நாட்டை மீட்க ரணில் மீண்டும் வருவார்: ராஜித நம்பிக்கை!
“2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி ஆவார். நாட்டுக்காக அவர் சவாலை ஏற்பார். வலுக்கட்டாயமாகவேனும் நாம் அவரை அழைத்துவருவோம்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில்...
பாதுகாப்புச் செயலர், சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் FU Xiao, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு...
செம்மணியில் இதுவரை 296 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, நேற்று வெள்ளிக்கிழமை 3 சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி...
“ஒரு வருடத்திற்குள் 86 வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்த நடவடிக்கை”
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அனைத்து...
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுங்க அமைப்பு பாராட்டு!
உலக சுங்க அமைப்பின் ஊழல் ஒழிப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் திட்டத்தை செயற்படுத்தும் ஆண்ட்ரியா ஹாம்ப்டன் (Andrea Hampton) தலைமையிலான, அந்த அமைப்பின் நேர்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உபகுழுவின் மூவர் அடங்கிய பிரதிநிதிகள்...
இனி அரசியலுக்குள் வரவேமாட்டேன்!
தான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எவ்வளவு கோரிக்கைகள் வந்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என கேள்வி...
முதியோர் இல்ல தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டவேளை...
ஐ.தே.கவின் அடுத்த தலைவரா? ஹர்ஷ டி சில்வா கூறுவது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது பற்றி நேற்றிரவு ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்...













