Home Blog Page 4045

மறந்துவிட்டு பயணிக்காதீர்கள்!

சிரேஸ்ட ஊடகவியலாளர் வரதன் கிருஸ்ணாவின் முகநூலில் இருந்து…

83 இனக்கலவரம் நாட்டின் பல பகுதிகளில் நடந்து தமிழரின் இருப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டது, இந்த கலவரம் நடக்கும்போது நுவரெலியா மாவட்டம் மட்டும் அமைதி பூங்காவாக இருந்தது கலவரம் நடந்து இரண்டாம் நாள் அப்போது பிரபல அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்க நுவரெலியா வருகிறார் .

அவர் வந்தவுடன் தனது சகாக்களிடம் கேட்டது நுவரெலியாவை மட்டும் ஏன் விட்டுவைத்து இருக்கின்றீர்கள்” அன்று இரவே நுவரெலியாவில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்படுகின்றன, கந்தப்பொலையில் தமிழருக்கு சொந்தமான பிரபலமான கந்தப்போல ஏஜென்சியின்” வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன அந்த நிறுவனமும் சூறையாடப்படுகின்றது,

இது ஜெஆரின் மேல் தனக்கு இருந்த விசுவாசத்துக்கு காமினி திஸாநாயக்கவால் செய்யப்பட்ட பிரதியுபகாரம்” இந்த இனவாதியின் மகனான நவீன் திஸாநாயக்கவிடம் மலையக தோட்டப்புற வீடமைப்பு காணி உறுதிகளை வழங்குமாறு கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்?

பிரதமருக்கு குடைப்பிடிக்கும் நீங்கள் அவரிடம் இந்த கோரிக்கையை முன் வைப்பதுதானே நியாயம்? காமினியின் தாத்தாவுக்கு இந்த பெருந்தோட்டங்கள் சொந்தம்? தலையை விட்டுவிட்டு வாலுடன் எதற்கப்பா விவாதம்?

குறிப்பு.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பல ஆயிரக்கணக்கான மலையக தமிழரின் வாழ்விடம் இல்லாமற் போனது அவர்களுக்கு எந்தவித நிவாரணங்களையும் வழங்காத காமினி, கொத்மலை பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு நட்ட ஈட்டு தொகையுடன் புதிய வீடுகள் காணி உரிமைப்பத்திரங்களுடன் வழங்கினார் அவற்றில் ஒரு கிராமம்தான் புஸ்ஸல்லாவையின் மிகப்பெரிய தேயிலைத்தோட்டமான ரோத்சைல்ட் தோட்டத்தை சுவீகரித்து அதை நவகோடாதர ” என்று மிகப்பெரிய சிங்கள கிராமமாக உருவாக்கினார்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட கிணறு – குடிநீரின்றி தவிக்கும் 300 குடும்பங்கள்!

பலாங்கொடை விகிலிய அல்தொரவத்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் குடிநீர் பிரச்சினையால் பெரும் இன்னல்களை அனுபவித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

சுமார் 300ற்கும் அதிகமான குடும்பங்கள் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தோட்டப் பகுதியில் நிர்மாணித்து இருந்த கிணற்றின் மூலம் மக்கள் குடிநீரை பெற்று வந்த போதிலும் குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் அந்த கிணற்று நீர் போதுமானதாக இல்லை என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.

கிணற்றில் உள்ள நீர் குடிப்பதற்கு போதுமானதாக இல்லாமையினால் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று நீரைப் பெற்று வர வேண்டிய கஷ்டமான நிலைமை உருவாகி உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டப் பகுதியில் வசிக்கும் கே பழனியாண்டி(55) என்ற தொழிலாளி கருத்து தெரிவிக்கையில் ஆரம்ப காலத்தில் இந்த தோட்டத்தில் அதிகமான குடும்பங்கள் இருக்கவில்லை. எனினும் தற்பொழுது குடும்பங்கள் அதிகரித்துள்ளன. எனவே இந்த கிணற்றின் நீர் போதுமானதாக இல்லை. கிணற்றிலிருந்து மூன்று குடம் நீரை பெற்றவுடன் கிணற்று நீர் வற்றி விடுகின்றது.

கூலி வேலை செய்யும் நாம் குடிநீரைப் பெற சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி எமக்கு குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார்.

இது சம்பந்தமாக பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் சுனில் பேமசிரியிடம் வினவிய போது பலாங்கொடை பிரதேச சபை எல்லைப் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ள கிராமப் பகுதிகளை எதிர்வரும் காலங்களில் இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பலாங்கொட நிருபர்

விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் – நுவரெலியாவில் ஜனாதிபதி உறுதி!

மரக்கறி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதுகாப்பானதொரு எதிர்காலம் உருவாகும் வகையில் தமது அறுவடைகளுக்குரிய விலையை பெற்றுக்கொள்ளக்கூடிய முறைமையொன்றை தயாரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள், பழவகைகள் மற்றும் ஏனைய பயிர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (21) நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வலப்பனை நகரில் சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்தார்.

அரச வங்கிக் கடன்கள் தங்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தரும் வகையில் இல்லையென விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அவற்றுக்கு நியமனங்களை பெற்று வருவோர் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்று வேறு மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். அதன் காரணமாக பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து, அதனை பாடசாலையுடன் இணைத்து பாலம் ஒன்றிணை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையினை ஜனாதிபதி, இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நாளைய தினமே அது பற்றி ஆராய்ந்து விரைவாக அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். பிரதேச மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ரிக்கில்லகஸ்கட பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

வலப்பனை வைத்தியசாலைக்கு பிக்குகளுக்கான வாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணித்து தருமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அபேட்சகர் எஸ்.சதாசிவம், கந்தப்பளை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்குபற்றினார். வருகை தந்திருந்த பிரதேசவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். ஜனாதிபதி க்கு ஆசிவேண்டி சமயக் கிரியைகளும் நடைபெற்றன.

தரம் வாய்ந்த விதை கிழங்குகள் பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு விவசாயிகள் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்தனர். கந்தப்பளையிலிருந்து நுவரெலியா வரையில் வீதியின் இருபுறமும் ஒன்றுகூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி உரையாடினார்.

இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றாடலை பாதுகாக்குமாறு நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். சுயதொழிலாக பெண்கள் சிலர் சேர்ந்து முன்னெடுத்து வரும் “பஜட் பெக்” மரக்கறி மற்றும் பழவகைகள் திட்டம் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழில் மற்றும் காணி உறுதிகள் இல்லாமையினால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் எஸ்பி.திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

‘கந்தக்காடு கொத்தனி பரவலும் கட்டுக்குள் வருகிறது’

நாட்டில் நேற்று (21) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று முன்தினம்வரை 2 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 48 பேர் குணமடைந்துள்ளனர். 671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் சமுக பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் வெலிசர கடற்படை முகாம் விவகாரம் கொத்தணி பரவலை ஏற்படுத்தியது. தற்போது வைரஸ் தொற்றுக்கு இலக்கான அனைத்து படையினரும் குணமடைந்துள்ளனர்.

அதன்பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பரவல், மீண்டும் கொத்தணி தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என நம்பப்படுகின்றது.

எதுஎப்படியோ தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.

சீரற்ற காலநிலையால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – இன்றும் மழை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலைவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்றால் 225 வீடுகள் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

25 லட்சம் சிங்கள வாக்குகளை இழந்துவிட்டோம் – ரணில் கவலை

” ஐக்கிய தேசியக்  கட்சியானது கடந்த காலத்தில் 25 லட்சம் சிங்கள வாக்குகளை இழந்துவிட்டது. அதனை மீளப்பெற்று, தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் தக்கவைத்துக்கொண்டு கட்சி முன்நோக்கி பயணிக்கும்.” – என்று ஐ.தே.கவின் தலைவரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இம்முறை நடைபெறும் தேர்தலும் ஒரு சவால்மிக்கவிடயம்தான். இருந்தாலும் கொரோனாவுக்கு மத்தியில் நாட்டை எவ்வாறு முன்நோக்கி அழைத்துசெல்வது என்பதுதான்  பிரதான சவாலாகும். அதற்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம்.

1993 ஆம் ஆண்டு நான் பிரதமரானபோது, லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்டிருந்தார். எதிரணி எமது பக்கமே விரல் நீட்டியது. மாகாணசபைத் தேர்தலிலும் எதிரணி மூன்று சபைகளைக் கைப்பற்றியது. அதுமட்டுமல்ல ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எமது கட்சியின் பிரதான தலைவர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கட்சியை முன்நோக்கி கொண்டுசெல்வது பெரும் சவாலாக இருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு முன்நோக்கி பயணித்தோம்.

இனிவரும் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியாக நாம் முன்நோக்கி செல்வோம். எமக்கு இல்லாமல்போயுள்ள 25 லட்சம் சிங்கள வாக்குகளைப் பெறுவோம். தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் பாதுகாத்துக்கொள்வோம். ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களை மாத்திரம் நிறுத்தக்கூடியதாக இருந்திருந்தால் இனவாத பிரச்சினைகூட ஏற்பட்டிருக்காது.

ஜனாதிபதி தேர்தலின்போது நாம் எவரினதும் காலை வாரவில்லை. ஒற்றுமையாக பயணிக்கவே முயற்சித்தோம். ஆனால் பிரிந்தசென்றுவிட்டனர். பொதுத்தேர்தலில் ஆட்சியைப்பிடிப்பதே எமது இலக்கு. அதனை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தெளிவான முறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் முன்வைத்துள்ளோம்.” – என்றார்

நுவரெலியாவின் அபிவிருத்தி உறுதியானது : பிரபு முத்தையா

அடுத்த ஐந்து வருடங்களில் நுவரெலியா மாவட்டத்தை அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி செய்வது உறுதி என்று நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நுவரெலியாவிற்கு சென்று திரும்பிய நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி வகிப்பார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

எனவே, அவருடன் இணைந்து பயணிக்கும் பிரதிநிதிகளுக்கு தங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசங்களுக்கு இலகுவாக அபிவிருத்தியை எடுத்துவர முடியும். அதன்படி நுவரெலியாவில் அடுத்த ஐந்து வருடங்களில் கணிசமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் இந்த அபிவிருத்திகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான திட்டங்கள் தம்மிடம் இருக்கின்ற நிலையில், அதற்கான மக்கள் அங்கீகாரம் மட்டுமே தற்போது தேவையாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 வந்தாச்சு! டீசர் இதோ – முற்றிலும் வித்தியாசமான லோகோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 எப்போது என்ற கேள்விகள் டிவி நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் மத்தியில் உதயமாகிவிட்டன. தற்போது கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்புகளுக்கு தடை என இக்கட்டான சூழல் நிலவி வருகின்றது.

இதனால் இவ்வருடம் பிக்பாஸ் சீசன் 4 இருக்குமா என்ற சந்தேகம் பலரின் மனதிலும் இருக்கிறது. தெலுங்கிலும் சீசன் 4 ஐ எட்டிவிட்டது. நிகழ்ச்சிக்கான வேலைகள் தொடங்கிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

போட்டியாளர்களுடன் பேச்சு வார்த்தை, ஒப்பந்தம், ஆன்லைன் மீட்டிங் என நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்பட்டன. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 க்கான டீசர் வெளியாகியுள்ளது.

எனவே தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் தமிழ் பிக்பாஸ் ரசிகர்கள் நமக்கு எப்போது என ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

#BigBosstamil #BigBoss

View this post on Instagram

Here is the most awaited time of the year!!! #BiggBossTelugu4 coming soon on @StarMaa #StaySafeStayStrong #MaaPrayatnamManakosam

A post shared by BIGG BOSS 4 TELUGU OFFICIAL (@bigboss4teluguofficiall) on

தல அஜித்தின் விருமாண்டி 2! இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்.

கமல் ஹாசன் தயாரித்து அவரே நடித்து 2004ஆம் ஆண்டு வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விருமாண்டி.

இப்படத்தில் கமலுடன் இணைந்து நெப்போலியன், பசுபதி, அபிராமி, நாசர் என பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் சதிகளை காட்டி எடுப்பட்டிருந்தலும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்திற்கு இசையமைத்தார் இசைஞானி இளையராஜா. ஆம் இவரின் இசையில் இப்படத்தில் உருவான ஒவ்வொரு படலும் மிக அற்புதமாக வெளிவந்தது.

சமீப காலமாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளிவந்தால் எப்படி இருக்கும் என பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் தல அஜித்தின் ரசிகர்கள் அஜித்தை வைத்து விருமாண்டி 2 என டைட்டிலை சூட்டி ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த போஸ்டர்…

அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு

பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பைத் தொடர்ந்து அண்டத்தில் ஒரு நட்சத்திரம் அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில நட்சத்திரங்கள் ஆயுட்கால முடிவை எட்டும்போது நடைபெறும் சக்திமிக்க வெடிப்பு சூப்பர்நோவா எனப்படுகிறது; இந்த வெடிப்பு அதை அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டதாக இருக்காது.

மாறாக அது விண்வெளியில் மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நட்சத்திரத்தை தாறுமாறாக இயங்கச் செய்யும்.

ஒயிட் டார்ஃப் (white dwarf) எனப்படும் இந்த நட்சத்திரம், வேறொரு நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருந்தது என்றும், அது எதிர் திசையில் பறக்கும் நிலையில் வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் விண்வெளியாளர்கள் கருதுகின்றனர்.

இதுபோல இரண்டு நட்சத்திரங்கள் சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, அவை “பைனரி” எனப்படுகின்றன. இருந்தபோதிலும், இதில் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே விண்வெளியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

SDSS J1240+6710 எனப்படும் இந்த விண்பொருள், முன்பு அசாதாரணமாக வான்வெளி சேர்க்கையைக் கொண்டதாகக் கருதப்பட்டது.

இது 2015ல் கண்டறியப்பட்டது. வழக்கமாகக் காணப்படும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் ஆகியவை இதில் இல்லை. மாறாக, ஆக்சிஜன், நியான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் என வழக்கத்திற்கு மாறான கலவையைக் கொண்டதாக இருக்கிறது.

இப்போது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி சர்வதேச குழுவினர் ஆய்வு செய்ததில், கார்பன், சோடியம், அலுமினியம் ஆகியவை அந்த நட்சத்திரத்தின் வான் மண்டலத்தில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சூப்பர்நோவா நிகழ்வில் முதலாவது வெப்ப ஆற்றல் வெளிப்பாட்டில் இவை உருவாகும்.

ஆனால் இரும்பு, நிக்கல், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற “இரும்பு வகை” தனிமங்களை அதில் காண முடியவில்லை.

கனமான தன்மை கொண்ட இந்தத் தனிமங்கள், லேசானவற்றில் இருந்து உருவாகக் கூடியவை. சூப்பர்நோவா வெப்ப ஆற்றலின் அம்சங்களைக் காட்டுபவையாக இவை இருக்கும்.

SDSSJ1240+6710 -ல் இரும்பு வகை தனிமங்கள் இல்லாதிருப்பதால், அணு ஆற்றல் எரிப்பு முடிவதற்கு முன்னதாகவே இந்த நட்சத்திரத்தில் பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

`ஒயிட் டார்ஃப் என்பதன் அனைத்து முக்கிய அம்சங்களும் இருப்பதால், இந்த நட்சத்திரம் தனித்துவமானது. இது மிக அதிகமான வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. குறைந்த நிறை கொண்ட பொருள்களுடன் இணையும்போது வழக்கத்திற்கு மாறான பொருள்கள் அபரிமிதமாக உருவாதல் அதை அர்த்தமற்றதாக ஆக்குகிறது” என்று பிரிட்டனில் வார்விக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக உள்ள போரிஸ் கன்சிக்கே கூறியுள்ளார்.

“அணு ஆற்றல் எரிப்பின் தடயங்களைக் காட்டும் ரசாயனக் கலவை அதில் உள்ளது. குறைந்த நிறை கொண்டதாக, அதிக அளவில் வேகத்தை அதிகரிப்பதாக உள்ளது; அதைப் போன்றே உள்ள வேறொரு நட்சத்திரத்தில் இருந்து இது வெளியேறி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

வெப்ப ஆற்றல் உற்பத்திக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்றும் காட்டுகிறது. இது ஒரு வகையான சூப்பர்நோவா ஆக இருந்திருக்கலாம், ஆனால் நாம் முன்பு பார்த்திராத வகையாக இது இருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்குப் பிறகு தங்களின் சுற்றுப் பாதையில் எதிர்த் திசைகளில் ஈர்ப்புப் பிடிமானத்துடன் இருப்பதால் அதிக அளவிலான வேகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த நட்சத்திரத்தின் நிறையை விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். சூரியனின் நிறையில் 40 சதவீதம் அளவுக்கு ஒயிட் ட்வார்ப் நிறை இருக்கும். நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிடாத பகுதியளவு சூப்பர்நோவா பாதிப்பால் ஏற்படுவதாக இது இருக்கும்.

அணுசக்தி நிலையங்கள் அல்லது பெரும்பாலான அணு ஆயுதங்களில் இருந்து வெளியாகும் சக்தியில் இருந்து மாறுபட்டதாக சூப்பர்நோவா பாதிப்பில் இருந்து வெளியாகும் அணு ஆற்றல் எரிப்பின் தன்மைகள் இருக்கும். பூமியில் அணு சக்தியின் பெரும்பாலான பயன்கள் அணு பிளவு மூலம் பெறப்படுகின்றன. கனமான தனிமங்களை லேசானவையாக உடைப்பதாக அது உள்ளது. நட்சத்திரங்களில் நிகழும் அணு சேர்க்கை போல இருக்காது.

“பூமியில் நமது எதிர்கால அணுசக்தி நிலையங்களில் பெறுவதற்கு முயற்சிக்கும் வெப்ப ஆற்றலைப் போன்றதாக, சூப்பர்நோவா வெப்ப ஆற்றல் வெளிப்பாடு தன்மை இருக்கும். லேசான தனிமங்களை அணு சேர்க்கை மூலம் கனமானதாக ஆக்கி, அதில் அபரிமிதமான ஆற்றலைப் பெறுவது என்பது நமது முயற்சியாக உள்ளது” என்று பேராசிரியர் கன்சிக்கே பிபிசியிடம் கூறினார்.

“அணுசேர்க்கை உலையில், மிகவும் லேசான ஹைட்ரஜன் தனிமத்தை (மிகவும் குறிப்பாக, மாறுபட்ட மணங்கள் அல்லது அதன் ஐசோடோப்புகள்) பயன்படுத்துவோம். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவில், நட்சத்திரத்தின் தின்மை மற்றும் அதில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும். கனமான தனிமங்களின் சேர்க்கை ஆரம்பமாகும். கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை இதன் `எரிபொருளாக’ இருக்கும். கனமான மற்றும் இன்னும் கனமான தனிமங்களின் சேர்க்கை நிகழும்” என்றார் அவர்.

டைப் லா என்பது தான் மிக சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட வெப்ப ஆற்றல் வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவாக உள்ளது. இருள் எரிசக்தியைக் கண்டுபிடிக்க இது உதவிகரமாக இருந்தது. இப்போது பிரபஞ்சத்தின் அமைப்பை பொருத்திப் பார்ப்பதில் இந்த நடைமுறை வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாக்கள் நிகழலாம் என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

இதுவரையில் அறியப்படாத வகையிலான சூப்பர்நோவா வெடிப்புக்கு ஆளானதாக SDSSJ1240+6710 இருக்கும் என்று கருதப்படுகிறது.

டைப் லா சூப்பர்நோவாக்களின் நீண்ட காலம் நீடித்திருக்கும் மிளிர்ச்சியை அளிக்கும் கதிரியக்கத் தன்மை கொண்ட நிக்கல் இல்லாமல், நமது அண்டத்திற்குள் ஒயிட் ட்வார்ப்-ஐ அனுப்பிய வெடிப்பு என்பது கண்டுபிடிக்க சிரமமானதாக இருக்கும், குறுகிய நேர ஒளிக் கீற்றில் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கை Royal Astronomical Society மாதாந்திர தகவல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பிபிசி அறிவியல் பிரிவு

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

0
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...

நுவரெலியா – பதுளை வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக...

பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

0
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...