பாராளுமன்ற குழு கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற குழு கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபன மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் இன்றைய தினம் கோப்...
ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகையில் பெறுமதியான சொத்துக்கள் கொள்ளை குறித்து விசாரணை
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை...
நாவலப்பிட்டிய கதிரேசன் பாடசாலையின் அதிபர் அலுவலகம் உடைப்பு – கலைக்கூடமும் சேதம்
நாவலப்பிட்டிய கதிரேசன் ஆரம்ப பாடசாலையின் அதிபர் , உப அதிபர் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலைக்கூடமொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை வேட்டையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
திருடர்களுக்கு...
அலரிமாளிகையில் பதற்றம் – இரு குழுக்களுக்கிடையில் மோதல்! 10 பேர் காயம்!!
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அலரிமாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இன்று காலை மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காயமடைந்தவர்களில் 10 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்ணொருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது அங்கு பதற்றமான சூழல்...
ஜனாதிபதி கோட்டா நாளை விசேட அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க பறக்க சென்ற பஸில் விமான நிலையத்திலிருந்து விரட்டியடிப்பு
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா பறப்பதற்கு முற்பட்டுள்ளார்.
இதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அவர் இன்று அதிகாலை சென்றிருந்தார்.
பிரபுக்களுக்கான பிரிவு ஊடாக அவர் உள்நுழைந்துள்ளார்.
அவருக்கு...
ஆட்சியை பொறுப்பேற்பது குறித்து அநுர வெளியிட்ட தகவல்!
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43ஆம் படையணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
சந்திப்பின் பின்னர்...
கொழும்பில் சந்திப்புகள் தொடர்கின்றன – 15 இல் கூடுகிறது பாராளுமன்றம்!
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) நடைபெற்றது.
இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள...
‘ஜனாதிபதி நாட்டிலேயே உள்ளார்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார் என தான் முன்னதாக தெரிவித்த கருத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது நான்...
சஜித்தை களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளடங்கலாக பங்காளி கட்சிகளுனுடைய விசேட கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி...












