பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு தெரியப்படுத்தினார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை பதில் ஜனாதிபதியாக பிரதமர் அறிவித்துள்ளார்...
பிரதமர் அலுவலகம் முற்றுகை – கொழும்பின் தற்போதைய நிலைவரம்
மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று உத்தரவிட்டார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவோரை...
கண்டியில் கடவுச்சீட்டு மோசடி – மாபியாக்கள் கைது!
கண்டியில் கடவுச்சீட்டு பெற வரும் இளைஞர்களுக்கு ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து 50,000 ரூபா வரை பணம் பெற்றதாகக் கூறப்படும்...
நோர்வூட்டில் குளவிக்கொட்டு – 11 தொழிலாளர்கள் பாதிப்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலவத்தை தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோர்வூட், தண்டுகல தோட்டத்தில் நேற்று மாலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவேளையிலேயே...
மீண்டும் ஊரடங்கு அமுல்!
மேல் மாகாணத்தில் உடடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும் கைது...
போராட்டக்களத்தில் மோதல் – நால்வர் காயம்
காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அலரிமாளிகை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின்போது 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் பற்றாக்குறையால் இரத்தினக்கல் வியாபாரம் முடக்கம்
பேருவளை பகுதியிலிருந்து இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி, நிவிதித்திகலை, பலாங்கொடை, பெல்மதுளை, கஹவத்தை போன்ற பிரதேசங்களுக்கு சென்ற இரத்தினக் கல் வர்த்தகர்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத...
இந்திய மத்திய வங்கியிடமும் கடன் கேட்கிறது இலங்கை
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு பில்லியன் டொலரை பரிமாற்றம் செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் டொலரைகடனுதவியாக பெற்றுக்கொள்வதற்கும்...
‘இராஜினமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை’ – சபாநாயகர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எனினும், இன்று மாலைக்குள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜுலை 13...
ராஜபக்சக்கள் வெளியேற இந்தியா உதவியதா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் இந்திய...











