சுவர் இடிந்து விழுந்து பதுளையில் வீடு சேதம்!
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை அமுனுவெல்பிடிய - வட்டலுவ கொடபதன பகுதியில், மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தமையினால் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது. ...
‘மலையகம்’ குறித்து சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய இயக்குனருடன் ம.ம.மு. இளைஞர் அணி தலைவர் பேச்சு
சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜியருக்கும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவருமான லெட்சுமனார் சஞ்சய்க்கும் இடையிலான சந்திப்பு ஜெனிவாவில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
மலையக மக்கள் மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் – உலக பொருளாதாரம் பாதிப்பு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சண்டை, உலகப் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மந்தமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான சண்டை, பொருளாதார...
மடுல்சீமையில் ஆட்டோ விபத்து – நால்வர் காயம்!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை - மடுல்சிமை வீதியில் அமுனுதோவ கல்லுக்கடைக்கு அருகாமையில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உட்பட அதில் பயணித்த மேலும் இருவர் சிறு காயங்களுக்கு...
டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்குரிய அடிப்படை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் துறையின் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் ஏற்படுத்திக்கொடுக்க...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் – ரஷ்யா எடுத்துள்ள முடிவு!
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் இதுபோன்ற சூழல் உருவானதற்கு அமெரிக்காதான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர...
5 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா
ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின்...
இஸ்ரேலில் இருவரைத் தவிர இலங்கையர் எவருக்கும் பாதிப்பு இல்லை -வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இஸ்ரேலில் காணாமற்போன இருவரைத் தவிர வேறு எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை வௌிநாட்டு...
ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் கிரிக்கெட்
2028ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் இணைக்க அனுமதியளித்துள்ளது.
சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இம்மாதம் நிகழவுள்ள இரண்டு கிரகணங்கள்..! இலங்கையில் தென்படுமா..?
இம்மாதம் இரண்டு கிரணங்கள் நிகழவுள்ளன. அதில் சூரிய கிரகணம் இலங்கைக்கு தென்படாத நிலையில், சந்திர கிரகணம் மட்டும் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன...



