பதுளை பூனாகலை, கபரகல பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் நாளைய தினம் (28) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இதற்குரிய நிகழ்வு நடைபெறும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்திருந்தார்.










