நம்பிக்கையில்லாப் பிரேரணை மதில்மேல் பூனையாக சு.க.!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
சீரற்ற காலநிலையால் ஐ.தே.கவின் மாநாடு ஒத்திவைப்பு
சீரற்ற காலநிலையால் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
கட்சி அமைப்பாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கமையவே இந்த முடிவை கட்சியின் நிர்வாகக்குழு எடுத்துள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக்...
இன்றும் மழை பெய்யும் – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு – 26 வீடுகள் சேதம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவால் 26...
இலங்கையில் ஆபத்தில் இருக்கும் மக்கள்- கணக்கெடுப்பில் வெளியான தகவல்
நாட்டின் மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் கல்வி, சுகாதாரம், பேரிடர் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றில் ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டமும், ஒக்ஸ்போர்ட் வறுமை...
விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்த சுற்றுலா பயணி
வெலிகம, கும்பல்கம குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(2) பிற்பகல் இரு...
400 வகையான மருந்துகள் மருத்துவமனைகளுக்கு விநியோகம்
400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...
62,000 டெங்கு நோயாளர்கள் பதிவு
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு...
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?
இம்முறை விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
விலை சூத்திரத்தின் படி, நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன்...
மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் புறக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ்...
பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் காயம்
மாவனல்லை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (03) காலை மாவனெல்லை எருவ்பொல வீதியின் எத்தமிட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்...







