Home Blog Page 3522

தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடி அதிகரிப்பு – தலவாக்கலையிலும் போராட்டம்

தலவாக்கலை ட்றூப் மற்றும் கொரின் தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 ற்கு மேற்ப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பேதமன்றி ( 22.4.2021) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள அதிகரிப்பை தொடர்ந்து தோட்ட தொழிலாளர் ஒருவர் நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்காவிட்டால் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படமாட்டாது எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வழங்கப்பட்டால் 50 கிலோ தேயிலை கொழுந்து பறித்தால் மட்டுமே அன்றைக்கு பெயர் வழங்கப்படும் எனவும் தோட்ட நிர்வாகம் தெரிவித்ததையடுத்து.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து ட்றூப் மற்றும் கொரின் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட தொழிற்ச்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேல் அத்தோட்ட அதிகாரியுடன் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுக்கொடுத்ததையடுத்து தொழிலாளர்கள் தங்களது பணிக்கு திரும்பினர்.

இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேலிடம் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்ததாவது ,

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை செய்து வருகின்றது. தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கும் தேயிலை கொழுந்தின் நிறைக்கும் சம்பந்தம் கிடையாது.

அவர்களுக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 18 கிலோ கொழுந்து பறித்தால் சம்பளம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களை குறைக்க இயலாது. வீணான கெடுபிடிகளை தொழிலாளர்களுக்கு விதிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துனைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹிட்லரின் பாணியில் எதிரணி தலைவர்களை வேட்டையாட சூழ்ச்சி

ஹிட்லர் ஆட்சியின்போது, தமது அரசியல் எதிரிகளை ஒரே இரவில் இல்லாதொழிப்பதற்கு ஹிட்லர் நடவடிக்கை எடுத்தார். அதேபோன்றதொரு முயற்சிதான் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கை ஊடாகவும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைமீதான சபைஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஹிட்லர் ஆட்சியின்போது படைப்பிரிவொன்று இருந்தது. அப்படைப்பிரிவு ஊடாக தமது அரசியல் எதிரிகளை ஒரே இரவில் ஒழித்துக்கட்டுவதற்கு ஹிட்லர் நடவடிக்கை எடுத்தார். அதேபோன்றதொரு முயற்சிதான் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கை ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்கும், அரசியல் ரீதியில் படுகொலை செய்வதற்கும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கை ஊடாக சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது என்பது மிகத்தெளிவு. ஹிட்லர் அன்று ஒரு இரவில் செய்ததை, இந்த அரசு அறிக்கை ஊடாக செய்வதற்கு முற்பட்டுள்ளது.

இது அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டக்குழு அல்ல. எனவே, அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டுவதற்கான குழு என்ற பெயரே அதற்கு பொருத்தமானதாக இருக்கும். குடியுரிமையை பறிப்பதன் ஊடாக அனுர குமார திஸாநாயக்க போன்றவர்களின் அரசியல் பயணத்தை தடுக்கமுடியாது. எனினும், அவ்வாறானதொரு முயற்சி எடுக்கப்படுகின்றமையானது ஜனநாயகத்துக்கு விழும் மரண அடியாகும்.

சம்பந்தன் என்பவரும் சிறந்த அரசியல் தலைவர். அவரின் குடியுரிமையை பறித்து வடக்குக்கு வழங்கவுள்ள செய்திதான் என்ன? ஜனநாயக வழிமுறை சரியில்லை, மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்பதையா இதன் ஊடாக அரசு கூறமுற்படுகின்றது?

சுமந்திரன் என்பவர் பிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் செய்யும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஒருமித்த இலங்கையை நம்பும் சுமந்திரனின் குடியுரிமையை பறித்து, மீண்டுமொரு பிரபாகரன் உருவாக வேண்டும் என்ற செய்தியையா அரசு வழங்க முற்படுகின்றது. ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் மக்களின் தலைவர். ஜனநாயகத்தை விரும்பும் நடுநிலை அரசியல் வாதி. எனவே, அவரின் குடியுரிமையை பறித்து சஹ்ரான்களை உருவாக்குவதற்கு அரசு முற்படுகின்றதா?

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை பல தடவைகள் வகித்துள்ளார். அவரின் குடியுரிமையை பறிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சரத் பொன்சேகாவின் குடியுரிமை ஏற்கனவே பறிக்கப்பட்ட நிலையில் மீண்டுமொருமுறை அம்முயற்சி எடுக்கப்படவுள்ளது. சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர ஆகியோரும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ” – என்றார்.

அரண்மனை 3 பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விவேக் – வைரலாகும் புகைப்படம்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

‘அரண்மனை’ பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுந்தர் சி, ஆர்யா, விவேக், ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோரது தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் இன்று 520 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் இன்று 520 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,570 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து 93,884 பேர் குணமடைந்துள்ளனர். 634 பேர் உயிரிழந்துள்ளனர்.4052 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

‘தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க நிர்வாகம் இணக்கம்’

பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்,  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று கொட்டகலை Clf வளாகத்தில் இடம்பெற்றது.

தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை அளவை தோட்ட முகாமையாளருடனும் குறித்த தோட்ட தலைவர்களுடனும் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மேலதிக கொழுந்து பறித்தமைக்கான கொடுப்பனவுளை வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதன்போது பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கம் இ.தொ.காவிற்கு எழுத்து மூலம் அறிவித்து கொடுப்பனவுகளை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு இக்கலந்துரையாடலில் பொகந்தலாவ பெருந்தோட்ட யாக்கங்களின் தோட்டங்களில் காவலாளிகள், பிள்ளை பராமரிப்பு நிலையங்களின் உதவியாளர்களின் தற்காலிக பணி நிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இவ்விடயம் தொடர்பாக பரிசீலனை செய்து ஒருவாரத்தில் தீர்வு பெற்று தருவதாக பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் உறுதியளித்தனர்.

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், இ.தொ.காவின் வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பாளர் பரத் அருள்சாமி, காரியாலய உத்தியோகஸ்தர்கள், பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் மற்றும் தோட்ட தலைவர், தலைவிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு முடக்கப்பட்டது

குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மத்திய வங்கியின் ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்சவால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

ஆண்டறிக்கையின்படி, மக்கள் வங்கியின் வரிக்கு முந்தைய இலாபம் ரூபாய் 21 பில்லியனும், வரிக்குப் பிந்தைய இலாபம் ரூபாய் 14 பில்லியனும் ஆகும்.

2020 ஆம் ஆண்டிற்கான மக்கள் வங்கியின் பங்கு இலாபம் ரூபாய் 3.5 பில்லியன் எனவும், அரச வரி ரூபாய் 14 பில்லியன் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிதிக் கொள்கையைப் பின்பற்றி மக்கள் வங்கி இந்த ஆண்டில் 25 பில்லியன் ரூபாய் இலாபம் மற்றும் ரூபாய் 15 பில்லியனுக்கும் அதிகமான வரி வருவாயை எதிர்பார்ப்பதுடன், எதிர்பார்க்கும் பங்கு இலாபம் 3 பில்லியனாகும்.

குறித்த நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச, பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் கொடிதுவக்கு, நிதி அதிகாரி அசாம் அஹமட் மற்றும் விநியோக நிறைவேற்று அதிகாரி நாலக விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொத்மலையில் குளவிக்கொட்டு – 20 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!

குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 20 தோட்டத் தொழிலாளர்கள் சிகிச்சைகளுக்காக கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையே இன்று முற்பகல் குளவிகள் சரமாரியாக கொட்டியுள்ளன.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 20 ஆண் தோட்டத் தொழிலாளர்களும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் 04 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

க.கிசாந்தன்

தந்தை செலுத்திய ஆட்டோவில் மோதுண்டு ஒன்றரை வயது குழந்தை பலி!

தந்தை செலுத்திய ஆட்டோவில் சிக்குண்ட ஒன்றரை வயது நிரம்பிய ஆண்குழந்தையொன்று பலியான சம்பவம் பிபிலைப் பகுதியில் இன்று 22-04-2021ல் இடம்பெற்றுள்ளது.

பிபிலைப் பகுதியின் நன்னபுராவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.எம். சேனுல சேகான் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையே, பலியானதாகும்.

தகப்பன் செலுத்திய ஆட்டோ சில்லில், மேற்படி குழந்தை சிக்குண்டதையடுத்து, உடனடியாக அக்குழந்தை பிபிலை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், அக்குழந்தை ஏற்கனவே, இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மெதகமை பொலிசார், ஆட்டோவை செலுத்திய பலியான குழந்தையின் தகப்பனைக் கைது செய்துள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...