களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ பரவல்
களுபோவில பிரதேசத்தில் கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் குறிப்பிட்டனா்.
பாதீட்டை எதிர்க்குமா மைத்திரி அணி?
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
அடுத்தவாரமளவில் நடைபெறவுள்ள அச்சந்திப்பில் தீர்க்கமான சில முடிவுகள் எட்டப்படவுள்ளன.
மைத்திரிமீதும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்மீதும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தொடர் தாக்குதலை...
மேலும் 3 நாடுகளில் ‘ஒமிக்ரொன்’ கொவிட் வைரஸ் திரிபு அடையாளம்
பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள 'ஒமிக்ரொன்' கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வௌிநாட்டவர்களுக்கு தடை விதித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றால் 26 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 560,298 ஆக அதிகரித்துள்ளது.
யாழில் ரயர் கொளுத்திய இருவர் கைது!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொளுத்திய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகர் பகுதியில் வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை டயர்கள் கொளுத்தப்பட்டன. சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் சம்பவ...
‘கிளிநொச்சியில் 113 மாணவர்களுக்கு கொரோனா’
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
அரசிலிருந்து வெளியேறுமா சுதந்திரக்கட்சி? வெளியான புதிய தகவல்
வீண் பேச்சுகளை பேசி நாடாளுமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கி வரும் சிலரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கூறுவதாகவும் அவர்கள் கூறுவதற்காக தமது கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகாது...
அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பரில் விசேட விடுமுறைகள்
அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள்...
வாய் வழியாக வழங்கப்படும் கொவிட் மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவர ஜனாதிபதி ஆலோசனை!
கொவிட் நோயாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் 'மொனுபிரவீர்' என்ற மருந்தை நாட்டுக்கு இறக்குமதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின்போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை...






