Home Blog Page 4043

தேர்தல் சட்டங்களை மீறினால் பிரஜாவுரிமையை இழக்க நேரிடும் : எச்சரிக்கை

ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த எச்சரிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

சமய வழிப்பாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க கூடாது எனவும் சமயம் சார்ந்த உற்சவங்களிலும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க கூடாது எனவும் முன்னரே பல தடவைகள் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுறுத்தல்களையும் மீறி அவ்வாறு செயற்படுவது, தேவையற்ற அச்சுறுத்தல்களை விடுத்தல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே ஒருவர் இதன் கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் அது அவரின் பிராஜாவுரிமையை இரத்து செய்ய காரணமாக அமையும் என்பதோடு சிலவேளை அவர் வெற்றிபெற்றால் அவருக்குரிய ஆசனமும் இல்லாமல் போகும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சட்ட விரோத தேர்தல் பிரசார பேரணிகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர் எண்ணிக்கை 2752 ஆனது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது. அதனையடுத்து மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2752ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 64 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வெளிநாட்டு கடற்படையினர் உட்பட மொத்தம் 29 பேர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தின் மூலமாகவே அவர்கள் இன்று அதிகாலை 1.33 மணியளவில் இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர். சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை வீழ்த்தியது.

யுவென்டஸ் அணி சார்பாக இரண்டு கோல்களையும் 51 மற்றும் 54வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.

இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி, 5 சமநிலை, 4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சீரி ஏ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக இதுவரை 51 கோல்களை அடித்துள்ளார்.

இதன் மூலம் சீரி ஏ, லா லிகா, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

விருதினை வென்ற HNB Finance

தொடர்ச்சியாக நான்காவது தடவையும் ஆசியாவில்பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனங்கள்என்ற விருதினை வென்ற HNB Finance

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் நாட்டிலும்; மற்றும் ஆசியாவிலும் பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனங்கள் 25ற்குள் Great Place to Work நிறுவனத்தினால் அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தினால் வருடம் தோறும் மேற்கொள்ளப்படும் சுயாதீனமான மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Great Place to Work நிறுவனத்தினால் ஊழியர்கள் முதலாளிமார்களுக்கிடையிலான உறவுகள் தொடர்பில் அளவுகோல்களான நம்பகத்தன்மை, மரியாதை மற்றும் நேர்மை, பெருமை மற்றும் சிநேகபான்மை போன்ற ஐந்து முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் விளைவாக ‘A Great Work Place’ சான்றிதழ் HNB Finance நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த மூன்று வருடங்கள் முழுவதும் நிறுவனம் பல்வேறு சமூக சேவைகள் சூழலை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன் ஆட்சேர்ப்பு, பாரபட்சமான அலட்சியம் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் ஊழியர்களை முன்னோக்கி கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்கான கலாச்சாரத்தை நிறுவனத்திற்குள் உருவாக்குவது போன்றவை Great Place to Work நிறுவனத்தினால் பாராட்டுக்குட்பட்டுள்ளது. நிறுவனத்தின் சேவைக் கொள்கையின் மூலம் இனிமையான சேவை சூழலுக்குள் தமது சேவைகளை உகந்த விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்து அதனூடாக சேவை திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் நிலைத்தன்மைக்காக நீண்டகாலம் ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்கள் கடந்த 4 வருடங்கள் முழுவதும் அடைய HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

இந்த மதிப்பீடு தொடர்பாக கருத்து தெரிவித்த HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், ‘தொடர்ச்சியாக 4 வருடம் முழுவதும் A Great Work Place சான்றிதழை தனதாக்கிக் கொண்டு ஆசியாவில் பணிபுரிவதற்கு சிறந்த விசேட நிறுவனங்கள் 25க்குள் இணைந்து கொண்டமை விசேட வெற்றியாகும் என்பதே எனது நம்பிக்கை. இந்த சன்றிதழ் மூலம் ஊழியர்களுக்கு தமது திறமைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நியாயமான சேவைச் சூழலை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்பு மீண்டுமொருமுறை மதிப்பிடப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்கள் உச்ச அளவு சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிறுவன ஊழியர்களுக்கு விசேடமான பணிபுரியும் இடமொன்றை உருவாக்குவதற்காக அதற்கு தேவையான சேவை சூழலை உறுவாக்குவதற்கு முகாமைத்துவத்திடமுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும்.’ என தெரிவித்தார்.

HNB Finance 2017ஆம் ஆண்டில் முன்னணி முதலாளியாக அங்கீகரிக்கப்பட்டதுடன் பணிபுரிவதற்கு சிறந்த இடமாக வெண்கல விருதினைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் 2018ஆம் ஆண்டில் Extra Large Sized Enterprise பிரிவின் கீழ் வெள்ளி பதக்கத்தையும் பெற்றது. இதற்கு மேலதிகமாக 2017ஆம் ஆண்டில் பெருமை மற்றும் ஆலோசனை தொடர்பில் விசேட விருதினையும் HNB Financeக்கு கிடைத்தது. இம்முறை மூன்றாவது தடவையாகவும் பாரிய வர்த்தக பிரிவின் கீழ் விருதொன்றையும் HNB Finance பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருதிற்காக Great Place to Work பிரிவு உட்பட Trust Index® Employee Survey மற்றும் Culture Audit® ஆகிய சுயாதீனமான பல குழுக்களினால் மதிப்பீடு செய்யப்பட்டன. இது முழுக்க முழுக்க ஊழியர்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டதுடன் ஊழியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் விசேட விருதாகும்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

விவேக்கின் அம்மா இறந்துவிட்டதாக பரவிய செய்தி: ட்விட்டரில் அவர் கொடுத்த விளக்கம்

விவேக்கின் அம்மா சென்ற வருடம் இறந்த நிலையில், தற்போது தான் அவர் இறந்தார் என்பது போல புதிதாக

சினிமா துறையையும் வதந்திகளையும் பிரிக்கவே முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பற்றி நாள் தோறும் ஏதாவது ஒரு செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கின்றது. குறிப்பாக நடிகர்களின் சொந்த வாழ்க்கை பற்றி வதந்திகள் அதிக அளவில் பரவுகின்றன.

இந்நிலையில் காமெடி நடிகர் விவேக்கின் தாயார் நேற்று இரவு காலமாகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல் பரப்பி விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் விவேக்கின் தாயார் சென்ற வருடமே இறந்துவிட்டார். ஒரு வருடம் கழித்து தற்போது அவர் இறந்தது போல ஒரு செய்தியை விஷமிகள் சிலர் இணையத்தில் பரப்பி உள்ளனர். இது பற்றி அறியாத பலரும் இந்த தகவலை அதிகம் ஷேர் செய்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் ட்விட்டரில் விவேக்கை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் “நடிகர் விவேக் சார் அவர்களின் தாயார் 2019ல் இறந்துவிட்டார். ஆனால் நேற்று இரவுதான் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பபடுகிறது. என்ன ஏது எப்போ என்று சரியாக தெரியாமல் பல பொய்யான தகவல்கள்பரப்பபடுகிறது. ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று சொன்னால் எதையுமே யோசிக்காமல் ஷேர் பண்றாங்க” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறியுள்ள விவேக் “என் தாயார் இயற்கை எய்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.ஆனால் செய்தி பரப்புவோருக்கு அவர் மேல் அவ்வளவு அலாதி பிரியம் போலும்.இந்த வருடமும் இயற்கை எய்த வைக்கிறார்கள்.போகட்டும் விடுங்கள். For me, my mom still lives with me!!” என தெரிவித்துள்ளார்.

 

பதுளை மாவட்டத்தில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் செந்தில் தொண்டமானுக்கு பாரிய ஆதரவு அலை!!

– மாவட்டம் முழுவதும் 63 தேர்தல் அலுவலகங்கள் அமைப்பு –

பதுளை மாவட்டத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் ஒரேயொரு பலமிகுந்த சிறுபான்மை வேட்பாளரான செந்தில் தொண்டமானுக்கு மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையினர் மத்தியில் அசைக்க முடியாத செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.

பதுளை மாவட்டம் முழுவதும் செந்தில் தொண்டமானுக்காக 63 தேர்தல் காரியாலயங்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அமைத்துள்ளனர். இதுவரை வரலாற்றில் எந்தவொரு மலையக தலைவருக்கும் இந்தளவு செல்வாக்கு பெரும்பான்மை சமூகத்திடமிருந்து கிடைத்திருக்கவில்லை. செந்தில் தொண்டமான்மீது பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டு அசைக்க முடியாத நம்பிக்கையின் எதிரொலியே இந்த ஆதரவு அலை.

பதுளை மாவட்டத்தில் அதிகூடிய விருப்ப வாக்குகளுடன் செந்தில் தொண்டமானை வெற்றிபெற செய்வதற்காக பெரும்பான்மை சமூகமும் இன்று அவருடன் கைகோர்த்துள்ளது. செந்தில் தொண்டமானின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து பயணிப்பதற்கும், ஊவாவில் இனம், மதம் கடந்து சேவை செய்த ஒரே தலைவராக அவர் உள்ளதாலும் மாவட்டம் முழுவதும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தேர்தல் அலுவலகங்களை திறந்துள்ளனர்.

ஏற்கனவே, 50இற்கும் அதிகமான பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் செந்தில் தொண்டமானுடன் கைகோர்த்திருந்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்புத் தொடர்பில் பதுளைவாழ் தமிழ் அரச ஊழியர்களிடம் நடத்தப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில் 80 சதவீதமான வாக்குகள் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன்மூலம் இம்முறை அமைய போகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சுப் பதவியொன்று கிடைப்பதும் ஊர்ஜிதமாகியுள்ளதால் பெரும்பான்மையினர் மத்தியில் செந்தில் தொண்டமானுக்கு அசைக்க முடியாத செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.

தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2745 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2745ஆக உயர்ந்துள்ளது.

பாலித தெவரப்பெருமமீது தாக்குதல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமமீது இன்று (22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம வேகந்தல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டமொன்று தரம்குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அது தொடர்பில்  கண்காணிப்பதற்காக பாலித தெவரப்பெரும இன்று சம்பவ இடத்துக்கு சென்றிருந்தார்.

இதன்போது குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கும், தெவரப்பெருமவுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போதே அவர் தாக்கப்பட்டுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

” இயந்திரத்தால் தாக்கி துப்பாக்கியைகாட்டி மிரட்டினர்.” – என்று பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

‘புதிய பிறப்புச்சான்றிதழில் இனம் வெளிப்படுத்தப்படமாட்டாது’

புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதில் இனம் வெளிப்படுத் தப்படமாட்டாது என்று பதிவாளர் நாயகம் அறி வித்துள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழில் இலங்கையர் என்று மட்டுமே இடம்பெறும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் – தந்தையரின் திருமண விவரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் அனைத்து குடிமக்களின் புதிய பிறப்புச் சான்றிதழ் களில் இலங்கையர் எனக் குறிப்பிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பின்போது ஆள் அடையாளத்தை உறுத்திப்படுத்தும் வகையில் வழங்கப்படும் 12 இலக்கங்களே பிற்காலத்தில் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை காலமும் பிறப்புச் சான்றிதழில் “இலங்கை தமிழர்’ என்றோ அல்லது அது போன்றோ குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருணாகலை தொல்லியல் சம்பவம் – பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு

குருணாகலை புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டிடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று (2020.07.22) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அறிக்கையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1) கட்டிடத்தின் முன்பக்கத்தில் கூரையின் ஒரு பகுதிக்கும், ஜன்னல்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என்பதால் அப்பகுதிகளை தொல்பொருள் ரீதியில் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வாய்ப்புள்ளது.

முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ள பின்பக்கத்திலுள்ள மரத்தாலான விட்டங்கள் மற்றும் செங்கல்கள் உள்ளிட்ட கட்டிட பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. அதனால் இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் விரிவாக
அறிக்கையிடப்பட்டுள்ளதால் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பழைமைவாய்ந்த பகுதியை மீண்டும் மீட்டெடுப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் பழைமை வாய்ந்த கட்டிடம் விரைந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

2) இக்கட்டிடத்தை தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்துதல்

3) குறித்த இடத்தை விரிவாக்கும் திட்டத்தை திருத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கல்

4) இந்த சேதமாக்கலுக்கு பொறுப்புகூற வேண்டிய நிறுவனம் அல்லது நபர்களினால் பாதுகாப்பிற்கு அவசியமான ஏற்பாடுகளை செய்தல்

பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான செயலாளரினால் இந்த குழு நியமிக்கப்பட்டதுடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டீ.ஜீ.குலதுங்க, குருநாகல் மாவட்ட கூடுதல் செயலாளர் ஜீ.ஏ.கித்சிறி, மத்திய கலாசார நிதியத்தின் பதில் அபிவிருத்தி பணிப்பாளர் வாஸ்து நிபுணர் சுமேதா மாதொட்ட புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் பிரதி பணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் பிரசாத் ரணசிங்க ஆகியோர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

புடினை விமர்சிக்கும் ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய ஓவியர் ஒருவர், போலந்து நாட்டில் 'மரணதண்டனை' பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் போலந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். Semyon...

பதுளை பகுதியில் கோர விபத்து: பெண் பலி – இருவர் படுகாயம்

0
பதுளை - தென்னபங்குவ வீதியின் வெலிஹிந்த பகுதியில் உள்ள சரிவான வீதியில், இன்று (16) முச்சக்கர வண்டி ஒன்று பேருந்தை (பஸ்) முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில்...

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

0
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...