்ட முறைகள் தோல்வியடைந்தமை தொடர்பில் பிரதமர் நினைவு கூர்ந்தார். புதிய வீட்டுத் திட்ட முறை தயாரிக்கும் போது வாழ்வதற்கு தகுந்த சூழலுடனான வீட்டுத் திட்ட முறை ஒன்றை தயாரிக்க வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவுடன், உடனடியாக அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒரு வீடு என்ற கணக்கில் 14500 வீடுகளுக்கும் அதிக வீடுகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்க காலப்பகுதியை போன்று போஸ்டர் மூலம் அநாவசிய செலவு செய்து பிரச்சார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவில்லை.

தோட்ட மக்கள் வாழக் கூடிய தகுந்த வீடுகளை வழங்குவது, மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டமான் தற்போது உயிரோடு இல்லை என்ற போதிலும் மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எங்கள் அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனிதகுலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது

இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது.

மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்த பூமியிலிருந்த 99 சதவீத உயிரினங்கள் பேரழிவுகளில் அழிந்துவிட்டன. இந்த பூமியில் பெரும் விலங்காகக் கருதப்பட்ட டைனோசர் இப்போது இல்லை.

எல்லா பேரழிவுகளிலிருந்தும் இதுவரை தப்பிவந்த மனிதக்குலத்தின் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாக இல்லை. ஆம், காலப்போக்கில் மனித இனமும் இல்லாமல் போகலாம்.

மனிதகுலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது

மனிதகுலம் அழியும் என்பதில் வல்லுநர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. ஆனால், பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள்.

அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். மக்கள் தொகை பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும் என்பது அவர் வாதம்.

புவி அழியாது. மனித இனம் அழியும் மனித இனம் இல்லாமலே இந்த புவி ஜீவிக்கும்.

நம் இருப்பின் சாட்சியாக நாம் இந்த புவியில் விட்டுச் சென்ற தடயங்கள் அனைத்தும், நாம் கணிக்கும் காலத்திற்கு முன்பே இல்லாமல் போகும். நம் நகரங்கள் அழியும், பாலங்கள் சரியும்.

இறுதியில் இயற்கையானது நாம் உருவாக்கிய அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும் என மனிதர்கள் அற்ற உலகம் என்ற புத்தகத்தில் அலன் வைஸ்மேன் குறிப்பிடுகிறார். 2007ஆம் ஆண்டு வெளியான இந்த புத்தகம், மனிதர்களற்ற இந்த புவி எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது.

நெகிழி துகள்கள், கதிரியக்கம் மற்றும் பிராய்லர் கோழியின் எலும்புகள் இவைதான் மனித இனம் விட்டு செல்லப் போகும் புதைபடிவ தடயங்கள். கோழியின் எலும்பு இந்த பட்டியலில் எப்படி வந்தது என பார்க்கிறீர்களா? ஆண்டுக்கு குறைந்தது 60 பில்லியன் கோழிகளை இந்த புவியில் கொல்லப்படுகின்றன. அப்போது நிச்சயம் அதன் தடயங்கள் இருக்கத்தானே செய்யும்.

நாம் இந்த புவியில் சில இடங்களுக்குச் செல்லாமல் இருக்கிறோம் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறோம். அங்கெல்லாம் என்ன இருக்கிறது என பார்ப்போம்.

இயற்கை திரும்ப எடுத்துக் கொள்ளும்

செர்னோபில் அணு உலை விபத்து உங்களுக்கு நினைவிருக்கும். உக்ரைனில் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அந்த அணு உலையைச் சுற்றி உள்ள 30 கி.மீ பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது.

மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ள அந்த பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குச் செடி கொடிகளும், விலங்குகளும் பெருகி வருகின்றன.

இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மன்ற நிதி உதவியில், 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, அந்த அணு உலை இருந்த பகுதியில் இப்போது ஏராளமான வனவிலங்குகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியது. அதாவது அணு கதிர் வீச்சைவிட உள்ளூர் தாவரம் மற்றும் விலங்கினத்துக்கு மனித இனமே மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது என விவரித்தது.

இயற்கை ஒரு நிலப்பரப்பை மீட்பதற்கு முக்கிய காரணியாக அந்த பகுதியின் தட்பவெப்பமும் இருக்கிறது.

உதாரணத்துக்கு மத்திய கிழக்கில் உள்ள பாலைவனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் காண முடிகிறது. ஆனால், வெப்ப மண்டல காடுகள் உள்ள பகுதியில் நூற்றாண்டுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் கூட காண முடியாது.

ஐரோப்பியர்கள் 1542ஆம் ஆண்டு பிரேசில் மழைக் காடுகளைப் பார்த்த போது, அங்கு ஓடிய நதிக்கரையில் நகரங்களை அமைத்தனர். ஆனால், ஒரு நோயால் அந்த மக்கள் தொகை முற்றும் முழுவதுமாக அழிந்த போது, அந்த நகரங்களை மீண்டு காடுகள் எடுத்துக் கொண்டன. அதாவது அந்த நகரங்கள் காடாக மாறியது.

யார் துயரடைவார்?

மனித இனம் அழியும் போது, மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த விலங்கினமும், செடி கொடிகளும்தான் அதிக துயர் அடையும்.

உரத்தையும், பூச்சி கொல்லிகளையும் அதிகம் சார்ந்து இருந்த பயிர் வகைகளின் இடத்தை அந்த பயிர் வகைகளின் காட்டுச் செடி வகைகள் பிடிக்கும்.

கேரட் வகை அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும், அது போல சோளமும்தான் என்கிறார் அலன் வைஸ்மேன்.

உதாரணத்துக்குத் தமிழ்நாட்டுப் பின்னணியில் சொல்ல வேண்டுமானால்,இப்போது நம் தேவைக்காக மாற்றியமைக்கப்பட்ட பல் நெல் வகைகள், அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும்.

பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்ட உடன், பூச்சிகள் பல்கி பெருகும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த மனிதன் அனைத்து வகைகளிலும் முயலும் போதே, அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவை பெரியளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டால் என் நேரும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பூச்சிகள் பெருக பெருக அதனை உண்டு வாழும் பிற உயிரினங்களும் பெருகும். அதாவது பறவைகள், கொறித்துண்ணிகள்ம் ஊர்வன என அனைத்தும் பல்கிப் பெருகும். உணவு சங்கிலியில் உள்ள அனைத்து கண்ணிகளும் பெருகும்.

ஆனால், எவை உச்சம் தொட்டாலும், அவை கீழே இறங்கியே ஆக வேண்டும். இப்படி பல்கிப் பெருகிய உயிரினங்கள் அதிக காலம் இருக்காது.அந்த உணவு சங்கிலியில் மனித இனம் இல்லாத காரணத்தினால், அது ஏற்படுத்தும் தாக்கமும் அழுத்தமானதாக இருக்கும்.

ஆம். மனித இனத்தின் அழிவு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு, ஒரு புதிய இயல்பு உருவாகும் வரை, உணவு சங்கிலியில் தாக்கம் செலுத்தும்.

மனித இனம் அழிந்த பின்னரும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட சில விலங்குகள் உயிர்பிழைத்து வாழ அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் வைஸ்மேன். ஆடு, மாடுகள் மெல்ல இல்லாமல் போகலாம். ஆனால், பூனை தப்பிப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.

நாயைவிடப் பூனை அனைத்து சூழலுக்கும் ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கிறது என்கிறார்.

பல்கி பெருகும் வன விலங்குகளால் ஆடு, மாடுகள் கொல்லப்படலாம் என்கிறார் வைஸ்மேன்.

மனித இனம் அழிந்த பிறகு புத்திசாலித்தனம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது?

பதில் கூறுவதற்குக் கடினமான கேள்விதான். புத்திசாலித்தனம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. சூழலியல் சார்ந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது, அதன் காரணமாகப் புத்திசாலித்தனம் பரிணமித்தது என்பது ஒரு கோட்பாடு.

மனிதன் குழுக்களாக வாழப் புத்திசாலித்தனம் உதவியது என்பது அடுத்த கோட்பாடு. இறுதியாக, ஆரோக்கியமான ஜீன்தானா என்பதை அளவிடும் கருவியாகப் புத்திசாலித்தனத்தைக் கருதலாம்.

மனித அழிவுக்கு பிறகும் இந்த மூன்று விஷயங்களும் மீண்டும் நிகழலாம்.

மனித இனத்திற்கு அடுத்தபடியாக, மூளை அளவு அதிகம் கொண்டது பாபூன் குரங்கு வகை.

“காடுகளில் வாழும் இனம் அது. ஆனால், காடுகளைக் கடந்தும் அவை வாழப் பழகி இருக்கிறது. நாம் செய்ததை பாபூன் செய்யக்கூடும். ஆனால், அவை நம்மை போல செயல்படாது என்றே தோன்றுகிறது. அது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறது,” என குறிப்பிடுகிறார் வைஸ்மேன்.

மனித இனம் அழிந்த பிறது தனது செளகர்யமான எல்லையை விட்டு பாபூன் அல்லது பிற உயிரினங்கள் வெளியே வரக்கூடும்.

இந்த புவியின் எதிர்காலம்
நாளையே அழிந்தால் கூட, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இந்த புவி எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு திரும்ப பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.

முன்னமே கரியமில வெளியேற்ற விஷயத்தில் ஆபத்து கட்டத்தைக் கடந்துவிட்டோம்.

அதுமட்டுமல்லாமல், அணு உலை சார்ந்து நமக்கு வேறொரு பிரச்சனை இருக்கிறது.

கதிர்வீச்சு வெளியேற்றத்திலிருந்து இந்த சூழல் மீளும் என்பதை செர்னோபில் உணர்த்துகிறது. ஆனால், இந்த உலகம் முழுவதிலும் உள்ள 450க்கும் அதிகமான அணு உலைகள் மனிதன் அழிந்த பிறகு இயக்க ஆள் இல்லாமல் வெடித்தால் என்ன ஆகும்? அவை எவ்வளவு கதிர்வீச்சை வெளியேற்றும். அவை பூமியில் என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்தும்?

இவை மட்டுமல்ல, எண்ணெய் கசிவு, ரசாயன கசிவு, வெடி விபத்து என மனிதர்கள் விட்டுச் செல்லப் போகும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

இதில் பல சூழலியல் கேடுகள் பல நூற்றாண்டுகளுக்குக் கொழுந்துவிட்டு எரியலாம்.

பென்சில்வேனியா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து பல பத்தாண்டுகளுக்குப் பற்றி எரிந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

மனித இனத்தின் தடயம்
மனித இனம் விட்டு செல்ல போகும் தடயம் அழியப் பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் விட்டு செல்லும் நெகிழிக் கழிவுகளை உண்ணும் அளவுக்கு மைக்ரோப்ஸ்கள் பரிணமிக்கப் பல காலம் ஆகும்.

நாம் அழிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கான்கிரீட் கழிவுகளின் எச்சங்கள் இருக்கும். ஆனால், நிச்சயம் ஒரு கட்டத்தில் அவை முழுமையாக அழியும்.

நாம் நம் சில செயல்பாடுகளை மின்காந்த அலைகளாக மாற்றி இந்த வளிமண்டலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுப்பி வருகிறோம்.

அவை பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும். அந்த மின்காந்த அலைகளின் தாக்கம் தான் இறுதியாக அழியும்.

உடல் எடையை குறைத்து ஸில்மாக மாறிய நடிகை ஹன்சிகா

தனுஷ் நடித்த மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஆனால் இதற்கு முன்பு ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின் தமிழ், தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

ஆனால் சில வருடங்கள் முன்பு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிம்புவடன் மஹா, பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் சமீப காலமாக ஒர்க் அவுட் செய்து தான் உடல் எடையை குறைத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிமாக எழும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

பதுளை பகுதியில் கோர விபத்து: பெண் பலி – இருவர் படுகாயம்

0
பதுளை - தென்னபங்குவ வீதியின் வெலிஹிந்த பகுதியில் உள்ள சரிவான வீதியில், இன்று (16) முச்சக்கர வண்டி ஒன்று பேருந்தை (பஸ்) முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில்...

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

0
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...

நுவரெலியா – பதுளை வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக...