Home Blog Page 3523

நாடாளுமன்றில் அமளி – விசாரணைக்கு 7 பேரடங்கிய குழு!

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும். அதற்காக 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போது எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவர முயன்ற ஆபத்தான பொருட்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரினார். அத்துடன் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

இதனையடுத்தே சபாநாயகர் மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

அதேவேளை, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதம் தொடர்பில் சபாநாயகர் பக்கச்சார்பாக முடிவெடுத்துள்ளார் என லக் ஸ்மன் கிரியல்ல எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

பல்கலைக்கழகங்கள் மீள எப்போது திறக்கப்படும்?

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுவது மேலும் இருவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது – என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஏப்ரல் 27 ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பரவலைக்கருத்திற்கொண்டு அந்த முடிவு இரு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

மே தின நிகழ்வுகளுக்கு தடை – பின்னணியில் அரச சூழ்ச்சியா?

அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல்நிலை காரணமாகவே மே தின நிகழ்வுகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரச கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிராகரித்துள்ளது.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இம்முறை மேதினக் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரச தரப்புக்குள் ஏற்பட்டுள்ள மோதலை தடுப்பதற்கும், அரசியல் குழப்பங்களை மறைப்பதற்காகவுமே மே தினத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இது தொடர்பில் வினவியபோதே பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

” கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேர்தல்கூட பிற்போடப்பட்டது. எனவே, மே தினம் குறித்து சுகாதார தரப்பினரே முடிவெடுத்துள்ளனர். கட்சி என்ற அடிப்படையில் மே தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நாமும் தயார். ஆனாலும் அரசு என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏனெனில் அண்டை நாடான இந்தியாவில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது.” – என்றார்.

“குன்றிலிருந்து கோட்டைக்கு..” நூலின் அறிமுக விழா 25 ஆம் திகதி பதுளையில்

மலையகத்தின் மூத்த கல்விமான் எம்.வாமதேவன் எழுதிய “குன்றிலிருந்து கோட்டைக்கு..” நூலின் அறிமுக விழா பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சரஸ்வதி தேசிய கல்லூரியின் அதிபரும், கலை இலக்கிய வட்டத்தின் உப தலைவருமான கே.திருலோகசங்கர் நிகழ்விற்கு தலைமை தாங்க உள்ளார்.

நூலின் ஆய்வுரையை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் மார்கண்டன் ரூபவதனன் ஆற்றவுள்ளார். பண்டாரவளை நகர சபையின் ஆணையாளர் த.கஜேந்திரகுமார், ஹாலிஎல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி.இரா.சுகந்தினி, பண்டாரவளை வலயக் கல்விக் காரியாலயத்தின் ஆசிரிய ஆலோசகர் என். மனோகரன் ஆகியோர் நூல் தொடர்பான கருத்துரைகளை வழங்க உள்ளனர்.

கலை இலக்கிய வட்டத் தலைவர் வை.தேவராஜா வாழ்த்துரையையும், செயலாளர் ஆ.புவியரசன் நன்றி உரையையும் வழங்க உள்ளதோடு ஆசிரியர் இரா.ராஜீவ்காந்தி நிகழ்வுகளை தொகுத்து வழங்க உள்ளார். நிகழ்வில் சிறப்பு பிரதிகள் வழங்கல், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான இலவச நூல் பகிர்வு என்பன இடம்பெறவுள்ளன.

கொரோனா பரவல் – பாடசாலைகளை மூடும் தீர்மானம் இல்லை!

நாட்டில் தற்போது நிலவும் கொவிட்19 வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட்19 தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் – சுற்றுலா செல்ல வேண்டாம்

” தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிலர் நடந்துகொண்டதால் அடுத்த ஒரு மாத காலப்பகுதி என்பது தீர்க்கமானது.” – என்று கொரோனா வைரஸ் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல், பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதை காணமுடிந்தது. இதன் தாக்கம் இன்னும் இரு வாரமளவிலேயே தெரியக்கூடியதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. எனவே, அடுத்துவரும் 3 வாரப்பகுதி அல்லது மாதம் என்பது எமக்கு மிக முக்கியமான காலப்பகுதியாகும்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

‘அரசியலில் இருந்து ஓய்வு பெறுங்கள்’ – ராதாவுக்கு இ.தொ.கா. இளைஞர் அணி அறிவுரை

வாய் சொல்லிலும் இளைஞர் யுவதிகளை தாக்கியும் அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ள நிலைமை கவலைக்கிடமானது . வாய் சொல்லில் அரசியல் செய்யாது தனக்கு வாக்களித்த மக்களுக்கு களப்பணியில் தனது அரசியல் முதிர்ச்சியை காட்டவும்  – என்று  இ.தொ.கா இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

” மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் பிறந்த தினத்தையொட்டி அக்கட்சியின் இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இளைஞர் மாநாடு நிகழ்வில் மலையகத்தின் இளைய தலைமுறை அரசியல்வாதிகளை விமர்சித்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் கண்டனத்துக்குரியது .

இக்கருத்துக்கள் கட்சி பேதமின்றி இன்றைய இளம் தலைமுறை அரசியல்வாதிகளை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டிற்கு நிகராகவுள்ளது. அரசியல் முதிர்ச்சி கொண்ட ஒருவரால் இத்தகைய கருத்துக்கள் மற்றும் உறைபதங்கள் ஒரு இளைஞர் மாநாட்டில் பிரயோகிக்கப்பட்டமை ஏற்றுகொள்ளக்கூடிய விடையமல்ல .

பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஸ்ணன்  தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு நிகழ்வை கூட அவரால் செவ்வனே ஒழுங்கமைத்துகொள்ள முடியாதிருந்தமை அன்றைய தினம் பெரும் விளம்பரத்துக்கு பின் இளைஞர் மாநாட்டு மேடைக்கு சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் வருகையின்மை உறுதிசெய்துள்ளது .

மேலும் ம.ம.மு ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் ஜனன தினத்தையொட்டி இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது அவரின் எத்தனையாவது ஜனன தினம் என்று கூட தெரியாது பிழையாக நினைவு கூர்ந்ததுக்கு காரணம் அவரின் வயது காரணமாக வந்த மறதியா என்று நினைக்க தோன்றுகிறது. அது அவ்வாராயின் அவர் அரசியலில் இருந்து உடன் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சாலச்சிறந்தது.

மேலும் “வெத்து வேட்டு” யாரென்ற கேள்விக்கான பதிலை மக்கள் வெகுவிரைவில் வழங்குவர்.

வாய் சொல்லிலும் இளைஞர் யுவதிகளை தாக்கியும் அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைக்கு பா உ ராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ள நிலைமை கவலைக்கிடமானது .
வாய் சொல்லில் அரசியல் செய்யாது தனக்கு வாக்களித்த மக்களுக்கு களப்பணியில் தனது அரசியல் முதிர்ச்சியை காட்டவும் .

அத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணி ஓரங்கட்டபட்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் தஞ்சம் புகுந்துக்கொள்ளவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அவர்களை கட்சியை விட்டு நீக்கியபோதும் கூட தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான தலைவர்களிடம் கரிசணை பெறவேண்டும் என  ஆளும் கட்சியையும் மலையகத்தின் இளம் அரசியல்வாதிகளை விமர்சிப்பதிலுமே பா உ ராதாகிருஸ்ணின் அவர்களின் அரசியல் முதிர்ச்சி புலப்படுகின்றது .” – என்றார்.

‘பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்கும்’

பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை தேவைக்கேற்ப அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வேலுகுமார் எம்.பியால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கட்டம் கட்டமாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

தேவையான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களின் அடிப்படையில் பெருந்தோட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

494 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் பொறுப்பேற்கப்படவுள்ளதாகவும் அவற்றுக்கு தேவையான மனித வளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

அரசியல் நிருபராக அவதாரம் எடுக்கும் ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், அடுத்ததாக அரசியல் நிருபராக களமிறங்க இருக்கிறார்.

பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது.

தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில் அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. சென்ற வருட இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் இருப்பதால் சல்லாரின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை’ – நடிகை யோசனை

இந்தியாவில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் வர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெரும் சிக்கலாக மாறி வரும் நிலையில் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்நிலையில் சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் தொகை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் ‘இந்தியாவில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்’ என கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தை நக்கல் செய்யும் விதமாக பதிவிட்ட காமெடி நடிகை சலோனி கவுர் ‘கங்கனா குடும்பத்திலும் ஒரு சகோதரர், சகோதரி என மூன்று பேர் மொத்தம் உள்ளனர்’ என சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள கங்கனா தாத்தா காலத்தில் பலர் 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர்.

அப்போது இருந்தது போலவே இப்போதும் வாழ முடியாது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவை போல கடுமையான சட்டங்கள் தேவை’ என தெரிவித்துள்ளார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...