பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை!
நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுந்தரலிங்கம் சசிதரன் என்ற குறித்த இளைஞன் கடந்த 3 ஆம் திகதிமுதல்...
சிறைகளை இளைஞர்களால் நிரப்ப முயல்கின்றதா அரசு? சஜித் சீற்றம்
"இந்த நாட்டில் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. 'கோட்டா கோ கம'வில் நிர்மாணிக்கப்பட்ட நூலகத்துடன் தொடர்புடைய இளைஞர்களைக் கைதுசெய்து விசாரிக்கவும் அரசு முயற்சித்துள்ளது. எதிர்வரும் 12...
மேற்குலக ஆதரவை திரட்டவே ரணிலை களமிறக்கினோம் – எஸ்.பி.!
" மேற்குலக நாடுகளுடன் ஶ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சிக்கு, நல்லுறவு கிடையாது, எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திவருகின்றது."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
வடக்கு ஆளுநர் சாரம் கட்டிய சண்டியன்! சிறிதரன் சாட்டையடி!!
நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர் சாரம் கட்டிய சண்டியன்போல் செயற்பட்டுவருகின்றார் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சிறிதரன் எம்.பி., வடக்கு ஆளுநர்மீது...
அடுத்தக்கட்ட சம்பள உயர்வை நோக்கி காங்கிரஸ் தீவிரமாக செயற்படும்!
" தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல 1000 ரூபாய் சம்பளம் என்பது போதுமானதல்ல எனவே மற்றுமொரு சம்பள உயர்வை நோக்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்படும்."
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்...
போராட்டத்தில் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை
இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் ஆர்வலர்கள் மற்றும் பல சாதாரண பிரஜைகளின் பங்குபற்றுதலுடன் இன்றைய பிரதான போராட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சியான சமகி...
காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி
கெக்கிராவ-ஹொரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
57 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது மகனின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு...
க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள்...
கொவிட் தொற்றினால் மேலும் ஆறு பேர் உயிரிழப்பு
நேற்று ஆறு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய , 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், 30 முதல் 59...
நாடாளுமன்றை பாதுகாத்த இராணுவத்துக்கு ஜனாதிபதி பாராட்டு
"வன்முறையாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்து சபையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். நிறைவேற்று அதிகாரத்தை நசுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்து சட்ட சபையை முடக்கிய வன்முறையாளர்களை...












